பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/526

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496 அழற்சி

496 அழற்சி 5 ஹைட்ராக்ஸி ட்ரிப்டமைன் (SH. T.), கைனின் உண்டாக்கும் பொருள்கள் (kinins), கைனினை என்ஸைம்களான காலிக்கிரீர் (kalekrier), பிளாஸ் மின் (plasmin), ப்ராஸ்டா க்ளாண்டின்ஸ் (prostag- landins) என்பனவாகும். ஊன் நீர் வடிதலின் நன்மைகள். பிளாஸ்மாவில் அடங்கியுள்ள அனைத்துச் சக்திகளும் இந்த அழற் சியின் இடத்தில் சேமிக்கப்படுகின்றன. இதனால் சில நன்மைகளும் உண்டு. இயற்கையிலேயே கிருமி நச்சுகளை எதிர்க்கும் சக்தியான ஆப்ஸோனின் (*psonin), (compliments), காம்ப்ளிமென்ட்ஸ் எதிர்ப்புப் பொருள் (antibody) ஆகியவை இரத்தத் தில் உண்டு. நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து ஏதா கிலும் உட்கொண்டிருந்தால் அதுவும் இரத்தத்தில் கலந்திருக்கும். எனவே, அழற்சியை உடலில் ஏற் படுத்திய அந்தக் கெட்ட பொருள்களை இளக்கி விடவும், அதற்கு எதிராகச் செயல்படவும் இந்தப் புரதச்சத்து நீர் மிகவும் உதவுகிறது. அணுக்கள் கலந்த நீர், அழற்சியில் குழாயின் உயிரணு அடுக்குகள் புரதச் சத்துக்களை மட்டு மல்லாது இரத்த அணுக்களையும் வெளியேற்று கின்றன. சுவரில் ஒட்டிக் கொண்டே வெள்ளை யணுக்கள், அவற்றின் பொய்க் கால்களை (pseudo- podia) நீட்டியும் நெளித்தும், குழாயின் உட்சுவரின் இரண்டு உயிரணு அடுக்குகளின் இடையேயுள்ள இடைவெளியில் புகுந்து வெளியேறுகின்றன. வெளி என்ற முதலில் வெளியேறுபவை நியூட்ரோபில் என் னும் வெள்ளைணுக்கள். மிக மெதுவாக யேறுபவை மானோசைட் (monocyte) அணுக்களாகும். இவையே பின்னர் விழுங்கு அணுக் களாக (phagocytes) மாறுகின்றன. அழற்சியில் ஏற்படும் முக்கிய இரு மாற்றங்கள் வேதி ஈர்த்தல் (Chemotaxis).இரத்த அணு அல்லது அணுக்கள், வேதியியல் மண்டலத்தை நோக்கி ஈர்க் கப்படுவதற்கு வேதி ஈர்த்தல் என்பது பெயர். இந்த வெள்ளணுக்கள் தன்னிச்சையாய்த் திரியும் குணம் கொண்டவையாயினும், உடலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நுண்ணுயிர்களோ அவற்றின் நச்சோ வேறு ஏதாகிலும் கேடு தரக்கூடிய பொருள்களோ காணப்பட்டதென்றால், இவை உடனே அந்த இடத் திற்கு விரைகின்றன. இதைத் தொடர்ந்து மானோ சைட் அணுக்களும் விரைகின்றன. இந்த அணுக் களைக் குறிப்பிட்ட இடத்திற்கு ஈர்க்கும் இந்தச் சக்திக்கும் செயலுக்கும் பெயர்தான் "தீமோ டாக்ஸிஸ்" என்பது. கழிவுப் பொருள்களையும் நுண்ணுயிர்களையும் மானோசைட் விழுங்குதல். அணுக்கள் விழுங்கி அணுக்களாக மாறுகின்றன. இந்த விழுங்கும் செயல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. அதாவது, இந்த விழுங்கு உயிரணுக்களின் சுவரின் வெளிப்புறமாகக் கெடுதல் தரும் பொருள் ஒட்டிக் கொள்கிறது. இந்த விழுங்கு உயிரணுக்களின் வெளிச்சுவர், பொருள் ஒட்டிக் கொண்ட இடத்தில் நெளிந்து கொடுத்து வளைந்து அந்தப் பொருளை விழுங்கி விடுகிறது. கெட்ட பொருள் உயிரணுவில் ஊடுருவி உயிர ணுவில் சுரக்கப்படும் சில வேதியியல் நீர்மங்களால் அழிக்கப்பட்டு விடுகிறது. அழற்சியில் பேஸோபில் (basophil), ஈஸினோபில் (eosinophil), பிளாஸ்மா செல் (plasma cell) ஆகிய மற்ற அணுக்களும் ஈடு படுகின்றன. திடீர் அழற்சியின் விளைவுகள். இது, திசுக்களின் அழிவைப் பொறுத்தும், அழிந்த திசுக்கள் உடலில் தங்கியதைப் பொறுத்தும் மாறும். இருந்தாலும் அழற்சி ஒரேயடியாகத் திசுக்களை அழிக்காமல் இருந்தால், முதலில் வந்த பாலிமார்க் செல்கள், புரத நீர்க் கசிவு, பின்னர் வரும் மானோஸைட் அணு ஆகியவற்றால், அழற்சியால் பாதிக்கப்பட்ட இடம் நிரப்பப்படுகிறது. இது சிறந்த உடல் நலத்திற்கு அறிகுறி. பழுதடைந்த திசுக்கள் குறைவாக இருந்தால் சிதைக்கப்படுகின்றன. பின்னர் முழு வதுமாகப் பழைய நிலைக்குத் திரும்பிவிடுகின்றன. நல்ல புதிய திசுக்கள் வளர்ந்துவிடுகின்றன. . சீழ் பிடித்தல். பழுதடைந்த திசுக்கள் மிகுதியாக இருந்தால் சீர்படுவது கடினமாகிறது. மேலும் அந்த இடம் நுண்ணுயிர்களால் மிகவும் பாதிக்கப்படும் போது மிகுந்த அளவில் திசுக்கள் அழிகின்றன. நுண்ணுயிர், மிகுதியான வெள்ளணுக்களையும் கொல்கிறது. இவ்வாறு அழுகிய திசுக்கள், புரத நீர் கிருமிகள், அவை கொல்லும் வெள்ளணுக்கள் எல் வாம் கலந்து அடர்த்தியான குழம்பாகின்றன. இந் தக் குழம்பைத்தான் சீழ் என்கிறோம். இந்தச் சீழ் உள்ள பகுதியைச் சீழ்க்கட்டி என்கிறோம். வேதி நாட்பட்ட அழற்சி. நாட்பட்ட அழற்சிக்கான காரணங்களாவன, திடீர் அழற்சி, முழுவதும் ஆறா மல் நீடித்தல், முதலில் தீவிரமில்லா நுண்ணுயிர் களால் பாதிக்கப்பட்டு, ஆறுவதற்குள்ளேயே தீவிரம் மிகுந்த நுண்ணுயிரிகளால் பின்னர் பாதிக்கப்படுதல், கேடு தரும் பொருள் அதிகம் தீவிரமில்லாதிருத்தல், பாதிக்கப்பட்ட திசுக்கள் நோயுடன் இருத்தல், கேடு