494 அழற்சி
494 அழற்சி நூலோதி Grosicki, Z., Watson's Textile Design & Colour, 7th Edition, Newness - Butterworth, London, 1980. அழற்சி உடலின் திசுக்கள் ஒரேயடியாக அழிந்துவிடாத அள வுக்கு, கேடுகள் சூழ்ந்து பாதிக்கும்போது, அத் திசுக் களின் இரத்த நாளங்களும், சுற்றுக் காப்புத் திசுக் களும் சேர்ந்து எதிர்த்துச் செயலாற்றிப் புரதம் திறைந்த நீரைச் சுரக்கின்றன. இந்தச் செயலே அழற்சி எனப்படும். அழற்சி ஊக்கிகள். அழற்சி ஊக்கிகளாவன, சிறு காயங்கள் (injuries) வேதியியல் பொருள்கள், ததிர் வீச்சு, மிகுதியான வெப்பமும் குளிர்ச்சியும் (extreme heat & cold), நுண்ணுயிரிகள் (bacteria). வைரஸ் (virus), ஒட்டுண்ணிகள் (parasites), பூச்சிகள்(insects), ஒவ்வாமை (allergy) என்பனவாகும். அழற்சி நீடிக்கும் நேரத்தைப் பொறுத்து. அது இரண்டுவகையாகப் பிரிக்கப்படுகிறது. அவையாவன, திடீர் அழற்சி (acute inflammation), நீடித்த அழற்சி (chronic inflammation) என்பனவாகும். திடீர் அழற்சியின் அறிகுறிகள். சிவந்து விடுதல் (redness), சூடாக இருத்தல் (heat), வீக்கம் (swelling) வலி (pain) செயல் இழப்பு (inaction) ஆகிய அறி குறிகள் திடீர் அழற்சியில் காணப்படுகின்றன. திடீர் அழற்சியில் உடலின் உள்ளே ஏற்படும் மாற் றங்கள். இவை இரத்தக்குழாயில் பாதிப்பு தரும் இரத்தக் குழாயின் துளையில் ஏற்படும் மாற்றங்கள். இரத்தக் குழாயில் சுவரில் ஏற்படும் மாற்றங் கள், இரத்த ஓட்ட வேகத்தில் மாற்றங்கள் என் பனவும், வீக்கமும் ஊன் நீர் வடிதலும் உருவாக்கும் ஊன் நீர் வடிதல், இரத்த அணுக்களோடு சேர்ந்து ஊன்நீர் வடிதல் என்பனவும் ஆகும். சுற்றியுள்ள இணைப்புத் திசுக்களில் ஏற்படும் மாற்றங்கள் இரத்தக் குழாய்த் துளையில் ஏற்படும் மாற்றங்கள். அழற்சியின் போது மிகவும் பாதிக்கப்படுபவை இரத்த நுண்குழல்கள். அழற்சி ஏற்படும்பொழுது முதலில் இரத்த நுண் குழல்கள் சுருங்கும். பிறகு இவற்றின் துளைகள் விரிவடைந்து இரத்தத் தேக்கம் ஏற்படும். இதன் விளைவாக, தமனியில் சிறு கிளைகளிலிருக்கும் இரத்தம், நேரடியாகவோ சில கிளைகளின் வழியாகவோ சிரைகளுக்குப் பாயத் தொடங்குகிறது. மேலும் இரத்த நுண்குழல்களுக்குச் சற்று முன் னால் இருக்கும் இதழ்கள் (valves) இப்போது விரிந்து திறந்து கொள்வதால் அனைத்து இரத்த நுண் குழல்களிலும் இரத்தம் பாய்கிறது. சில கிளைகள் அவசரத் தேவைக்கு மட்டுமே திறந்து கொள்ளும். மற்ற நேரங்களில் மூடி இருக்கும். அத்தகைய கிளை கள் கூட அழற்சியின்போது திறந்து கொள்வதால், பாதிக்கப்பட்ட இடம் முழுவதற்கும் இரத்தம் பாய்கிறது. இரத்தக் குழாய்ச் சுவரின் மாறுதலும் இரத்த ஓட்டத் தின் வேகமாறுதலும். இயல்பான உடல் நிலையில் இரத்தக் குழாயினுள் பாய்ந்து கொண்டு இருக்கும் இரத்தத்தில் அணுக்கள் நடுவிலும் பிளாஸ்மா குழா யின் உட்சுவரின் ஓரமாகவும் பாய்ந்து கொண்டிருக் கும். பிளாஸ்மா குழாயின் இரமாக அமைக்கப் பெற்றதற்குச் சிறப்பான காரணம் அதன் அடர்த்தி மொத்த இரத்தத்தின் அடர்த்தியைவிடக் குறை வாக இருப்பதே. புறத்தடுப்பும் இங்குக் குறைவாக இருக்கிறது. தளர்ச்சியுற்ற இரத்தக் குழாய்களின் இணைப்பகுதிகளில் இரத்த வெள்ளணுக்களின் தேக்கம் முதலில் சிறிய இரத்தக் குழாய்கள் விரிவடை வதால் இரத்த ஓட்டத்தின் வேகம் சற்று அதிகரிக்