522 அழுத்த அளவிகளும் அழுத்தத்தை அளத்தலும்
522 அழுத்த அளவிகளும் அழுத்தத்தை அளத்தலும் அலோக (nonmetal) அடைப்பிகள் செல்வக வடி விலும், 'V', 'O' வடிவுகளிலும் உள்ளன. உருள் தொடுகைத் தாங்கிகளுக்கு (rolling contact bearings) என அடைக்கூடு வகை (cartridge) அடைப்பிகள் உள்ளன. எக்கிகளுக்கான (pumps) எந்திர அடைப்பிகளும், சுழலிகளுக்கான (turbines) கரி வளையமும் (carbon ring), 'சிக்கற்சுழல்' (labyrinth) அடைப்பிகளும் சிறப்பு அடைப்பிகளுள் அடங்கும், நூலோதி McGraw-Hill Encyclopaedia of Science and Techno- logy, Vol. 10, 4th Edition, McGraw-Hill Book Company, New York, 1977. முறைப் படுத்தலும் தலையாய செயலாகும். உயரழுத் தம், உயர் வெப்பநிலைகளில் செயலாற்றுகின்ற உலை களின் பாதுகாப்பிற்கும் அழுத்தத்தை அளவிடுவது தேவையாகும். சீரான உற்பத்திக்கும் பாதுகாப்பான நீர்மம் அழுத்த அளவிகளும அழுத்தத்தை அளத்தலும் ஓரலகுப் பரப்பின் மீது நீர்மம் அல்லது வளிமம் இவற்றால் ஏற்படும் விசை அழுத்தமாகும். அழுத்தம் பல்வேறு வகைகளில் பல்வேறு கருவிகளைக்கொண்டு அளக்கப்படுகிறது. வளிமண்டல அழுத்தம் ஃபார்ட் டின் பாரமானியை (Fortin's barometer) அல்லது நீர்மமற்ற (aneroid barometer) பாரமானியைக் கொண்டு அளக்கப்படுகிறது. அழுத்தத்தை அளக்க நீர்மங்கள், குறிப்பாகப் பாதரசம் பயன் படுத்தப்படு கிறது. அழுத்தம் டைன்/செ.மீ அல்லது நியூட்டன்/மீ என்ற அலகில் அளக்கப்படவேண்டும். ஆனால் நடைமுறையில் பாதரசத் தம்பத்தின் செங்குத்து உயரத்தில் இது அளக்கப்படுகிறது. இதன்படி வளிமண்டல அழுத்தம் 79 செ.மீ. எனப்படுகிறது. இது 76 செ.மீ. செங்குத்து உயரமுள்ள பாதரசத் தம்பம் (column) ஒரு புள்ளியில் எவ்வளவு அழுத்தத்தைக் கொடுக்குமோ அதற்குச் சமம். அழுத்தத்தின் அளவை இருவகைப்படும். ஒன்று அளவை அழுத்தம் (gauge pressure), மற்றொன்று தனி அழுத்தம் (absolute pressure). அளவை அழுத் தம் என்பது கொடுக்கப்பட்ட அழுத்தத்திற்கும் லளிமண்டல அழுத்தத்திற்கும் உள்ள வேறுபாடு. தனி அழுத்தம் என்பது வளிமண்டல அழுத்தத்தோடு கூடிய மொத்த அழுத்தமாகும். ஆய்வுக்கூடங்களில் அழுத்தத்தை அளப்பது மிக இன்றியமையாதது. ஏனெனில், இயற்பியல், வேதியியல், உயிரியல் செயல் பாடுகளில் அழுத்தம் பல விளைவுகளை ஏற்படுத்து கிறது. தொழிற்சாலைகளில் அழுத்தத்தை அளத்தலும் படம் 1. U வடிவ நீர்ம அழுத்தமானி செயற்பாட்டுக்கும் பாய்மங்களை (நீர்மம், வளிமம் போன்றவை ) ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாற்றுவதற்கும், பாய்மங்களில் ஓட்டம், பாய்ம விசைகள் (hydraulic forces) ஆகியவற்றைச் சீர் அமைத்துச் செயல்படச் செய்யவும் அழுத்த அளவை மிகவும் பயன்படுகிறது. அழுத்தத்தை அளக்கப் பயன் படும் கருவிகள் அழுத்தமானிகள் (pressure gauges) எனப்படும். அழுத்தமானிகள் நீர்மத் தம்பங்களை உடையவை, மணிவடிவமுடையவை, நீள் தன்மையுடைய பொருள் கொண்டவை, ஆற்றல்மாற்றி அடிப்படையில் அமைந் தவை என நான்கு வகைப்படும். நீர்மத் தம்ப அளவிகள், இவை பாரோ மீட்டர்கள், மானோ மீட்டர்கள் எனப்படும். இவற்றை நீர்ம அளவை மானிகள் எனலாம். இதில் U வடிவக் குழாய் ஒன்றில் பாதரசமோ, ஆவியாகாத நீர்மமோ இருக்கும்.(படம்-1) ஒரு பக்கக்குழாய் வளி மண்ட லத்தை நோக்கித் திறந்திருக்கும். மற்றொரு U குழாய் அழுத்தம் அளக்கப்படும் பகுதியுடன் இணைக்கப்