பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/531

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழற்சியும்‌ அரிப்பும்‌, அல்குல்‌ 501

2 9 b 1. அல்குல் மேடு அல்லது கொட்டு 2. கந்து அல்லது முளை 3. அல்குல் புறஇதழ் 4. சிறுநீர் வெளித் துளை 5. அல்குல் இதழ்ப் பக்கக்குழிவு 6. அல்குல் அகஇதழ் 7. கன்னிச்சவ்வு 8. படகுவடிவக் குழிவு 9. இதழ்ச்சுவர் பருவம் அடைந்த காலம் தொட்டுத் தோன்றி வளர் கின்றன. இந்த மயிர் அமைப்பு ஒரு முக்கோண மாக அடிப்பக்கம் மேல்நோக்கியபடி காணப்படும். ஆண்களுக்கு முக்கோண வடிவ ஆனால் அமைப்பு அதன் நுனிப்பக்கம் (apex) தொப்புள் வரை படர்ந்து காணப்படும். மயிர் அல்குல் புறஇதழ். இது, ஆண் இனப் பெருக்க உறுப்பின் பகுதியான விதைப் பைக்கு (scrotum) ஒப்புடையதாகும். இரண்டு, நீண்ட உருண்டையான தோல் மடிப்புகள் அல்குல் மேட்டிலிருந்து தொடங்கி மூலாதாரம் வரை (perineum) நீண்டு அதனுடன் இணைந்து கலந்துவிடுகின்றன. இவற்றின் வெளிப் புறம் கருமையான மயிர்களால் போர்த்தப்பட்டுக் காணப்படும். மேலும், கொழுப்புச்சுரப்பிகள் (seba- ceous glands) வியர்வைச் சுரப்பிகள் (sweat glan ds), தளர்வான ஏரியோலார் திசுக்கள் (loose areolnr tissues), மயிர்க்கால்கள் (follicles), கருப்பை உரு ளைப் பந்தகம் (round ligaments) ஆகியனவும் இதுனுள் காணப்படும். . அல்குல் அகஇதழ், இது சிறிய, மெல்லிய, மழ மழப்பான (smooth) மடிப்புகளால் ஆகி (folds ) அல்குல் புறஇதழின் உட்புறம் அமைந்துள்ளது. முன் புறமாகப் பிளவுபட்டு கிளிடோரிசை உள்ளடக்கி யுள்ளன. பின்புறம் இரு இதழ்களும் இணைந்து இதழ்ச்சுவர் (fourchette) என்ற குறுக்கு மடிப்பு (transverse fold) ஏற்படுகிறது. இது பிள்ளை பேற்றின் போது கிழிந்துவிடுகிறது. இதழ்ப்பக்கக்குழிவு. இரண்டு அல்குல் அக அழற்சியும் அரிப்பும், அல்குல் 501 இதழ்களுக்கும் இடையில் அமைந்துள்ள இதில் சிறு நீர்த்துளை திறக்கிறது. இதழ்ச்சுவர்களுக்கு முன்புற மாக நாவாய்க் குழிவு (navicular foisa) அமைந் துள்ளது. கன்னிச்சவ்வு இதன் முன்புறமாக இருக்கிறது. கன்னிச்சவ்வு. இது அல்குல் வாயின் வெளித் துளையை மூடியுள்ள சவ்வு ஆகும். இது முதல் உட லுறவின்போதோ அல்லது விளையாடுவதின் காரண மாகவோ கிழிந்துவிடும். கிழிந்துவிடும். நீள்வட்ட வடிவிலோ அல்லது சல்லடை போன்று பல துவாரங்களுடனோ அமைந்துள்ள இந்தச்சவ்வு இருபுறமும் அறுகோண எத்தீலியத் திசுக்களால் திசுக்களால் (squamous epithelium) மூடப்பட்டுள்ளது. சிறுநீர்ப் புறத்துனை. இது முளைக்கும் அல்குல் வாய்க்கும் நடுவில் வட்டவடிலத் துளையாக, ஓரங்கள் உயர்ந்து காணப்படுகிறது. சிறுநீர்ப்புற வழிக் குழாயின் (urethra) பின்புறமாகப் பக்க வாட்டில் (postero lateral) ஸ்கீன் சுரப்பிகள் (skene glands) அமைந்துள்ளன. இலை கோனோகாக்கஸ் (gonococcus) நுண்ணுயிரிகளின் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகின்றன். பார்த்தோவின் சுரப்பிகள் (Bartholirs gland). 10மி. மீட்டர் அளவுள்ள இவை அல்குல் அகஇதழின் நடுப்புற மூன்றிலொரு பகுதியும் (middle third) பின்புற மூன்றிலொரு பகுதியும் (posterior third) சந்திக்கும் இடத்தில் உள்ளன. 2 செ.மீ. நீளமுள்ள இவற்றின் நாளங்கள் கன்னிச்சவ்வுக்கும், அல்குல் அக இதழுக்கும் நடுவில், பக்கக்குழிவின் (vastibule) முன்பகுதியில் திறந்துள்ளன. பாலுணர்வு இன்பத் தின் உச்சநிலையில் இச்சுரப்பிகளிலிருந்து சுரக்கும் நீர்மம் உட லுறவின்போது ஏற்படும் உராய்வினைக் குறைக்கிறது. நோயுற்ற சமயங்களில் இவற்றைத் தொட்டு உணரலாம். அல்குல் அரிப்பு அல்குல் பகுதியில் அரிப்பு ஏற்படுவதென்பது பல்வேறு பெண்பிணிகளில் ஒரு கூறுபாடாக காணப் படுகிறது. இது எதனால் ஏற்படுகிறது என்ற கார ணத்தைத் தெரிந்துகொள்வதற்கு விரிவான ஆய்வு கள் தேவைப்படுகின்றன. பின்வருவனவற்றை அல்குல் அரிப்புக்கான நோய்க்காரணிகளாகக் கூறமுடியும். அவை டிரைகோமோனால் (trichomonas) அல்லது மொனிலியல் (monilial) அல்குல் வாய்த் தொற்றில் (infection) வெளிப்படும் கசிவு (discharge), டினியா (tinea), சிரங்கு, பேன், ஒட்டுத் தோலழற்சி (contact dermatitis), சோரியாஸிஸ் (psoriasis), போன்ற பல்வேறு விதமான தோல் வியாதிகள் அல்குல் என்பனவாகும். பீடித்தல், பகுதியைப்