பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமில மிகைவு

அந்தந்த மூல அமிலத்தின் கொதிநிலையை விட அதிகம். அசெட்டிக் அமிலத்தின் கொதிநிலை 118°C; அசெட்டிக் நீரிலியின் கொதிநிலை 138°C.

அசெட்டிக் நீரிலி ஒரு நிறமற்ற நீர்மம். அசெட் டிக் அமிலத்தின் மணம் போன்ற மூக்கைத்துளைக் கும் நெடியை உடையது. ஈதர், பென்சீனில் எளிதில் கரைகிறது. அசெட்டைல் குளோரைடு போல காற் றில் புகைவதில்லை.

அமில நீரிலிகள் நீரினால் சிதைவடைந்து அவற் றில் அடங்கியுள்ள அமிலங்களைத் தருகின்றன. சூடாக்குவதாலோ ஒரு துளி அடர் கந்தக அமிலம் சேர்ப்பதாலோ உடனடியாக மிகத் தீலிரமாக வினை ஏற்படுகிறது.

வேதி வினைகளில் அமில நீரிலிகள் அமிலக் குளோரைடுகளைப் போலவே உள்ளன. ஆனால், இவ்வினைகளில் இவை மிக மெதுவாக ஈடுபடுகின் றன. அமிலக் குளோரைடுகளின் வினைகளில் ஒரு மூலக்கூறு ஹைட்ரஜன் குளோரைடு பெறப்படுவது போல, அமில நீரிலிகளின் வினைகளில் ஒரு மூலக் கூறு கார்பாக்சிலிக் அமிலம் பெறப்படும். அசெட் டிக் நீரிலியின் வினைகளில் வெளியேற்றப்படும் அசெட்டிக் அமிலத்தின் அளவு வினைபுரியும் சேர் மத்தில் உள்ள -OH அல்லது - NH தொகுதிகளின் எண்ணிக்கையைக் கண்டறியப் பயன்படுகின்றது.

இவ்வினைகள் வீரியம் குறைவாக நடைபெறுவ தால், அமிலக் குளோரைடுகளை விட இவையே பயன் படுத்த மிகவும் எளிதாக உள்ளன. அசெட்டைல் ஏற்றத்துக்கு (acetylation) அசெட்டைல் குளோ ரைடை விட அசெட்டிக் நீரிலியைப் பயன்படுத்து தலே பொதுவாக விரும்பப்படுகிறது. அசெட்டிக் நீரிலியால் அசெட்டைல் ஏற்றம் நடைபெறச் செய் கையில் சிறிது சோடியம் அசெட்டேட்டு அல்லது அடர் கந்தக அமிலம் வினையூக்கியாகப் பயன் படுத்து தல் சிறப்பானது.

அமில நீரிலிகள் ஆல்கஹாலுடன் வினைபுரிகை யில் - OH தொகுதியில் உள்ள ஹைட்ரஜன் அணு, அசைல் தொகுதியால் பதிலீடு செய்யப்பட்டு, எஸ்ட் டர்கள் (esters) கிடைக்கின்றன. அசெட்டிக் நீரிலி தான் மிக அதிகமாகப் பயன்படும் நீரிலி. இது பொதுவாக ஒரு அசெட்டைலேற்றக் காரணியாகப் பயன்படுகிறது. சேர்மங்களின் -OH, -NH, தொகுதி களை நிர்ணயிக்கவும் இது உதவுகிறது. சாயங்க ளும், செல்லுலோஸ் அசெட்டேட்டு மூலம் ரேயான் இழையும், ஆஸ்ப்பிரின் (aspirin) போன்ற சில மருந் துப் பொருள்களும் தயாரிக்க உதவுகிறது.கே.எஸ்.வா

நூலோதி

1. McGraw-Hill Eacyclopaedia of Chemistry, Fifth Edition, McGraw-Hill Book Company, New York, 1983.

2. Finar, I.L., Organic Chemistry, Vol. I, Sixth Edition, ELBS, London, 1973.

அமில மிகைவு

அமிலமிகைவு என்பது உடலின் வளர்சிதை (meta

bolic) மாற்றங்களின் போது உற்பத்தியாகின்ற HT அயனிகள் (H+ ions) உடலியங்கு (physiological), மாற்றங்களின் போதும் உயிர்வேதி (biochemical) மாற்றங்களின் போதும் விளைந்து வெளியேற்றப் படாமல் உடலிலேயே தங்கி இரத்தத்தின் (blood} பிஎச் (pH) ஐயும், உயிரணு வெளி நீரின் pH ஐயும் குறைத்து ஊறு விளைவிக்கின்ற ஒரு நிலைமையா கும். நாள்தோறும் உண்ணுகின்ற உணவிலுள்ள மாவும், கொழுப்பும், புரதச் சத்துக்களும் திசுக்க ளால் ஆற்றலாகப் பயன்படுத்தப்படும்போது, சல் ஃபேட்டு (sulpbate). பாஸ்ஃபேட்டு (phosphate) கார்பானிக் அமிலம் (carbonic acid) முதலிய கழி வுப் பொருள்களாகின்றன. இவை H அயனியைக் கொடுக்கின்றன.

அமிலங்கள். H அயனிகள் அல்லது புரோட் டான்களைத் (protons) தருபவை அமிலங்கள்.

எடுத்துக்காட்டு,

H,CO, H* + HCO3 ➜

pH என்பது ஒரு பொருளுடைய அமில அல்லது காரத்தன்மையைப் பற்றித் தெரியப்படுத்தப் பயன்படுத்தப்படும் அளவுகோலைக் குறிக்கும் ஒரு குறியீடு.

H+ அயனிகள் அல்லது அமிலங்கள் உற்பத்தி. உடற்செயலில் மாறுதல்களாலும், உயிரணுக்களில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களாலும் உயிரணு சூழ்நீரில் (extra cellular fluid), அமில எதிர் மின அயனிகளாகவும் (acid anion) லாக்ட்டேட்டு, பைரூ வேட்டு, கிட்டோன்களாகவும் (lactate, pyruvate, ketones) சேர்கின்றன. காற்று சுவாசிப்பதாலும் (respiratory) அமில அயனிகள் உடலில் சேரலாம்.

23