பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/528

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498 அழற்சி நீக்கிகள்‌

498 அழற்சி நீக்கிகள் லுள்ள வெப்பக் கட்டுப்பாட்டு மையத்தின் (thermo regulatory center) அடிப்படை வெப்ப மட்டத்தை அதிகரித்துக் காய்ச்சலை விளைவிக்கிறது. இவ்வகை மருந்துகள் புரோஸ்ட்டகிளாண்டின் உற்பத்தியைக் குறைப்பதனால் வெப்பக் கட்டுப்பாட்டு மையத்தின் அடிப்படை வெப்ப அளவை மீண்டும் இயல்பான நிலையில் நிலை நிறுத்திக் காய்ச்சலைக் குறைக் கின்றன. புரோஸ்ட்டகிளாண்டின்கள்தான் மிதமான, துடிதுடிப்பான வலியை நரம்புகளின் மூலம் பரவு வதற்கும், உணர்வதற்கும் அடிப்படையாக அமை கின்றன. ஆகையால் இவ்வகை மருந்துகளின் புரோஸ்ட்டகிளாண்டின் உற்பத்தியை மட்டுப்படுத் தும் ஆற்றல் வலியகற்றவும் அடிகோலுகிறது. 3. இம்மருந்துகள் கைனின்கள் உற்பத்தியை மட்டுப்படுத்தியும் பிராடிகைனினுடைய வலிபரப்பும் தன்மையைக் குறைத்தும் செயல்படுகின்றன. 4.இலை,பரப்பும்தன்மை கொண்ட அமசமான (spreading factor) ஹையல்யுரானிடேஸ் (byaluroni- dase) என்ற நொதியின் செயல்திறனைக் குறைப் பதால் அழற்சி வெளியேற்றும் நீரின் (inflammatory exudates) பரவும்தன்மை தடைப்படுகிறது. ஸெரட் 5. இரத்தத் தட்டணுக்கள் (platelets) கூட்டுச் சேர்வது (aggregation) தடுக்கப்படுவதால் டோனின் உற்பத்தியும் தடைப்படுகிறது. 6.மேலும் இம்மருந்துகள் பிளாஸ்மா புரதங்க ளுடன் கட்டுண்ட கார்ட்டிக்கோஸ்ப்டீராய்டுகளை விடுவித்து அகவழி (endogenoUS) அழற்சி ஆற்றும் வேதியியல் பொருள்களின் செயல்திறனை வலுப் படுத்துகின்றன. மற்றவை. இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள், ஸெர டோனின், எதிர்ஹிஸ்டமின் மருந்துகள் (anti- histamine drugs) என்பனவாகும். இவ்வகை மருந்துகள் தனியாகவும் மற்றவகை அழற்சி ஆற்றும் மருந்துகளுடனும் பயன்படுத்தப் படுகின்றன. ஆனால் இங்கே இவ்வகை மருந்து களுக்கு மற்ற வகை அழற்சி நீக்கிகளைப்போலத் தனி மருந்துகளாக முக்கியத்துவம் கொடுக்கவோ விளக்கம் தரவோ தேவையில்லை எனக் கருதப்படுகிறது. அழற்சி நீக்கிகள் ஸ்டீராய்டு வகை அழற்சி நீக்கிகள். வகை மருந்துகளின் ஒப்பாற்றல் சற்றுக் காண்போம். முதலில் இவ் திறன்களைச் ஒப்பாற்றல் திறன் எண் ஸ்டீராய்டுவகை அழற்சி நீக்கிகள் (கார்ட்டிஸோன் அசெட்டேட் 1) I. 25 1. ஹைட்ரோகார்ட்டிஸோன் (Hydrocortisone) 2. பிரெட்னிஸோன் (Prednisone) 3. பிரெட்னிஸோலோன் (Prednisolone) 4. மெத்தில் பிரெட்னிஸோலோன் (Methyl prednisolone) 5. டிரையம்ஸினோலோன் (Triamcinolone) 6.பேராமெத்தஸோன் அசெட்டேட் (Paramethasone acetate) 7.ஃப்ளு பிரெட்னிஸோலோன் (Flu prednisolone) 8.டெக்ஸமெத்தஸோன் (Dexamethasone) 9. பீட்டா மெத்தஸோன் (Beta methasone) 5,00 5. 00 6. 25 6. 25 12. 50 25.00 33. 33 35. 70 வலி அகற்றிக் காய்ச்சல் இறக்கும் அழற்சி நீக்கிகள் 1. ஆஸ்பிரின் (aspirin) வகை மருந்துகள். ஆஸ் பிரின், அசெட்டைல் சாலிஸிலிக் அமிலம், சாலி ஜெனின், சாலிஸில் ஆல்கஹால் (salicyl alcohol), மெத்தில் ஸாலிசிலேட், விண்டர்கிரீன் எண்ணெய் (oil of wintergreen) ஆகியவற்றில் ஒன்றை வெளிப்பூச் சுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இது ஓர் எரிச்சல் அடக்கி மருந்தாகப் (counter irritant) பயன் படுவதுடன் வலி அகற்றியாகவும் அமைகிறது. சாலிசிலமைடு (saltcylamide), சாலிஸிலிக் அமிலம் அல்லது சோடியம் சாலிஸிலேட்டும் பயன்படும். 2.பாரா அமினோ ஃபினால் பெறுதிகள் (para aminophenol derivatives). (எ.கா.) அஸிட்ட மினோஃபென், 3. ஆந்திரனிலிக் அமிலப் பெறுதிகள் (anth ranilic acid derivatives). (எ.கா.) மெஃபெனமிக் அமிலம் (mefenamic acid). 4. ஃபினைல் புரோபியானிக் அமிலப் பெறுதி கள் (phenylpropionic acid derivatives). (எ.கா.) ஃபெனோபுரோஃபென் (fenoprofen), இபுபுரோஃ பென் (ibuprofen), ஆல்குலோஃபெனக் (alclofenac), நெப்ரோக்ஸென் (naproxen).