பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/509

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவரை 479

ஏற்பட்டாலும், கணையத்தில் காயம், நாக்குப் பூச் சியால் அடைப்பு, வைரஸ் ஈரல் அழற்சி, இரத்த உறைவு ஆகியவற்றால் திடீர் எனக் கணைய நீர்ப் போக்கு தடுக்கப்பட்டாலும், அதிசாராயக் குடியா லும் கணைய நோய் ஏற்படுகின்றது. நோய்க்குறிகள். இரைப்பையின் மேல்புறம் தாங் கொண்ணா வலி ஏற்பட்டுப் பின்புறமாக ஊடுரு வும். முன்னால் குனிந்தால் வலி குறையும். காய்ச்சல் 100° - 101° இருக்கும். சிகிச்சை. வலிக்குப் பெத்திடினும் (pethidine), பீனபார்பிட்டோனும் (phenobarbitone), சுருக்கத் தைத் தவிர்க்க அட்ரோஃபின் ஊசியும், நுண்ணுயிர் களை அழிக்க டெட்ராசைக்கிளினும் (tetracycline- 500mg) அல்லது ஆம்பிசிளினும் (ampicilin - 500mg.), சிரைவழியாகக் கொடுக்கலாம். கால்சியம் குளுக் கோனேட் 10%, 10 மில்லி அன்றாடம் கொடுக்க வேண்டும். ஓய்வு மிக அவசியம். இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் ஹைட்ரோக்கார்ட்டிசோன் கொடுக்கப்படலாம். அவரை 479 சிறப்புப்பண்புகள். இது பலபருவச் சுழல் கொடி (Twiner); பெரும்பாலும் ஒரு பருவச் செடியாகப் (Annual) பயிரிடப்படுகின்றது. இது பந்தல் மீது படரும். இதன் இலைகள் கூட்டு இலைகளாகும். அவற்றுள் ஒவ்வொன்றும் மூன்று சிற்றிலைகளைப் (Leaflets) பெற்றிருக்கும். மலர்கள் வெண்மை, சிவப்பு அல்லது நீலம் கலந்த சிவப்பு நிறமுடையவை: இவை இலைக்கோணங்களிலுள்ள ரெசிம் (Raceme) மஞ்சரியிலமைந்திருக்கும். கனி பாட் அல்லது லெகும் (Pod or Legume) வகையைச் சார்ந்த இருபக்க வெடி கனி. விதைகள் வெண்மை, மஞ்சள், பழுப்பு அல்லது கருமை நிறத்தவை. காய்களின் நிறம், உருவம் கொடிகளின் நிறம், வயது, விதைகளின் நிறம், அளவு ஆகியவற்றைப் பொறுத்துச் சின்ன அவரை, யானைக்காது அவரை, கோழிக்கால் அவரை,சிவப்பு அவரை எனப் பலவகைகளாக படுகின்றன. இவை பிரிக்கப் நூலோதி 1. Weatherall, D.J., Ledingham J.G.G., and Warrell, D.A., Oxford Text Book of Medicine, Oxford University Press, Oxford, 1983. 2. Beeson, McDermott, Text Book of Medicine, 14th Edition, W.B. Saunders Co., London, 1967. 3. Rustam, Jal Vakid: Farokh, Eroch Udwadia, Diagnosis & Management of Medical Emergen- cies, 2nd Edition. Oxford Medical Publications. Madras, 1981. அவரை இது டாலிக்காஸ் லாப்லாப் (Dolichos lablab Linn.) என்னும் சிற்றினத்தில் டிப்பிக்கஸ் (typicus prain) என்ற வகையையும் ஃபாபேசி (Fabaceae=Papilion- aceae) என்னும் இருவிதையிலை அல்லி இணையாக் (Polypetalous) குடும்பத்தையும் சார்ந்ததாகும். இதன் தாயகம் ஆசியா என்று கூறப்படுகிறது. இது ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்க வெப்ப (Tropics), மிதவெப்பமண்டலப் பகுதிகள் (Subtropics) முழு வதும் பரவியிருக்கின்றது. இந்தியாவில் தோட்டப் பயிராக மட்டுமே பயிரிடப்பட்டு வருகின்றது. அவரை பயிரிடும் முறை. விதைப்பதற்கு விதைப்பதற்கு ஆனி, ஆடி மாதங்கள் ஏற்றவை. தென் இந்தியாவில் பெரும் பாலும் வீட்டுத் தோட்டங்களில் ஏறத்தாழ 3 மீ. உரமிட்டு, இடைவெளியில் குழிகள் தோண்டி, குழிக்கு இரண்டு விதைகள் வீதம் ஊன்றி, முளைத்த கன்றுகளில் திடமான ஒன்றை மட்டும் வளரவிட்டு, மற்றதை நீக்கிவிடுவார்கள். கொடி, பந்தவை அடைந்ததும் அதன் நுனியைக் கிள்ளிவிடுவார்கள். இதனால், கொடிகளில் பல கிளைகள் தோன்றும். கிளைகளை ஒரு மீட்டர் நீளம் விட்டு வெட்டிப் பந்தல் முழுவதும் படர விடுவார்கள். பந்தலுக்குக் கீழுள்ள கிளைகளை அகற்றி விடுவார்கள். பூக்கொத்துக்களுக்கு மேலுள்ள மூன்று கணுக்களை விட்டுக் கொடியை வெட்டிவிடுவார்கள். ஆண்டுக்கு