பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/508

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478 அவசரகால மருத்துவச்‌ சிகிச்சை

478 அவசரகால மருத்துவச் சிகிச்சை உடல் நீர் நிலையைச் சீர் செய்து அட்ரீனலினைச் சொட்டு முறையில் தர வேண்டும். அமினோஃபிலினை சிரை வழி கொடுக்க வேண்டும். ஆபத்து நீங்கியதும் முறையான மருத்துவம் அளிக்கலாம். கார்டிசோன் ஊசி (cortisone)யும் சிரைவழி, சோடியம் கார்பனேட்டும் கொடுக்கப்பட வேண்டும். உணவுப்பாதையில் இரத்தக் கசிவு பைக் நோய்க்காரணம். குடல் புண், இரைப்பைப் புற்று நோய், குடல் காய்ச்சல், (enteric fever), சீதபேதி (dysentery), குடல் புற்று நோய், கணையப் புற்று நோய், வயிறு, முன்சிறுகுடல் அரிப்புகள் ஆகிய வற்றால் இது ஏற்படும். நோய்க்குறிகள். திடீர் இரத்த வாந்தி, மலம் கழிக்கும் உணர்வு, மயக்கம், மற்றும் நோய்க் கொடுமைகள் ஆகியன இரத்த இழப்பைப் பொறுத்து அதிகரிக்கும். சிகிச்சை, உடனே படுக்கையில் படுக்க வைக்க வேண்டும். ஃபீனோபார்பிட்டோன் 100 மி.கி. கொடுக்க வேண்டும். இரத்தம் அல்லது ஆக்சிஜன் (plasma or dextran 500 ml.) கொடுக்க வேண்டும். வாந்தியை நிறுத்த ஸ்டிமெட்டில் (stemetil) 5 மி.கி. அமில எதிர்ப்பிகள் (antacids) உயிர்ச்சத்து கே-10 மி.கி. சிரைமூலம் கொடுத்துச் சிகிச்சையளிக்க வேண்டும். இரத்தக் கசிவுக்குக் காரணத்தை அறிந்து அதற்கான சிகிச்சை செய்ய வேண்டும். ஈரல் நோயாலான ஆழ்ந்த மயக்கநிலை (Hepatic Coma). ஈரல் நுண்ணுயிர்களாலும், கரணவாதை (cirrhosis) யாலும் பாதிக்கப்பட்டால், ஈரல் செய லிழப்பும் ஈரல் இரத்த நாளங்களில் இரத்த மிகை அழுத்தமும் ஏற்படும். அறிகுறிகள், மனக்குழப்பம், சோம்பல் நிலை, எரிச்சல், பார்வைப்பாதிப்பு, பேச்சுத் தடுமாற்றம், ஈரல் வீக்கம், மஞ்சள்காமாலை, கால் வீக்கம், கணைய வீக்கம், உடல் மயிர் இழப்பு ஆகியன இந் நோயின் அறிகுறிகள். தடுப்புச் சிகிச்சை. அதிபுரத உணவைத் தவிர்க்க வேண்டும். இரத்த ஒழுக்கால் வயிற்றில் சேரும் இரத்தத்தை அதற்குரிய கருவி மூலம் உறிஞ்சி எடுக்க வேண்டும். மலச்சிக்கலைத் தவிர்க்க வேண்டும். சிகிச்சை, மருத்துவமனையில் ஓய்வு கொடுத்து மூக்கு வழியாக இரைப்பைக்கு உணவு செலுத்த வேண்டும். குளுக்கோஸ், பழச்சாறு, காய்களின் ரசம் (minced vegetables), இளநீர், கஞ்சி ஆகியவை கொடுக்கலாம். புரத உணவு உண்ணக் கூடாது. உயிர்ச்சத்துக்கள், நீர், நியோமைசின் குளிகை 1 கிராம் 6 மணிக்கு ஒரு முறை கொடுக்கலாம். ஈரலுக்கு நச்சு விளைவை ஏற்படுத்தும் மருந்து களைத் தவிர்க்க வேண்டும். நச்சுணவு (Food Poisoning). நுண்ணுயிரிகள், வைரஸ் கலந்த உணவையோ, உணவில் உறுத்திகள் (irritants) சேர்ந்ததையோ நாம் உட்கொண்டால். அவை இரைப்பையில் இருந்து உடன் வாந்தியாகவும், பேதியாகவும் வெளியேற்றப்படும். அவ்வாறு உட் கொண்ட உணவால் விளையும் பயன் நச்சுணவு. அறிகுறிகள். பேதி, வாந்தி, வயிற்றுப்பிடி, வயிற்றுவலி ஆகிய அறிகுறிகள் காணப்படும். சிகிச்சை. பழம், இளநீர், தேநீர் வெந்நீர் ஆகியவற்றைக் கொடுக்கவேண்டும். பென்னடான் (பி-6) அல்லது சிக்குலும் (sequil), மற்றும் சிரை வழியாகக் குளுக்கோஸில் உப்பு 5% கலந்து கொடுக்கவேண்டும். அட்ரோபின் தசைலழியாகவும், ஸ்ட்ரெப்டோமைசின் 1 கி. 3 வேளை அன்றாடம் ஒப்பியச் சாறு (TR. opium) ஆகியன கொடுக்க வேண்டும். காலரா இது இரைப்பை - குடல் வழியில் ஏற்படும் நோய். உடன் சிகிச்சை அளிக்காவிட்டால் உயிர் நீங்கும். நோய்க்கான காரணம். இது விப்ரியோ காலரா (vibrio cholera) என்றழைக்கப்படும் இனாபா, ஓகாவா. எல்டார் என்ற நுண்ணுயிர்களால் ஏற் படும். அவை நாம் உண்ணும் உணவு, நீர் ஆகியவை வழி நம் இரைப்பை-குடல் பாதையை அடைந்து, ஒரு நச்சுப் பொருளை (toxin) வெளியிடும். இதனால் தொடர் வாந்தி, பேதி ஏற்பட்டு உடல் நீர் வற்றும். ரத்தத்தின் மின்பகுபொருள்கள் குறையும்; இவற்றை உடனடியாக ஈடு செய்ய ண்ேவடும். அறிகுறிகள். தொடர் வாந்தி,நீராகாரம் போல் பேதி, வயிற்றுத் தசை வலி, உடல் வலி, கெண்டைக் கால் தசைச் சுருக்கம், வலி ஆகியவை ஏற்படும்; உடல் வெப்பம் அதிகரிக்கும். சிகிச்சை. நோயாளியைத் தனிமைப்படுத்துதல், சிரைவழி நீர்மங்கள், சமபரவல் கரைசல் உப்பு isotonic saline) ஏற்றப்பட வேண்டும். டெட்ரா சைக்கிளின் (500mg.) 6 மணிக்கொரு முறை மூக்கு வழியாக இரைப்பைக்குள் செலுத்தப்படவேண்டும். திடீர்க் கணைய நோய் (Acute Pancreatitis). கணைய நீர்க்குழாயில் கல் உருவாகி அடைப்பு