பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/544

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514 அழுகுதல்‌ (மருத்துவம்‌)

514 அழுகுதல் (மருத்துவம்) வலச் சமச்சீர் செயலி - 1 எனக் கொள்ளப்பட்டிருக் கின்றது.ஓர் அமைப்பின் இடவலச் சமச்சீர் செயலி என்பது அதில் உள்ள துகள்களின் இடவலச் சமச்சீர்ச் செயலின் பெருக்கற் பலனாகும். இதன்படி ஈ =, இவ்விரண்டும் சேர்ந்த அமைப்பின் p = + 1 ஆகும். ஆனால் ஈ இவை மூன்றும் சேர்ந்த + . அமைப்பின்ற = -1 ஆகும். FT ஒரு வினை வழிமுறை இடவலச் சமச்சீர் அழி வின்மை விதிக்கு உட்பட்டிருக்கின்றது என்றால், வினைக்கு முன்பும் பின்பும், அமைப்பின் இடவலச் சமச்சீர் சமமாக இருக்க வேண்டும். பொதுவாக இடவலச் சமச்சீர் மிகு வலிமை வினை, மின் காந்த வினைகளில் மட்டுமே அழியாமை விதிக்கு உட் பட்டதாய் அமைந்திருக்கின்றது. குறை வலிமை வினைகளில் இவ்வழியாமை விதி மீறப்பட்டிருக் கின்றது. படம் -1இல் காட்டப்பட்டுள்ள வினை ஒரு நியூட்ரானின் சிதைவாக்கமாகும். இது ஒரு குறை வலிமை வினை. வலப் பக்கத்தில் காட்டப்பட்டுள்ள வினையின் பிம்பம் இயற்கையில் நடைபெற இயலாத தாகும். ஏனெனில் சிதைவால் வெளிப்படும் எலெக்ட் ரான்கள் எப்பொழுதும் கோண உந்தத்திற்கு எதிர்த் திசையில் செல்கின்றன என்பது சோதனை வாயி லாக மெய்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. இடவலச் சமச் சீர் குறைவலிமை வினைகளில் மீறப்படலாம் என் பதை நேர்கேயானின் சிதைவாக்கத்தைக் கொண் டும் நிறுவலாம். நேர்கேயான் முக்கியமாக இரு வேறு வழிமுறைகளில் சிதைவுறுகின்றது. k+ k+ + எ இடவலச் சமச்சீர் அழிவின்மை நெறியின்படி முதல் வினையில் நேர்கேயான் P-யின் மதிப்பாக +1 ஐயும், இரண்டாவது வினையில் அதே நேர் கேயான் P-இன் மதிப்பாக - 1ஐயும் பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஒரே துகள் இரு வேறு P-இன் மதிப்புக்களைப் பெற்றிருக்க முடியாது. இது நீண்ட காலமாக ஒரு புதிராக இருந்து வந்தது. இதையே ட்டௌ -த்திட்டா புதிர் (tau-Theta puzzle) என்று கூறுகின்றார்கள். குறை வலிமை வினைகள் இடவலச் சமச்சீர் அழியாமை விதிக்கு உட்படவேண்டிய தில்லை என்று நிறுவிய பின்பு இப்புதிர் தெளிவு பெற்றது. குறை வலிமை வினைகள் மின்னேற்றம் மாற்றுச் செயலி (C) அழிவின்மை நெறிக்கும், இடவலச் சமச் சீர் (P) அழிவின்மை நெறிக்கும் உள்ளாகாவிட் டாலும், அவையிரண்டும் இணைந்த (CP) உட்படுகின்றன. செயலிக்கு மெ.மெ. நூலோதி Wigner, E.P. Symmetry and Conservation Laws, Physics Today, Vol. 17(3), March, 1964. அழுகுதல் (மருத்துவம்) இரத்த ஓட்டம் தடைப்படுவதால் ஏற்படும் திசுக்களின் சிதைவும் அழிவு உண்டாதலும் அழுகுதல் (gangrene) எனப்படும்.இது கை கால் விரல் களில்தான் அதிகமாக ஏற்படுகின்றது. இவைகளைத் தவிர உடல் உள்ளுறுப்புகளான குடல்வால், சிறு குடல், பித்தப்பை, கணையம் போன்ற உறுப்பு களிலும் காணப்படுகிறது. தமனி அடைபடுவதால் மட்டும் அழுகுதல் உண்டாகும்பொழுது தோல் பளபளப்பாகவும் மென்மையாகவும் இருக்கும். நோய்த் தாக்குதலுக்குத் தகுந்தபடி நிறம் வெளுப்பு, சிவப்பு, காவி, பச்சை அல்லது கறுப்பு நிறமாக மாறிக் காணப்படும். இந் நிறமாற்றம் இரத்த அணுக் களிலிருந்து உண்டாகும் இரும்பு உண்டாகும் இரும்பு சல்ஃபேட்டால் தான் ஏற்படுகிறது. இத்துடன் அழுகுதல் நிகழ்ந்த இடம், தொடு உணர்வு, வெப்பம், வேலை செய்யும் திறன், இரத்த ஓட்டம் முதலியவை இன்றி நீர்ப் பசையற்றுச் சுருங்கித் தோன்றும். இந்நிலையில் நீர் அற்ற கறுத்த அழுகிய பகுதிக்கும், உயிருள்ள பகுதிக் கும் இடையே ஓர் எல்லைக் கோடு காணப்படும். (எடுத்துக்காட்டு: முதியவர்களுக்கு ஏற்படும் அழுகு தல் நோய் (senile gangrene). இதற்கு மாறாகச் சிலசமயம் தமனி மட்டுமின்றிச் சிரையும் சேர்ந்து அடைபடும் நிலையிலும் அழுகுதல் ஏற்படும்.அழுகும் இடம் தொற்றுடன் வீங்கி நாற்றத்துடனும், கொப் புளங்களுடனும் தோன்றும். அப்பொழுது அழுகிய பகுதிக்கும் உயிருள்ள திசுக்களுக்கும் இடையே எல்லைக்கோடு காணப்படாது. தோலுக்கடியில் சில சமயம் அமுக்கினால் காற்று இருப்பது தெரிய வரும். இப்படி வீங்கிய நிலையில் ஏற்படும் அழுகுதல், நீரிழிவு, குடல் நெரிப்பு (strangulated bowel) போன்ற நிலைகளில் காணப்படும். ஆனால் சில வேளைகளில் இவ்வீக்கம் கை கால்களில் சீராகப் பரவாது, தீவிரத் தொற்றுடன் தோலில் தள்ளித் தள்ளித் திட்டுத் திட்டாகப் பரவிக் கறுத்து அழுகிக் காணப்படும். இத்தொற்றுடன் அழுகுதல் ஏற்படக் காரணம் நிண நீர்க் குழாய், அல்லது திசுக்களின் மூலமாக அழற்சி யுடன் நோய் பரவுவதே ஆகும். அழுகுதல், தமனி அடைப்புக்கான இரண்டாவது (secondary) காரணமாகவே பெரும்பாலும் ஏற்படு கிறது. எடுத்துக்காட்டாக: முதிய வயதில் உண்டாகும் தமனி இறுக்கம் (arterosclerosis) நோயுற்ற இதயம்