492 அழகுப் பொருள்கள்
492 அழகுப் பொருள்கள் பாட்டுக்கு வழி அமைத்தது. ஹெகல் (Hegal) அழகி யலையும் அழகியல் செயல்பாட்டையும் வரலாற்றிய வாக உருவாகிய முறையை முரணியக்கக் கோட் பாட்டு அடிப்படையில் விளக்க முயன்றார். ஃபோயர் பாக் என்பார் அழகு என்பது புறநிலையில் நிலவும் பொருள்களின், நிகழ்வுகளின் இயல்பு என விளக்கி, அழகின் உள்ளடக்கத்தை உயிரியல் விதிகளின்படி மனித இயல்புகளில் வெளியிடுமாற்றை முயன்றார். விளக்க பெலின்ஸ்கி, செர்னசெவ்ஸ்கி, தோப்ரோலூபோ ஆகியோர் நடப்பியல் வாத அழகியலை மிக உயர்ந்த கட்டத்துக்கு வளர்த்தனர். பிறகு வரலாற்று, முரணி யக்கப் பொருள் முதல்வாத அணுகுமுறை அழகி யலை ஒட்டுமொத்தமாக அதன் பல்வேறு முகங்களில் ஆராயத் தொடங்கியது. மனிதனுடைய, குறிப்பிட்ட நோக்கமுடைய, சமூகம் சார்ந்த படைப்பியல் செயல் பாடாக அழகியல் விளக்கப்பட்டது. இயற்கையில் படைப் இருந்து மனிதன் உருவாக்கிய அழகியல் புகள் மீண்டும் இயற்கையையும் சமுதாயத்தையும் மறு வடிவமைப்பு செய்யும் முனைப்பான செயல் பாட்டை அக்கோட்பாடு தெள்ளத் தெளிவாக விளக் கியது. அழகியலின் முக்கியமான கருத்தினங்களாவன, அழகும் அருவெறுப்பும், துன்பமும் இன்பமும், அவல மும் நகைச்சுவையும், வீரமும் காதலும் என்பனவா கும். அழகின் தோற்றத்துக்கும் சாரத்துக்கும் உள்ள உறவு, அழகுணர்வுக்கும் சிந்தனைக்கும் உள்ள உறவு, அழகியல் முறை, அழகியல் நடை, அழகு பற்றிய பல் வேறு நடப்பியல் வாதக் கோட்பாடுகள், அக்கோட் பாடுகளின் சமூகப் படைப்புச் செயல்பாடுகள் ஆகிய வற்றைப்பற்றி ஆய்கிறது. மார்க்சிய அழகியல் பரவலாக தொழில்நுட்ப அழகியல். பொருளாக்கத் திறனைக் கூட்ட, செய்யப்படும் பொருளை விரைவாக செய்வது மட்டுமின்றி அழகாகவும் செய்யவேண்டும். பொருள் வடிவம் உடல் நலத்திற்கும் மனநலத்திற்கும் உகந்த தாக அமையவேண்டும். கண்ணுக்கு அழகியதாக அமைந்த வசதி மிக்க வடிவமைப்பு, கட்டிடங்களுக்கு மட்டுமின்றி தொழிலகப் பொருளாக்கக் கருவிகளுக் கும் உடைகளுக்கும் பணிபுரியும் இடத்துள்ள அழகு வேலைப்பாடுகளுக்கும் பொழுதுபோக்கும் இடத் துள்ள அழகு வேலைப்பாடுகளுக்கும் அமைதல் வேண் டும். இது அழகியல் பண்பாட்டை உருவாக்கிப்பணி புரிபவர்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உருவாக்கி, உழைப்பின் பொருளாக்கத் திறனைக் கூட்டும். அழகியல் முழுமை வாய்ந்த தொழிலகப் பொருள் கள் கலை மதிப்பு மிகமிக, உயர்நிலைப் படைப்புப் பொருள்களாகின்றன. தொழில் நுட்ப அழகியல் என்பது தொழிலக பொருள்களின் அழகியல் தன்மை யின் வடிவமைப்புக் கோட்பாடே. இது தொழிலகத் தில் உருவாக்கப்படும் பொருள்களுக்குத் தொழில் நுட்ப இயக்கச் செந்தரங்களை வரையறுக்கும். இச் செந்தரங்கள் பல்வேறு துறையின் அறிவைப் பயன் படுத்தியும் பணியளவியலைப் பயன்படுத்தியும் உரு வாக்கப்படுகின்றன. பணி அளவியல் (ergonomics) என்பது உடல் நலம், உள்ள நிலை, தொழில்நுட்ப நிலை ஆகிய அடிப்படை நிலைப்பாடுகளிலிருந்து உழைப்புச் செயல் பாட்டை அளக்கிறது. தொழில்நுட்ப அழகியல் ஒரு பொருள் குறிப்பிட்ட நோக்கத்துக்காக உருவாக்கப் படுவது மட்டுமின்றி, சில வகைப்பட்ட அழகியவ் கூறுகளையும் உள்ளடக்க வேண்டும் என்கிறது. தொழில்நுட்பம் வளரவளர, தொழில்நுட்பமும் கலை யும் இணைந்து, அவை புதிய கலை வடிவங்களை உருவாக்குகின்றன. திரைப்படம், தொலைக்காட்சி ஆகியவற்றையும், சிற்பங்களை வடிப்பதற்கான புதிய முறைகளையும், இசைக் கருவிகளை வடிவமைப் பதற்கும் இயக்குவதற்குமான புதிய முறைகளையும் ஒருங்கமைப்பதில் தொழில்நுட்பம் பெரும்பங்கு வகிக்கிறது. கலைக்கோட்பாடுகளைத் தற்காலத் துறைகளான வானொலி, தொலைக்காட்சி, அச்சுத் தொழில்நுட்பம் ஆகியவற்றில் பயன்படுத்தி அவற் றின் தரத்தை உயர்த்துவதிலும் தொழில்நுட்ப அழகியல் பெரும்பணி புரிகிறது. அழகுப் பொருள்கள் இவை மேனியின் தூய்மை, அழகு, பாதுகாப்பு, சீர், கவர்ச்சி ஆகியவற்றை நன்கு பேணுவதற்கு, நாகரிகமாகவும், பிடித்த வகையிலும் உடம்பின் மீது தூவுவதற்கோ, தடவுவதற்கோ, அல்லது தெளிப் பதற்கோ தயாரிக்கப்பட்ட பொருள்களாகும். கிறித்து பிறப்பதற்கு 3,500 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வழகுப் பொருள்கள் (cosmetics) பயன்படுத்தப் பட்டு வந்தன என்பது எகிப்தியக் கல்லறைகளி லிருந்து எடுக்கப்பட்ட பொருள்களிலிருந்து தெரிய வருகிறது. அவர்கள் தங்கள் மேனியின் மீது தாவர வேர்கள், மூலிகைகள், பழங்கள், பருப்புகள் போன்றனவற்றின் சாயங்களைப் பூசிக்கொண்டனர். முதல் உலகப் போருக்குப் பின்னர் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தபோது அழகுப் பொருள் களின் தேவையும் மிகவும் அதிகரித்தது. இதை யொட்டி அழகுப்பொருள்களின் தன்மையினைப் பற்றியும் அவை வேலை செய்யும் முறைபற்றியும் கண்டறிந்து சொல்லச் சரும வல்லுநர்களின் ஆலோ சனைகளும் தேவைப்பட்டன. 19ஆம் நூற்றாண்டின்