பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/506

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476 அவசரகால மருத்துவச்‌ சிகிச்சை

476 அவசரகால மருத்துவச் சிகிச்சை பரப்பி, நம் வாயால் பலமாக ஊதி வாய்க்கு வாய் சுவாசத்தின் மூலம் மார்பை அசைத்து இதயத்தை இயக்கலாம். இம்முயற்சி வெற்றி பெறா விட்டால், மின் - இசைவற்ற துடிப்பு நீக்கி(de-fibrillator) யாலோ, இயக்க முடுக்கி (pace maker) யாலோ, இயக்கத்தை மீட்கலாம். அப்படியும் முடியாவிட்டால், இதயத் தசையில் அட்ரினலின், எப்பிநெபிரின் (epinephrine) கால்சியம் குளோரைடு (calcium chloride) ஆகிய மருந்துகளை ஏற்றிப் பார்க்கலாம். சைவோக்கைன் (Xylocaine), லைடோக்கைன் (Lidocaine), சோடியம் பைக்கார்பனேட்டு (Sodium- bi - Carbonate), புரோக்கேயினமைடு (Procainamide போன்ற மருந்துகளைச் சிரைவழி ஏற்ற வேண்டும். இதயத்தசைத் திசுச் சிதைவு நோய் (Myocardial infarction). இதயத்தின் தசைகளிலுள்ள திசுக்கள் இரத்தப் பற்றாக்குறையால் இறக்கின்றன. இதயம் ஒரு தசைப் பிண்டத்தால் (muscle mass) ஆனது, சில திசுக்கள் இறந்தாலே, அதன் செயல் பாதிக்கப் படும். நோய் அறிகுறிகள். இதய வலி, மூச்சுத் திணறல் அதிர்ச்சி, இதயத் தளர்வு (cardiac failure), குத்தல், இதய அழுக்கம், மார்பகப் பாரம், எரிச்சல், தோள், கைகளை நோக்கிப் பல திசைகளில் பரவும் வலி, தாங்கொண்ணா வலி, வியர்வை, வாந்தி, இன்னபிற. இந்நோய் பெரும்பாலும் நடுத்தர வயதினர் களையும், முதியவர்களையும் தாக்கும். சிகிச்சை. மனதிற்கும், உடலுக்கும் ஓய்வு கொடுக்க நோயாளியை உடனே படுக்க வைக்க வேண்டும். வலியைப் போக்க மார்ஃபின் Morphine) அல்லது பெத்தடின் (Pethidine), மெத்த டோன் (Methadone), ஹீராயின் ஆகிய மருந்துகளை சிரைவழியே தரவேண்டும். ஆக்சிஜன் வேண்டும். கொடுக்க இரத்த உறைவைத் தடுக்க ஹெப்பாரின் (Heparine) சிரைவழி அல்லது கூமரின் (Coumarine) வகை மருந்தை வாய் வழி தரலாம். மருத்துவமனையில் சேர்க்கவேண்டும். உடனடியாக பெரிபெரி இதயம் (Beri Beri Heart), உயிர்ச்சத்து பி-1, பற்றாக்குறையால் ஏற்படும் இதய நோயால், இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளில் மிகப்பலர் பாதிக்கப்படுகின்றனர். இது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். நோய்க்குறிகள். பலவீனம், களைப்பு, இதயப் படபடப்பு, மூச்சுத் திணறல், தோல் சூடாதல் இதய வீக்கம், இதய மேலுறை வீக்கம், திடீர் என இதய நிறுத்தம் ஆகிய குறிகள் காணப்படும். சிகிச்சை. உடனடியாக இதய வெளியுறையின் கீழ் உள்ள நீரை மார்புச் சுவர் மூலம் ஊசியால் உறிஞ்சி வெளியேற்ற வேண்டும். பி-1100 மி.கி, சிரை மூலம் சில நாட்களுக்குத் தரவேண்டும். நிறைய "பி" உயிர்ச்சத்துகள், புரதம் நிறைந்த உணவு ஆகியவை தரப்பட வேண்டும். . நுரையீரல் தமனி உள்வெறிகை (pulmonary embo- lism).மூச்சறைக்கு வரும் இரத்தக் குழாய்கள், உறைந்த இரத்தக் கட்டி, தமனி இரத்த உறைவி, காற்று, அயற்பொருள் ஊடுருவல் ஆகியவற்றால் அடைக்கப் பட்டு இரத்த ஓட்டம் தடைப்படும். இந்நிலை உயி ருக்கே ஆபத்தை விளைவிக்கும். அறிகுறிகள். இருமல், மூச்சுத் திணறல், பெரும் பாலும் வலப்புற இதய வலி, அதிர்ச்சி (shock) ஆகியவை ஏற்படலாம். . நோய்முதல் நாடல், எலும்பு முறிவு, அறுவைச் சிகிச்சை ஆகியவற்றுக்காக நீண்ட நாள் படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கு மயக்கம், இரத்த அழுத் தக் குறைவு, மூச்சு வாங்கல் ஆகியவை திடீர் எனத் தோன்றினால், அந்நோய் உள்ளெறிகையாக இருக்க லாம். சிகிச்சை. படுக்கையில் ஒரே நிலையில் படுக்க விடாமல், புரட்டிவிட்டுப் படுக்க வைத்தல், நுரை யீரல்களுக்குப் பயிற்சி, "மார்ஃபின்" மருந்துகளைத் தவிர்த்தல், உடல் நீர் வற்றாமல் பார்த்துக் கொள்ளு தல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். இரத்த உறைவைத் தடுக்கும் மருந்துகள் (anti coagulant drugs), இரத்தக் கட்டித் தடுப்பு மருந்து (fibrinolytic) ஆகியன தரப்படவேண்டும். அறுவைச் சிகிச்சையால் உள்ளெறிகை நீக்கல் (embolectomy) செய்யலாம். மருந்துகள். ஹெப்பாரின் (beparin),இரத்த உறைவு நீக்கிகள் (thrombolytic or fibrinolytic), இரத்த நாள் அழுத்திகள் (vaso pressors), டிஜிட்டாலிஸ் (digitalis), அய்சோபிரினலின் (isoprenaline), மூச்சுத் தூண்டிகள் (respiratory stimulants), நுண்ணுயிர் கொல்லிகள் (Antibiotics), அட்ரோபின் (atropine) 1/100, சிரையைக் கட்டுதல் (venous ligation) ஆகி யவை பயன்தரும். தன்னியலான நுரையீரல் உறைக்காற்று (spontane- ous pneumothorax). ஒன்றோடொன்று ஒட்டியிருக்கும்