அழுத்தக்கலம் 533
哈 அழுத்தக் கட்டுப்பாட்டிற்கு எடுத்துக்காட்டு. படம் 2இல் ஓர் உலையின் (furnace)அழுத்தத்தை எளிதாகக் கட்டுப்படுத்தும் தன்னியக்க அமைப்பு காட்டப் பட்டுள்ளது. உலையில் எரி எண்ணெய் எரிக்கப் படுவதால் அழுத்தம் ஒரு குறிப்பிட்ட அளவைவிட அதிகமாகும்பொழுது ஓர் ஆடும் தட்டைக் கட்டுப் படுத்திக் குறிப்பிட்ட அளவுக்கு அதைத் திறப்பதால் அழுத்தம் குறைந்து, குறிப்பிட்ட அளவை அடை கின்றது. ஆகவே, எப்பொழுதும் இந்தத் தன்னியக் கத்தால் உலையின் அழுத்தம் ஒரே அளவிலிருக்கும். எந்த ஓர், அளவையும் ஒரு குறிப்பிட்ட அளவில் வைக்கத் தன்னியக்கம் இன்றியமையாதது. தன்னியக் கத்தின் இயல்புகள் அதில் நாம் பயன்படுத்தும் சாதனங்களைப் பொறுத்து அமையும். தன்னியக்கத் தின் வேகம், நிலைப்பு (stability) முதலியன தன்னி யக்கத்தின் அமைப்பைப் பொறுத்தே உள்ளன. அழுத்தக்கலம் பொருளின் க.அர.ப. அழுத்தத்தைத் உள்ளடைக்கப்பட்ட அல்லது கோளவடிவக் தாங்கக்கூடிய பொருள் கொள்கலமே அழுத்தக்கலம் (Pressure Vessel) எனப்படுகிறது. நீர்மங்களையும், வளிமங்களையும் உயர் அழுத்தத்தில் தேக்க, அழுத்தக்கலங்கள் பயன்படுகின்றன. உயர் அழுத்தத்திலுள்ள கலங்கள் வெடித்தால் பொருளும் மக்கள் வாழ்வும் சிதையும். ஆதலால் அழுத்தக் கலங்களின் வலிமை ஒரு முக்கிய மான கூறுபாடாகும். இத்தகைய கலங்களின் பாது காப்புக்கான விதிமுறைகள் குறிப்பிட்ட நிலைகளில் கொள்கலனின் வடிவமைப்பு தாங்க வலிமையை வரையறுக்கின்றன. வேண்டிய கட்டுமானம் (Construction). பெரும்பாலான அழுத்தக்கலங்கள் குறைந்த அழுத்தங்களை மட்டுமே தாங்கினால் போதும் என்பதால் அவை குழாய் கட்டி களாலும், தகட்டாலும் உருளை வடிவில் அமைக்கப்படுகின்றன. சில அழுத்தக் கலங்கள் உயர் அழுத்தங்களைத் தாங்க வேண்டிய தேவை உள்ள தால் அதற்கேற்ற வலிமையைத் தர அவை தடிப் பான சுவர்களால் வடிவமைக்கப்படுகின்றன. நீரியல் உருளைகளும் காற்றியல் உருளைகளும் அழுத்தக் கலனை ஒத்த எந்திர உறுப்புகளாகும். கலங்களின் கட்டுமான முறைகள் அவற்றின் விட்டம், சுவர்த்தடிப்பு, உருளையின் முனைக் கட்டு மான அமைப்பு ஆகியவற்றைச் சார்ந்து அமை அழுத்தக்கலம் 533 கின்றன. மிக அதிகமான வலிமைக்கு எடைமிக்க வடிப்புகளைப் (forgings) பற்றவைத்து ஒன்றிணைக் கலாம். இயல்பான கலங்களை உருட்டிய தகடுகளால் தரையாணிகள் மூலம் பிணைத்து ஒன்றாக இணைக் கலாம். அழுத்தக்கலங்களில் கூட்டுச் சுவர்த் தகைவு (shell stress) உருளை வடிவக் கலங்களின் முனைக் கட்டுமான வகையைச் சார்ந்து அமைகின்றது. அவற் றின் இணைப்பு பற்றவைப்பாலோ தரையாணியால் மூட்டியோ வார்க்கப்பட்டோ உருவாக்கப்பட்டிருக் கலாம். இந்தக் கூட்டுச்சுவர்ப் பொருளின் வகையைப் பொறுத்தும், அதாவது, நொறுங்கும் இயல்புடை யதா நீளும் இயல்புடையதா என்பதைப் பொறுத் தும், இயக்கம், அழுத்தம், வெப்பநிலை போன்ற பிற புற நிலைமைகளைப் பொறுத்தும் அமைகின்றன. பாதுகாப்பான இசைந்த தகைவு (allowable stress ) இந்த மாதிரிகளைக் கருதியே வடிவமைக்கப்படு கின்றது. எல்லா அழுத்தக் கலங்களும் அக அழுத்தத் துக்கு ஆட்படுகின்றன. என்றாலும் சில நேரங்களில் அவற்றின் மீது புற அழுத்தங்களும் செலுத்தப்படுவ துண்டு. இந்தப் புறஅழுத்தம் அதிகமானால் பக்க, ஓரச் சுவர்கள் அமுங்கிக் குலைய வாய்ப்புள்ளது. இது, கலம் செய்யப்பட்ட பொருளின் மீட்சியைப் (elasticity) பொறுத்தது. உய்யச் சுமைகளால்(critical உய்ய அழுத் loads) குலையும் தூண்களைப்போல தங்களால் (critical pressures) அழுத்தக்கலங்கள் நொறுங்குகின்றன. மெல்லியச் சுவர்க் கலம் t<d/10 d அழுத்தக் கலம் வடிவமைப்பு (Design). ண்சுவர்க் கலம் t>d/10 மெல்லிய சுவர்களை டைய அழுத்தக்கலங்களின் சுவர்களின் அகலம் முழுதும், அதாவது, t என்ற தடிப்பு முழுதும் ஒரே சீரான தகைவுகளைக் கொண்டதாக இருக்கும். தடிப்பைப்போல விட்டம் d, 10 மடங்காக இருந் தால் மட்டும் இது பொருந்தும். p என்ற அழுத்தமும் 81 என்ற கூட்டு சுவர்த் தகைவும், பரிதியின் திசை யில் பெருமமாக இருக்கும். இந்தத் தகைவின் மதிப்பு