506 அழியாமை விதிகள்
506 அழியாமை விதிகள் சிதல் இல்லாதவை (exstipulate), இலைத்தாள் (blade) முழுமையானது. இலை நுனி நீள் கூர்மையானது (acuminate) அல்லது கூர்மையானது (acute). மேற் பரப்பில் கேசங்கள் சில சமயங்களில் காணப்படும். அவை 8-16 × 2-5 செ.மீ. அளவினை உடையவை. தளிரின் இரு பரப்புகளிலும் கேசங்கள் காணப்படும். சிறகொத்த நரம்பமைப்பையோ (pinnately nerved), 3-5 கிளை நரம்பமைப்புடன் (3-5 plinerved) 3-9 பக்க நரம்புகளையோ பெற்றிருக்கும். மலர்கள் இலைக் கோணத்தில் சரிமட்ட முகட்டையுடைய மலர்க்கொத்து (corymb) மஞ்சரியில் 1-17 மலர் களைப் பெற்று அமைந்திருக்கும். மஞ்சரி கேசங் களைப் பெற்றிருக்கும்; பெரும்பாலும் கோடையில் இலைகள் உதிர்ந்த பிறகு பூக்கும். மலர்கள் வெளிர் பச்சை நிறமுடையவை. இருபாலானவை (bisexual) ஆரச்சமச்சீருடையவை (actinomorphic). சூலகக் கீழ்மட்ட (epigynous) வகையைச் சார்ந்தவை; இதன் பூவடிச்சிதல் (bract) சிறியது. புல்லி வட்டக் குழல் (calyx tube) குட்டையானது; கோப்பை (cupuliform) அல்லது புனல் வடிவானது (infundibuliform). அல்லி இதழ்கள் 5-10; அவை குறுகி நீண்டிருக்கும்; பூத்த மலரில் இவை வெளி நோக்கிச் சுருண்டிருக்கும் (coiled). மகரந்தத் தாள்கள் தனித்தவை; எண்ணிக் கையில் அல்லி இதழ்களைப் போல் 2-3 மடங்காக இருக்கும். சூற்பை ஒரே அறை கொண்டது. சூலகத் தண்டு நீளமானது. கனி நீள் உருண்டை (oblong cylindric) அல்லது முட்டை வடிவானது (ovoid); அது உள் ஒட்டுசதைக்கனி (drupe) வகையைச் சார்ந்த சதைக்கனி ஆகும்; கனி ஒரு விதை கொண்டது; கனியின் உச்சியில் நிலைத்த புல்லி வட்டம் (persis- tent calyx) வளையமாக அமைந்துள்ளதையும், சுரக்குந்தட்டு இருப்பதையும் காணலாம். . பொருளாதாரச் சிறப்பு. வேரின் பட்டை சிவப்பு கலந்த மஞ்சள் நிறம் கொண்டது. இது வயிற்றுப் போக்கியாகவும், குடற் பூச்சி கொல்லியாகவும் பயன் படுகிறது. மரப்பட்டையின் பொடி காய்ச்சலுக்கும், சரும நோய்களுக்கும் தக்க மருந்தாகப் பயன்பட்டு வருகிறது. குறைந்த அளவில் பயன்படுத்தும்போது இரத்த அழுத்தத்தைத் தற்காலிகமாகக் குறைக்கும். ஆனால் அதே சமயத்தில் சுவாசித்தல் பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். முதிர்ந்த கட்டை பழுப்பு நிறத்துடனும், கெட்டியாகவும் இருக் கும். தென்னிந்தியாவில் இது செக்கு உரலாகவும், உலக்கையாகவும், வண்டிச்சக்கர ஆரக் கட்டைக ளாகவும், வட்டைக் கட்டைகளுக்காகவும், கால்நடை மணிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றது. இது மெருகு ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்டையானதால் கடைசல் வேலை, அழகு கலைப்பொருள்கள், பொம் மைகள், வேளாண்மைக் கருவிகள், இசைக் கருவிகள் முதலியவை செய்யப் பயன்படுகிறது. இதன் விதைகள் 0.2 விழுக்காடு கின்றன. ஆல்கலாய்டுகளைப் பெற்றிருக் தி.ஸ்ரீ. நூலோதி 1. Bloembergen, S. A., Revision of the gems Alan- gium Bull. Jard. Bot. Buitenz Vol. 16, 1939. 2. Gamble, J. S. Fl. Pres. Madras. Vol. I. Adlard & Son, Ltd., London, 1919. 3. Govindarajalu, E, Comparative Morphology of the Alangiaceae I, Nodes and Internodes, Proc. Nat. Inst. Sci., 1962a 4. Govindarajalu, E., Swamy, B.G.L., The Petiolar anatomy and the subgeneric classification of the Alangiaceae, Jour, Madras Univ., Madras, 1956. 5. Lushington, A. W. Vernacular list of Trees, Shrubs and Woody Climbers, Vol. II B, Tamil Index, Govt. Press, Madras, 1915. 6. The Wealth of India Vol. I. CSIR Publ., New Delhi, 1948. அழியாமை விதிகள் இயற்பியலில் மிகவும் அடிப்படையான மூன்று விதிகளான ஆற்றல் மாறாக் கோட்பாடு (conser vation of energy), நேர்கோட்டு உந்தம் மாறாக் கோட்பாடு (conservation of linear momentum), கோண உந்தம் மாறாக் கோட்பாடு (conser- vation of angular momentum) ஆகியன அறிவி யல் எழுச்சி பெற்ற காலந்தொட்டே அறியப் பட்டு வந்திருக்கின்றன. இவற்றை அழியாமை விதிகள் எனக் குறிப்பிடுவதும் உண்டு. இவ்விதிகள் தனித்த ஒரு பொருள் அல்லது பொருள்களின் சில இயற்பியல் தன்மைகள் (ஆற்றல், நேர்கோட்டு உந்தம், கோண உந்தம்) தனித்த நிலை யிலேயே இருக்கும் மட்டும் மாறுதலடைவதில்லை, எனத் தெரிவிக்கின்றன. இந்த அழியாமை விதிகள், பொருளின் இயக்கப் பாதையையோ அல்லது அதன் இயக்கத்திற்குக் காரணமான விசை களின் தன்மையையோ சார்ந்து இருப்பதில்லை. (இட வலச் சமச்சீரியல்பில் (parity) இது மீறப்பட்டுக் காணப்படுகின்றது). அதனால் தான் அழியாமை விதிகளை மட்டுமே கொண்டு பெரும் பொருள் (macro objects), நுண்பொருள்களின் (micro objects) வினை, வழி முறைகளோடு தொடர்புடைய புதிர் களை விடுவிக்க முடிகின்றது.