அழகியல், தொழில்நுட்ப 491
இதன் மூலம் வளிமங்களின் மூலக்கூறு எடை யைக் கணிப்பதற்கு ஒரு முறை ஏற்படுகிறது. அணுக்கட்டு எண். அணுக்கட்டு எண் (atomicity) என்பது ஒரு தனிமத்தின் மூலக்கூறில் எத்தனை அணுக்கள் இணைந்துள்ளன என்பதைக் குறிக்கும். 1 மூலக்கூறு ஹைட்ரஜன் + 1 மூலக்கூறு குளோரின் க் 2 மூலக்கூறு ஹைட்ரஜன் குளோரைடு ஒரு ஹைட்ரஜன் குளோரைடு மூலக்கூறு குறைந்தது ஒரு ஹைட்ரஜன் அணுவையும் ஒரு குளோரின் அணுவையும் கொண்டிருக்கவேண்டும். 2 மூலக்கூறுகள் குறைந்தது 2 ஹைட்ரஜன் அணு களையும், 2 குளோரின் அணுக்களையும் கொண் டிருக்கவேண்டும். இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் ஒரு மூலக்கூறு ஹைட்ரஜனிலிருந்து பெறப்படுகிறது. இதேபோல் இரண்டு குளோரின் அணுக்களும் ஒரு குளோரின் மூலக்கூறிலிருந்து பெறப்படுகிறது. எனவே ஹைட்ரஜன் 'இரட்டை அணு' (diatomic) மூலக் கூறு ஆகும். இதேபோல் குளோரின் மூலக்கூறும் இரட்டை அணுக்களைக் கொண்டுள்ளது. ஹைட் ஜன், குளோரின், நைட்ரஜன், ஆக்சிஜன் போன் றவை இரட்டை அணு' அணு' மூலக்கூறுகள் ஆகும். சோடியம், பொட்டாசியம் போன்றவை ஓரணு மூலக்கூறுகள் ஆகும். ஒரு தனிமத்தின் மூலக்கூறு எடையைக் கீழ்க்கண்ட சமன்பாட்டின் மூலம் அறிய லாம். மூலக்கூறு எடை = அணுஎடை X அணுக்கட்டு எண். ஹைட்ரஜன், குளோரின் போன்ற மற்ற பொருள் களுடன் வினைபுரியும் வளிமங்களுக்கு அணுக்கட்டு எண்ணைக்கணிக்க இயலும். ஆக்சிஜன், நைட்ரஜன் ஃபுளூரின், புரோமின், அயோடின் ஆகியவற்றின் மூலக்கூறுகள் இரண்டு அணுக்களால் ஆனவை. மந்த வளிமங்களுக்கு அணுக்கட்டு எண்ணை அவோ காட்ரோ விதியைப் பயன்படுத்திக் கண்டுபிடிக்க இயலாது. தனித்து இயங்கும் ஒரு தனிமம் அல்லது சேர்மத் தின் நுண்ணிய துகள் 'மூலக்கூறு' எனப்படும். பொருள்கள் அனைத்தும் இயங்குவது மூலக்கூறு நிலையிலேயே என்று வேறுவிதமாகக் கூறலாம். காண்க, மூலக்கூறு எடை; அவோகாட்ரோ எண். நூலோதி -ஆர்.இ. 1. Rao, C.N.R., University General Chemistry, Macmillan India, 1975. அழகியல், தொழில்நுட்ப 491 2. McGraw-Hill Encyclopaedia of Chemistry, Fifth Edition, McGraw-Hill Book Company, New York, 1983. அழகியல், தொழில்நுட்ப தொழில்நுட்ப படைப்புகள் யாவும் மனித அழ குணர்வைப் பெரிதும் நிறைவு செய்யவேண்டும். மனிதச் செயல்பாடு எப்பொழுதும் அழகு வாய்ந்த தாக அமைவதைப்பற்றிய நோக்கம், என்றுமே நிலவி இருந்து வந்தாலும் தற்போதைய தொழில் நுட்ப வளர்ச்சியின்போது அது மேலும் உயர்நிலை வடிவை அடைந்துள்ளது. அதற்கெனவே தொழில் நுட்ப அழகியல் என ஒரு தனி அறிவியல் துறையே உருவாகியுள்ளது. தொழில்நுட்ப அழகியலைப் படிக் கும் முன்பு அழகியல் பற்றிய பொதுவான அறிவியல் விளக்கத்தை அறிதல் வேண்டும். பொது அழகியல். அழகியல் என்பது மனிதன் உலகைத் தன் சிந்தனையில் முழுமையாகப் புரிந்து கொண்டு அதை வெளிப்படுத்தும் பொழுது உருவா கின்ற அழகு சார்ந்த உள்ளடக்கம் மற்றும் வடிவம் பற்றிய விதிகளைப் பற்றிய அறிவியல் ஆகும். இந்த அறிவியல் இந்தியா, சீனா, எகிப்து, பாபிலோன் ஆகிய தொல்பழம் நாகரிகங்களில் தோன்றிப் படி மலர்ந்தது. அது டெமாக்கிரட்டஸ், அரிஸ்ட்டாட்டில், எபிகியூரெஸ் ஆகியோரின் படைப்புகளில் முதன் முதலில் கருவுற்றது. இவர்களின் படைப்புகளில் பொருள்களின் இயல்புகள், இணைப்புகள், உறவுகள், விதிகள் ஆகியவற்றின் தொகுப்பில் அழகியல் விளக் கப்பட்டது. ஆனால் அழகு என்பது முழுமையாக மாறாமல் என்றும் நிலவுவதாகவும் அழியாததாகவும் மறையாததாகவும் புலன்களுக்கு அப்பாற்பட்டதா கவும் புலனுக்கு எட்டும் அறிவுக்கவைகளில் வெளிப் படுவதாகவும் உள்ள ஒன்று என பிளாட்டோ (Plato) விளக்கினார். பிறகு மறுமலர்ச்சிக் காலத்தில் மனித நேசத் துடன் நடப்பியலைப் பின் பற்றிய எழுத்தாளர்கள் நடப்பியல் போக்குக்கு ஏற்ற அழகியலை உருவாக் கினர். இடைக் காலத்தில் புனித அகஸ்டின், தாமஸ் அக்கினாஸ் ஆகியோர் தெய்வீக அழகியலை விளக் கினர். இதற்கு எதிராக ஹொகார்த்,டிடரோ,ரூஸோ, விங்கல்மேன், லெஸ்ஸிங், ஹெர்டர், ஷில்லர், கத்தே மற்றும் இவர்களின் சீடர்கள் கலையையும் அழகியலை யும் நடைமுறை வாழ்க்கையுடன் இணைத்தனர். கான்ட் என்பார் அழகியலைப் பயன்பாட்டிலிருந்து அயன்மைப்படுத்தினார். இது கலை கலைக்காகவே என்ற வடிவ அழகியல் (formalistic aesthetics) கோட்