526 அழுத்த அனற்கலம்
526 அழுத்த அனற்கலம் அழுத்தத்தைப் பொறுத்து மின்தடை மாறும் கம்பிகளும் பயன்படுத்தப்படுன்றன. கம்பியில் அழுத் தம் செயல்படும்போது அது அமுக்கப்பட்டு அதன் மின்தடை மிகுதியாகும். தங்கம், குரோமியம், மாங்க னீஸ் கம்பிகள் இதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் மின்தடையை வெப்பநிலை தாக்காது. சில கருவிகளில் கம்பியின் உருமாற்றம் பயன் படுத்தப்படுகிறது. ஒரு கம்பி அழுத்தத்திற்கு உட் படுத்தப்படும்போது அது நீளும்படி அமைக்கப் படுகிறது. சும்பி நீளும்போது அதன் விட்டம் குறைந்து மின்தடை மிகும். இதன் அடிப்படையில் சில கருவிகள் அமைக்கப்படுகின்றன. காந்த ஆற்றல் மாற்றி அழுத்த அளவிகள். இவ் வகை அளவிகளில் காந்தச் சுற்று ஒன்று இருக்கும். இதன் ஒரு பகுதி அழுத்தத்தால், இயங்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். இந்த இயக்கம் போர்டான் குழல், மென்தகடு, அல்லது அடுக்குப்பை இவற்றுள் ஏதாவதொன்றால் தோற்றுவிக்கப்படலாம். இந்த இயக்கம் காந்தச் சுற்று நிலைமத்தை அல்லது காந்தத் தயக்கத்தை மாற்றும். இவை நேரடியாக அளக்கப்பட்டு அழுத்தம் அறியப்படுகின்றது. மின் நிலைம ஆற்றல் மாற்றி அழுத்த அளவிகள். ஓர் அழுத்தம் கண்டறியும் அமைப்பின் இயக்கத்தால் காந்த உள்ளீட்டுக் கட்டை நகரும்படி அமைக்கப் படுகிறது. காந்தக் கட்டை தன் இயக்கத்தால் ஒரு மின் சுற்றில் அதன் மின் நிலைமமும் அதன் நிலைம எதிர்ப்பும் மாறும்படிச் செய்கிறது. படிக ஆற்றல் மாற்ற அழுத்த அளவிகள். அழுத் தம் கண்டறியும் அமைப்பால் ஒரு படிகம் அழுத்த படும்போது அதன் பக்கங்களுக்கிடையே ஒரு மின் அழுத்தம் தோன்றுகிறது. இதைத் தோற்றுவிக்க அழுத்தம் சரியான அச்சில் கொடுக்கப்படும்படி படி கம் இருக்க வேண்டும். குவார்ட்ஸ், டூர்மலின் போன்ற இயற்கைப் படிகங்களும், ரோச்சல் உப்பு. பேரியம் டைட்டானேட் போன்ற செயற்கைப் படி கங்களும் இதற்குப் பயன்படுகின்றன. இயற்கைப் படிகங்கள் சிறப்பாகச் செயல்படும். இரண்டுக்குமே பக்கங்களின் இடையே தோன்றும் மின் அழுத்தத் தைப் பெருக்க ஒரு பெருக்கி தேவைப்படும். இவை இயக்கத்திலிருக்கும் அழுத்தத்தை மிக விரைவாக அளக்க வேண்டிய இடங்களில் பயன்படுகின்றன. மின் தேக்கி ஆற்றல் மாற்றி அழுத்த அளவிகள். இவற்றில் ஒரு மெல்லிய தகடு உள்ளது. இது அழுத் தத்தால் இயங்க வல்லது. இதே தகடு ஒரு மின் தேக்கியின் தகடாகவும் செயல்படும். எனவே அழுத்த மாற்றத்தால் தகடு நகரும்போது மின்தேக்கி யின் மற்றொரு தகட்டிற்கும் இதற்கும் இடையே உள்ள தொலைவு மாறுகிறது. இதனால் மின் தேக்கியின் மின் தேக்கு திறன் மாறுகிறது. இந்த மாற்றம் ஒரு மின்சுற்றில் வீச்சு அல்லது அதிர் வெண்ணை மாற்றும்படி அமைக்கப்படுகிறது. இவ் 0.25% துல்லியமாக அளக்கக் அளவிகள் வகை கூடியவை. எஸ்.சோ. நகரும்கட்டை x, X2 படம் 8. மின் நிலைம ஆற்றல் மாற்றி அழுத்த மாற்றத்தைப் பொறுத்துக் காந்த உள் ளீட்டுக் கட்டை நகரும். கட்டை சமநிலையில் இருக்கும்போது இரு சுருள்களிலும் மின் நிலைமம் சமமாக இருக்கும். அழுத்த மாற்றத்தால் கட்டை ஒரு பக்கம் நகர்ந்ததும் இரு மின் நிலைங்களின் தகவு மாறும். இந்த மாற்றம் மின் நிலைமச் சுற்று அமைப்பில் அளக்கப்படுகிறது. இது அழுத்த மாற் றத்தை நேரடியாகத் தரும். அழுத்த அனற்கலம் காற்றுப் புகாமல் மூடி வைக்கத்தக்க ஒரு கலமே இது. நீர்மங்களின் கொதிநிலையை வீட அதிகமான வெப்ப நிலையில் இதில் பொருள்களைச் சூடேற்றலாம். இது வலிவான எஃகினாலான கலம். இது அதிகமாக வெப்பத்தைத் தாங்குமாறு அமைக்கப்படும். அழுத்த மானியும், அழுத்தம் குறிப்பிட்டதோர் அளவைவிட அதிகமானால் திறந்து அதைக் குறைக்கும் காப்புக் கட்டுப்பாட்டிதழும் (valve) இதில் இருக்கும். இதில் பல வகைகள் உள. மருத்துவமனைகளில், அறுவைச் சிகிச்சைக் கருவிகள் முதலியவற்றைத் தூய்மை செய்ய 115°C வெப்பநிலையில் கொதிக்கும் நீரில் அவை இடப்படுகின்றன. பல வேதியியல் தொழில் களில் பொருள்களை வேக வைக்க இது பயன்படு கிறது. மெழுகுவர்த்திகள், சவர்க்காரப் பொருள்கள் முதலியவற்றின் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது. உயர்ந்த அழுத்தங்களில் வேதியியல் வினைகளை நிகழத்த அழுத்த அனற்கலம் மிகவும் ஏற்றது.