504 அழற்சியும் அரிப்பும், அல்குல்
504 அழற்சியும் அரிப்பும், அல்குல் முதனிலை வகிக்கிறது. மாலிக்னன்ட் மெலனோமா, (malignant melanoma) சார்கோமா (sarcoma) முதலியன பிற வகைகளாகும். பெண் பிறப்புறுப்பில் வரக்கூடிய மொத்தப்புற்று நோய்களில் இது 5 விழுக்காடேயாம். 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கே இது அதிக அளவில் வரும் தன்மையுடையது. இதன் நோய்க்காரணிகள் சரிவரப்புரிந்து கொள் ளப்படவில்லை. வயதுமுதிர்ந்த பெண்களில் குழந்தை பெறாதவர்களுக்கும் இளம் பெண்களில் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதிக அளவில் இந்நோய்வருகிறது. 30முதல் 50 விழுக் காடு நோயாளிகளில் இந்நோய் சாதாரண தோலி லிருந்தே தோன்றுகிறது. 10 விழுக்காடு ஆரம்பப் புற்றுநோய் மாற்றங்கள் (pre-cancerous) தோல் பகுதியிலிருந்து வருகின்றது. இப்புற்றுகள் அல்குல் புறஇதழின் தோல், தோலின் கீழுள்ள திசுக்கள் அல்லது சிறுநீர்ப்புற வழிச்சுரப்பிகள் முதலியவற்றிலிருந்து தோன்றி வளர்கின்றன. நேர்முகப்பரவல் முறையின் மூலம் இது அல் குலைச் சுற்றியுள்ள பிற பகுதிகளுக்கும் தொகுதி நிணநீர்க்கட்டிகளுக்கும் (regional Iympura) பரவு கிறது. நோயின் வெளிப்பாடுகள். இது புண்ணாகவோ அல்லது ஆறாத வெள்ளைப்படையாகவோ (leuko plakic patch) தொடங்கும். இந்தப்புண் தொடர்ந்து பரவும் தன்மையுடையதாகவும், வலி, அரிப்பு, இரத் தக்கசிவு முதலிய குணங்களையுடையதாகவும் இருக் கும். வெளியே சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு இருப்பதனால் இந்நோய் முதிர்ச்சியடைந்த நிலை யில் சிகிச்சைக்காகக் கொண்டு வரப்படுகிறது. 30 முதல் 50 விழுக்காடு நோயாளிகள் பருமனாகவும், இரத்தக் கொதிப்புடையவர்களாகவும் 10 விழுக்காடு நோயாளிகள் நீரிழிவு நோய்க்காரர்களாவும் இருக்கி றார்கள். வயது முதிர்ந்த நோயாளிகளுக்கு வரும் அல்குல் புற்று அல்குலின் முன்புறத்தில் தொடங்குகிறது. இளம் பெண்களுக்கு அல்குல்புற்று இதழ்ச்சுவர் பகுதியிலிருந்து தொடங்குகிறது. அல்குல் புறஇதழில் 40 விழுக்காடும் அக இதழில் 20 விழுக்காடும் இப் புற்று காணப்படும். மூலாதாரம் (perineum) வெகு அரிதாகவே பாதிக்கப்படுகிறது குணமுடைய நோய் நாடல் (diagnosis). எளிய புற்றாக இருப்பின் ஆய்ந்து நோக்குதல் (inspection) தொட்டுணர்ந்தறிதல் (palpation) முறையில் எளி தாக அறியலாம். அன்றேல், நுண்ணோக்கி தேவை. காசநோய்ப் புண்கள் பால்வினை நோய்ப் புண் கள், எலிப்புற்றுப்புண் (rodent ulcer) முதலியன அல் குல் புற்றுப்புண்ணைப் போலவே தோற்றமளிக்கும். இந்நிலையில் திசுச்சோதனையும் (biopsy),சீராலர்ஜி (serology) சோதனைகளும் வேறுபடுத்தி அறிய உத வும். அல்குல் தோலில் ஐயத்திற்குரிய குறிகள் தோன்றுமாயின் திசுச்சோதனை மூலமாகவோ, இடுப்பு உள்நோக்கி (colpa scope) மூலமாகலோ நோயினை அறியலாம். சில சமயங்களில் பார்த்தோ லின் சுரப்பிகளிலிருந்து கோளப்புற்று தோன்றலாம் நோய் முடிவுநிலை (prognosis). இந்நோய் அதன் கண்டுபிடிக்கும் காலத்தில் உள்ளநிலை. அருகாமையிலுள்ள உறுப்புக்களுக்கு பரவியுள்ள தன்மை, தொகுதி நிணநீர்க்கட்டிகள் பாதிக்கப் பட்ட நிலை முதலியனவற்றைப் பொறுத்து நோய் முடிவு மாறுபடும். சிகிச்சை முறைகள். ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை பெற்றால் முழுமையான குணம்பெற வாய்ப்பு உண்டு. இதற்கு அறுவைச் சிகிச்சை, கதிர்வீச்சு மருத்துவம், புற்றணுக் கொல்லி மருத்துவம் முதலிய முறைகளும் உள்ளன. அழிக்காமல் சோதனை செய்தல் காண்க, சோதனை செய்தல், அழிக்காமல் அழிஞ்சில் இது அலாஞ்பசிம் (Alangium) என்ற ஒரே ஒரு பேரினத்தைக் கொண்ட அலாஞ்சியேசி (alangiaceae) என்னும் அல்லிஇணையா (polypetalous) இருவிதை யிலைக் குடும்பத்தைச் சார்ந்தது. இந்தப் பேரினத்தில் நான்கு உட்பிரிவுகளும் 20 சிற்றினங்களும் இருக் கின்றன. அவற்றில் ஒரு சிற்றினமாகிய அழிஞ்சில் (alangium salvifolium (L.f.) wang.) தென்னிந்தியா முழுவதும் பரவியிருப்பதைக் காணலாம். மேலும் இது, ஆப்பிரிக்கா (Africa), இலங்கை (Sri Lanka), சீனா (China), இந்தோசீனா (Indochina), சயாம் (Siam) பகுதிகளிலும் பரவியிருக்கின்றது. அழிஞ்சில் என்று வழக்கிலிருக்கின்ற பெயரைத் தவிர ஆன் (Ann), அங்கோலம் (Angolum), அங்கோலவைரவன் (Angolavairavan), அருளாவம் (Arulavam), அத்திக் கோலம் (Attigolam) போன்ற மாற்றுப் பெயர்களும் இதற்குண்டு. அழிஞ்சில் ஓர் இலையுதிர் வகை மரம். இது எல்லா உலர் பசுமைக்காடுகளிலும் (dry ever- green forests) காணப்படுகிறது. இது பாலை நிலத் தாவரமாகத் தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டிருக் கின்றது.