பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/558

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528 அழுத்த ஆற்றல்‌ வடிவமாற்றி

528 அழுத்த ஆற்றல் வடிவமாற்றி வலிமை கொண்டது. இது வானொலி அலைபரப்பி களில் (radio transmitters) அலைவெண் கட்டுப் பாட்டுக்காகவும் (frequency centrol), தொலைபேசித் தகவல் தொடர்பு அமைப்புகளில் வடிகட்டிகளாகவும், வானொலி வாங்கிகளில் (radio receivers) சரிகச்சித மான இசைப்புக்காகவும் (sharp tuning) பயன் படுத்தப்படுகிறது. சமச்சீர்மை மையம் (centre of symmetry) இல் லாத படிகங்களில் மட்டுமே அழுத்த மின்னாற்றல் கிடைக்கும். இந்தப் படிகங்களைப் பயன்படுத்து வதால் மிகுந்த அலைவெண் நிலைப்பை (frequency stability) அடைய முடிகிறது. எடுத்துக்காட்டாக இத்தகைய படிகங்கள் வானூர்தித் தரை தொடர் பமைப்புகளில் (aircraft to ground communication ) பயன்படுத்தப்படுகின்றன. Z படம் 1. படிசு அமைப்பு இந்தப் படிகங்கள் படத்தில் (படம் 1) காட்டி யுள்ளபடி அமைந்திருக்கின்றன. இவற்றின் குறுக்கு வெட்டுத் தோற்றம் அறுகோணப் பட்டக வடிவிலும், இரண்டு முனைகளும் கூராகவும் இருக்கும். இரண்டு முனைகளையும் சேர்க்கும் கோடு, ஒளி அச்சு (optical axis) என்றும், (z-z) ஆறுகோணங்களையும் இணைக் கும் மூன்று கோடுகளும் மின்னச்சுகள் என்றும் (K - X, X'-x', R - "x"), ஆறு பட்டைகளின் மையத்தில் செங்குத்தாகச் செல்லும் மூன்று கோடுகள் இயக்க அச்சுகள் என்றும் (mechanical axis) (y-y, y'-y' y-y") வழங்கப்படுகின்றன. படிகங்கள் எப்படி, வெட்டப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன தைப் படம் 2இல் காணலாம். என்ப ஒரு படிகத்தின் மீது து மாறுமின்னோட்டம் (a.c.) செலுத்தப்பட்டால் அந்தப் படிகம் அதிரத் (vibrate) தொடங்குகிறது. மின்னோட்டத்தின் அலை வெண்ணைப் (frequency) படிகத்தின் இயற்கை அலை வெண்ணோடு (natural frequency) ஒன்றச் செய் தால் அதிர்வுகள் ஒத்தலையும் அலைவெண்களாக (resonant frequencies) மாறிப் படிகம் செறிவாக (intensely) அதிரத் தொடங்குகிறது. ஒரு படிகத் திற்கு ஒத்தலையும் அலைவெண்கள் நமக்கு எப்படித் தேவையோ அதற்குத் தகுந்தபடி அதன் புற அளவு களும் (dimensions), அதன் இயக்க அலைவுகளும் (mechanical oscillations), அதனுடைய வெட்டுப் பாங்கும் (orientation cut)வடிவமைக்கப்படுகின்றன. படி எடுத்துக்காட்டாக, ஒரு குவார்ட்ஸ் கத்தின் சிறப்பியல்புகள் (characteristics) அடுத்த பக்கத்தில் குறிக்கப்பட்டுள்ளன. படிகங்களின் மூலமாக 100 மெகாஹெர்ட்ஸ் (MHz) அலைவெண்ணிலிருந்து 100 ஹெர்ட்ஸ் (Hz) அலைவெண் வரை உருவாக்க முடியும். 100 மெகா ஹெர்ட்ஸ் அலைவெண் தேவையெனில், படி கங்கள் ஒன்றின்மேல் ஒன்றாக இணைக்கப்பட்டும் (over tone), 100 ஹெர்ட்ஸ் அலைவெண் தேவை யெனில் படிக கங்கள் வலயங்களாக (rings) வெட்டப் பட்டும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வேட்டும் பணிக்கு (cutting)வைரச் சாணை வெட்டு (diamond grinding), மின் பொறி அரித்தல் வெட்டு (spark erosion), புறஒலி எந்திரவினை வெட்டு (ultrasonic machining) ஆகிய முறைகள் தகுந்த பாதுகாப்புடன் கையாளப்படுகின்றன. நாளாவட்டத்தில் ஒரு படிகத்தின் அலைவெண் நிலைப்பு (frequency stability) மாறிப் போகுமானால், அது முதிர்வு (aging) என்று அழைக்கப்படுகிறது. அந்த முதிர்வு வராமலிருக்கப் படிகம் வெட்டப்பட்ட பிறகு அதில் எந்தவிதமான சாணைப் பொருள்களோ (grinding compound), புதையுண்ட துகள்களோ