472 அலைவெண்மானிகள், மின்திறன்
472 அலைவெண்மானிகள், மின்திறன் தகடுகளால் அடுக்கிச் செய்யப்பட்ட இரும்புச் சட்ட கத்தின் முனையில் சுற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்ட கத்தில் நன்கு பொருத்தப்பட்ட குறிமுள் உள்ள ஓர் இயங்கு சுருள் அமைந்துள்ளது. இயங்கு சுருளின் ஈறுகள் (terminals) தகுந்த கொள்ளளவுள்ள கொண்மி C யுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் இயங்கும் கோட்பாடு விளக்கப்படங்கள் 1(ஆ), 1 (இ), 1 (ஈ) ஆகியவற்றில் காட்டப்பட்டுள் ளன. [ என்பது காந்தப்படுத்தும் சுருளில் பாயும் மின்னோட்டத்தின் அளவு. என்பது இரும்புச் சட் டகத்தின் பெருக்கு (flux). நீ முதலில் II என்ற மின் னோட்டத்துடன் ஒரே தறுவாயில் (in phase) இருப் பதாகக் கொள்ளப்படுகிறது. இது இயங்கு சுருளில் தூண்டப்பட்ட மின்னழுத்தம் வீக்கு 90° தறுவாய் அளவு பிந்தலில் (lag) எல்லா நிலையிலிருக்கும். என்பது இயங்கு சுருளில் பாயும் மின்னோட்டம். இப்போது விளக்கப்படம் 1 (ஆ)வில் இயங்கு சுருள் மின்சுற்றுவழி மொத்தத்தில் தூண்டத்தன்மை inductive) உள்ளதாகக் கொள்ளப்படுவதால் அதில் பாயும் மின்னோட்டம் 1 தூண்டப்பட்ட மின்னழுத் தம் ச க்குப் பிந்தலில் (lag) இருக்கும். இயங்கு சுரு ளில் செயல்படும் திருக்கம் I. i. Cos (90+∞) என்ற மதிப்புக்கு நேர்ப்பொருத்தத்தில் இருக்கும். விளக் கப்படம் 1 (இ) இல் இயங்கு சுருள் மின்சுற்றுவழி மொத்தத்தில் கொண்மத் (capactive) தன்மை உள்ள தாகக் கொள்ளப்படுவதால் அதில் செல்லும் மின் னோட்டம் i தூண்டப்பட்ட மின்னழுத்தம் e க்கு முந்தலில் (lead) இருக்கும். இதில் உண்டாகும் திருக் கம் 1. i. Cos (90-B) மதிப்புக்கு நேர்ப்பொருத்தத் தில் இருக்கும். மேலும் இந்தத் திருக்கம், விளக்கப் படம் 1 (ஆ)வில் குறிப்பிடப்பட்டுள்ள திசைக்கு எதிர்த்திசையில் இருக்கும். விளக்கப்படம் 1 (ஈ)இல் தூண்டத் தன்மையும் கொண்மத்தன்மையும் சமமாக வுள்ளதால் iயும் யும் ஒரே தறுவாயில் இருக்கும். இந்த நிலையில் இயங்கு சுருளில் உண்டாகும் திருக் கம் 1. i. Cos 90 ஆகும். Cos 90இன் மதிப்பு சுழிக்குச் சமமாதலால் திருக்கம் சுழி ஆகிறது என் பது தெளிவு. I wC 1 2πfC இயக்கம். குறிப்பிட்ட அலைவெண்ணுக்குக் (f) கொண்ம எதிர்வினைப்பு அல்லது நிலையானது.இயங்கு சுருள் சட்டகத்தில் அமையும் நிலைக்குத் தக்கவாறு தூண்ட எதிர்வினைப்பு அமை யும். இயங்கு சுருள் காந்தப் படுத்தும் சுருளுக்கு அரு கில் செல்லச்செல்லத் தூண்டல் தன்மை கூடும். ஆகும் வரை காந்தப்படுத்தும் சுருள் நோக்கி இயங்குசுருள் இழுக்கப்படுகிறது. அதாவது, இயங்கு சுருளில் திருக்கம் சுழிநிலை அடையும் வரை L 1 WC அது காந்தப் படுத்தும் சுருள் நோக்கி இழுக்கப்படு கிறது. அலைவெண் இயல்பு மதிப்பில் இருக்கும்போது இயங்குசுருள் சராசரி இருப்பு நிலையை அடையும் வகையில் கொண்மிC இன் மதிப்புதேர்ந்தெடுக்கப்படு கிறது. அலைவெண் கூடும்போது கொண்ம எதிர் வினைப்பு குறைவதால் இயங்குசுருள் சட்ட 1 wC I கத்திலிருந்து விலகி அதன் எதிர்வினைப்பு L, WC க்குச் சமமாக வரும் வரை விலகுகிறது; அதேபோல் அலைவெண் குறையும்போது சட்டகத்தை நோக்கி நெருங்குகிறது. இந்த வகை அளவுக் கருவியில் இயங்குசுருளில் எதிர்வினைப்பு சட்டகத்தின் நிலைக்கேற்ப மெதுவாக மாறுவதால் துல்லியமான அளவுகளைப் பெறமுடி கிறது. வெஸ்ட்டன் (Weston) அலைவெண்மானி. இது அலைவெண் மாறும்போது இரண்டு இணைநிலை மின்சுற்றுவழிகளில் ( ஒன்று தூண்ட (inductive) முள்ளது; மற்றது தூண்டமற்றது (noninductive}) ஏற்படும் மின்னோட்டப் பங்கீடு மாற்றத்திற் கேற்பச் செயல்படும் இயங்கு இரும்பு அளவி. 1 LA litle 8 2 www RB 3 L Ra 48 படம் 2. வெஸ்ட்டன் அலைவெண்மானி 1) தாழ் அலைவெண், 2) உயர் அலைவெண், 3) ஈறு, 4) தேனிரும்பு ஊசி. மின்னி இதன் வடிவமைப்பும் அதனுள் உள்ள ணைப்புகளும் விளக்கப்படம் 2இல் காண்பிக்கப் பட்டுள்ளன. இங்கு இரண்டு நிலையான சுருள்கள் சம அளவில் உள்ளன. இந்த இரு சுருள்களும் அவற்