பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/511

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவுரி 481

அவுரி 481 விரைவாகக் குளிர்விக்கும், அவித்திடப் பயன்படும் நீர்மம் வெப்பத்தை விரைவாக ஏற்கத் தக்கதாக இருக்க வேண்டும். நீரைவிட நீர்த்த உப்புக் கரைசல் வேகமாக உலோகத்தை அவிக்கும், மிக அதிகமான கட்டமைப்பு மாறுதல்களைச் செய்ய உலோகங்கள் நீர்மக்காற்றில் (liquid air) அவிக்கப்படலாம். குறிப் பிட்டதோர் உயர்ந்த வெப்ப நிலையிலுள்ள உலோகத்தை அவிக்க, சூடான நிலையில், உருகிய ஈயம் போன்றதொரு பொருளுக்குள் அது அமிழ்த் தப்படும். அவிக்கும் நீர்மத்தின் வெப்பநிலையில் உலோகத்தின் உட்கூறு அமைப்பு எவ்வாறு இருக் குமோ, அதை இச்செய்முறை நிலைநிறுத்துகிறது. இதுதான் அவித்தலினால் விளையும் நன்மை. ஆனால், உலோகக் கலவைகளில் அவித்தலின் போது மிக விரைவான மாறுதல்கள் நிகழ்கின்றன. இரும் பையும் எஃகையும் இவ்வகையில் வன்மைப்படுத்தும் முறை மிகப் பழமையானதே. அவுரி இது இண்டிகோஃபெரா டிங்டோரியா (indlgofera tinctoria Linn). என்று தாவரவியலில் அழைக்கப்படு கின்றது. இது ஃபாபேசி (fabaceae = polypetalous) என்ற அல்லி இணையா (pepilionaceae) இருவிதை யிலைக் குடும்பத்தைச் சார்ந்தது. சிறப்புப் பண்புகள். இது ஒன்று முதல் இரண்டு மீட்டர் வரை கிளைத்துச் சிறு புதர்போல் வளரும். இதன் இலை கூட்டிலையாகும் (compound leaf). ஒவ்வோர் இலையிலும் 7 முதல் 13 வரை சிற்றிலை கள் (leaflets) உண்டு. இலைக் காம்பினடி சிறிது பருத்திருக்கும் (pulvinus). மலர்கள் சிறியவை, சிவப்பு நிறமுடையவை; ரெசீம் (racemc) மஞ்சரியில் அமைந்திருக்கும்; இவை அவரைப் பூ போன் றிருக்கும். கனிகள் பாட்(pod) வகையைச் சார்ந்தவை. அவுரியின் வேர்களில் வேர் முண்டுகள் (root nodules) பெருமள வில் காணப்படும். அவற்றில் கூட்டுவாழ்க்கை நடத் தும் ரைசோபியம் (rhizobium) பேரினத்தைச் சார்ந்த பாக்டீரியா (bacteria) ஒன்றாக இணைந்து வாழ் கின்றன. காற்றில் பரவியிருக்கும் நைட்ரஜனைப் பாக்டீரியா அதன் கூட்டுப்பொருளாக மாற்றிச் செடியில் சேர்க்கின்றன. அவுரிச் செடிகளில் நைட்ர ஜன் மிகுந்திருப்பதனால், ஒவ்வோர் அறுவடைக்குப் பின்னரும் விளைநிலத்தில் இவற்றைப் பயிரிட்டு மட்கி, உழுது, உரமாக்குவது உழவு முறையாகத் தென்னிந்தியாவில் கையாளப்பட்டு வருகின்றது. பொருளாதாரச் சிறப்பு. இதன் இலைகளிலிருந் கிடைக்கக்கூடிய நீலநிறச் சாயப் பொருளான இண் அ.க-2-32 2 00000 அவுரி (Indigofera tinctoria Linn.) 1. மிலார் 2.கனியின் முழுத் தோற்றம் 3. மஞ்சரி 4. கனியின் வெடிப்புத் தோற்றம் 8. விதை. டிகோ (indigo) மதிப்பு வாய்ந்தது. இலைகளை ஊறவைத்து நொதித்தல் (fermentation) மூலமும், ஆக்ஸிஜனேற்றம் (oxidation) மூலமும் இண்டிகோ தூயநிலையில் பிரித்தெடுக்கப்படுகின்றது. பருத்தி, கம்பளி, செயற்கை இழைகள் ஆகியவற்றிற்குச் சாய மேற்றுவதற்கு இது சிறந்ததாகும். ரப்பர், அச்சு மை போன்றவை தயாரிக்கவும் இண்டிகோ பயன்படுகின் றது. இச்சாயம் விரைவில் ஒட்டிக்கொள்ளக் கூடியது; நிலைத்து நிற்கக்கூடியது; வெளிச்சம், சலவை முறை களினால் பாதிக்கப்படாதது. நரம்புக் கோளாறு கள், கால்கை வலிப்பு நோய், இளைப்பு (asthma) போன்ற நோய்களுக்கு அவுரியின் சாறு கைகண்ட மருந்தாகும். ஆறாத புண்களுக்கும், சொறி சிரங்கு களுக்கும், இதன் இலைகளை அரைத்துப் பூசுவதால் குணமேற்படுகின்றது. வெறிநாய்க் கடியால் உண் டாகும் நீர்வெறுப்பு (hydrophobia) என்ற வைரஸ் நோய்க்கு அவுரி இலைச்சாறு நல்ல மருந்தாகும். இந்தியாவில் சோட்டா நாகபுரி (Chota Nagpur) பகுதியில் வாழும் 'முண்டா' இனத்தவர் (Munda) இதன் வேர்களைப் பயன்படுத்திச் சிறுநீர்க்கழிவுக் கோளாறுகளைக் குணப்படுத்திக் கொள்கின்றனர். கார்பன்டெட்ரா குளோரைடினால் (carbontetra