அழுத்த அளவிகளும் அழுத்தத்தை அளத்தலும் 523
பட்டால் குழாயில் நீர்மமட்டங்கள் மாறுபட்ட நிலைகளில் நிற்கும். நீர்மமட்டத்தில் உள்ள வேறுபாடு நீர்ம உயரத்தில் அழுத்தத்தைத் தரும். இதை நீரின் அடர்த்தியால் பெருக்க அழுத்த அளவு கிடைக்கும். மணிவடிவ அளவிகள். ஒரு கீழ்நோக்கிக் கவிழ்க் கப்பட்ட மணி வடிவ அமைப்பு இதில் உள்ளது. இது பாதரசம் அல்லது எண்ணெயில் சிறிது அமிழ்த்தி லைக்கப்பட்டிருக்கும் (படம் - 2) இந்த நீர்மம் ஒரு பக்கம் கொடுக்கப்படும் அழுத்தத்தையும் மறுபக்கம் உள்ள வளிமண்டல அழுத்தத்தையும் பிரித்து நிற்கிறது. அழுத்தத்தைப் பொறுத்து மணி வடிவப்பகுதி மேலும் கீழுமாக நகரும் போது அத னுடன் இணைக்கப்பட்ட சுருள்வில், குறிகாட்டி ஆகியவை நகர்ந்து அழுத்தத்தை நேரடியாகக் காட்டும். இரு அழுத்தங்களை ஒப்பிடவும் இக்கருவி பயன்படுகிறது. அழுத்த அளவிகளும் அழுத்தத்தை அளத்தலும் 523 வற்றைப் பொறுத்து இது அழுத்தத்தைத் துல்லிய மாக அளக்கும். போர்டான் சுருள்வில் அழுத்த அளவி, இயந்திரப் பகுதிகளைக் கொண்ட அழுத்தத்தை அளக்கும் கருவி. இதில் வளைந்த அல்லது முறுக்கிய உலோகக் குழாய் உள்ளது. இது தட்டையான குறுக்கு வெட்டுப்பரப்பு உடையது. இதன் ஒரு முனை மூடப்பட்டு மறுமுனை அழுத்தம் அளக்கப் படும் பகுதியுடன் இணைக்கப்படுகிறது. அழுத்தம் அதிகரிக்கும்போது குழலின் குறுக்கு வெட்டுப் பரப்பு வட்டமாக மாற முயலும். அத்தோடு வளைந்த குழாய் நேராக நிமிரத் தொடங்கும். இதனால் மூடிய முனை நகர்கிறது. மூடிய முனை நகரும் தொலைவு அழுத்தத்தைப் பொறுத்து அமைவதால் அது அழுத் தத்தின் அளவைக் குறிக்கும். நகரும் முனை ஒரு குறி முள்ளுடன் இணைக்கப்பட்டுள்ளது. குறிமுள் அள வுத் தகட்டில் நகர்ந்து அளவைக் காட்டும் (படம்-3). நீர்ம அழுத்தம் வளிமண்டல அழுத்தம் படம் 2. மணிவடிவ அழுத்த அளவி நீள்தன்மை கொண்ட அளவி, இதில் அழுத்தத் திற்குத் தகுந்தவாறு நீண்டு சுருங்கக் கூடிய அமைப்பு உள்ளது. இவ்வமைப்பில் போர்டான் குழாய், நகரும் மென் தகடு, அல்லது அடுக்குப்பை( bellows), இவற்றில் ஏதாவது ஒன்று அளவைப் பொருளாகச் செயல் படும். அழுத்தம் மாறுபடும் போது இவ்வமைப்பு நகரும்படியோ விசையைக் கொடுக்கும்படியோ இருக்கும். அப்படி நகரும்போது இதனோடு இணைக் கப்பட்ட சுருள்வில், குறிகாட்டி ஆகியவை இயங்கி அழுத்தத்தின் அளவை அளவித் தகட்டு முகப்பில் நேரடியாகக் காட்டும். இவை நீர்ம அளவிகளை விடச் செயல்திறன் மிக்கவை; செயல்முறை வரம்புகள் அற்றவை. இவற்றின் அமைப்பு, அமைக்கப் பயன் படுத்தும் பொருள் நுட்பம் நுட்பம் (precision) ஆகிய அழுத்தம் படம் 3. போர்டான் குழல் போர்டான் குழாய் பயன்படுத்தும் அளவிகள் 01மி.மீ. இருந்து 0.1 மி.மீ. வரை அளக்க முடியும். இது வெற்றிடத்தில் உள்ள மிகக் குறைந்த அழுத் தத்தைக் கூட அளக்க வல்லது. இது 0.1-2.0% துல்லியமாக அளக்க வல்லது. இந்தப் போர்டான் குழாய் குழல்வடிவமாகவோ, வட்டச்சுருள் வடிவமா கவோ (spiral) நீள் சுருள் வடிவமாகவோ (helical) அமைக்கப்படலாம். இவை தாமிரம், துருப்பிடிக்காத எஃகு, நிக்கல்-இரும்பு உலோகக் கலவை இவற்றில் ஏதாவதொன்றால் செய்யப்படு தேவைக்கேற்பச் திறன-போர்டான் குழாய் அளவிகள் உள் அழுத்தம்,