பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/565

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழுத்தக்‌ கொப்பறை 535

குழாய்த் பொருத்தமைப்புகள் (plpe fittings) பேணு தல், பணிகளுக்கான உட்புகுதுளைகள் (man hole) போன்றவை தலையாய கலப்பகுதிகளாகும். தகுந்த துணைக்கருவிகள்(appliance) இல்லாத அழுத் தக் கொப்பறைகள் சிறந்த பயனைத் தரா திறம்பட இயக்குவதற்கும், பயனளிக்கவும், பின்வரும் துணைக் கருவிகள் தேவைப்படுகின்றன. அவையாவன: 1. அழுத்த நிலைக்காட்டி (pressure gauge) 2. வெப்ப நிலைக்காட்டி (temperature indicator) 3. பாய்மக் கட்டுப்படுத்தி (fluid regulator) 4. அழுத்தநிலைக் கட்டுப்படுத்தி (pressure controller) 5. வெப்பநிலைக் கட்டுப்பாடு (temperature control) 6. பாதுகாப்புக் கருவிகள் (safety devices), என்பனவாகும். அழுத்தக் கலன்களின் முக்கிய பகுதிகள்: 1. சுவர்க்கூடு (shell) 2.தலைப்பகுதி அல்லது முடிப்பகுதி (head) 3. பீற் றுக்குழல் (nozzle) 4. இணைப்பு அமைப்பு (flange) 5. தாங்கிகள் என்பனவாகும். பேணுதல் (maintenance). அழுத்தக் கொப்பறை களின் வெளிப்பகுதி தூய்மையாகவும், நீர்க்கசிவின்றிக் காய்ந்தும், வண்ணம் பூசப்பட்டும் இருக்க வேண்டும். அதுபோன்று உட்புறமும், தூய்மையாகவும் எவ்வித கசடும் இல்லாது இருக்க வேண்டும். அடிக்கடி கம் பித்தேய்ப்பான் (wire brush) கொண்டு தூய்மைப் படுத்தல் வேண்டும். துருப்பிடிக்காவண்ணம் பூச்சுகளி னால் வண்ணம் பூசப்பட்டிருக்க வேண்டும். கசடு களை அவ்வப்போது தகுந்த கரைப்பான்களைக் அழுத்தக் (solvents) கொண்டு நீக்க வேண்டும். கொப்பறைகள் உறுதியான தாங்கல்களால் (sup. என்றும், தகைவு ports) தாங்கப்பட்டுள்ளனவா மாறுதல் இல்லாது இருக்கின்றனவா என்றும் அவ்வப் போது சோதிக்க வேண்டும். வரம்பு மீறிய அழுத்த நிலையினாலும், வெப்பத் தகைவினாலும் (thermal stress) எவ்வித ஆபத்தும் ஏற்படாதவாறு இருக்கத் தகுந்த பாதுகாப்பு அடைப்பிதழ்கள் (safety valves) தேவை. காற்று (wind), பனி (snow) ஆகியவற்றி னால் ஊறுபடாதவாறு பாதுகாப்பது அவசியம். அழுத்தக் கொப்பறைகளுக்கான உலோகங்கள். அழுத் தக் கொப்பறைகளுக்கான உலோகங்களைத் தேர்ந் கருதப்பட தெடுக்கும் முக்கியமாகக் வேண்டிய குறிப்புகள் பின்வருமாறு: பொழுது வெப்பநிலை 200°செ. கி.இலிருந்து 600° செ.கி. வரை தாங்க வேண்டும். அழுத்த நிலை - வெற்றிட அழுத்தத்திலிருந்து (vacuum pressure) 3000 கி.கி./ சதுர செ.மீ.வரை தாங்க வேண்டும். வேதியியல் வினைக்கும் உட்படாதிருத்தல், வேறுபடுசுமை (varia ble dead) ஏற்றல். உலோகத்தின் விலை (cost) ஆகிய வையும் கருதப்படும். அடக்க விலையினைப் பொறுத்தவரை வார்ப் பிரும்பு, எஃகுக் கலவை ஆகியவற்றினாலான கலவை அழுத்தக் கொப்பறை 535 மலிவானது. அலுமினியம், செம்பு, நிக்கல், இவற்றின் கலவைகள் ஆகியவற்றாலானவை சற்றே விலை' அதிகம். டைட்டேனியம் (titanium), சிர்கோனியம் zirconium) போன்றவை மிக அதிகச்செலவினங் களை உடையவை. அலுமினியத்தாலான கொப்பறைகள் பெரும்பா லும் கரிமச் சேர்மானமுள்ள (organic) கலவையாலா னவை. இவை உணவுப்பொருள்கள், ஹைட்ரஜன், நைட்ரஜன், கடல்நீர் போன்றவற்றைத் தேக்கி வைக்கப் பயன்படும். ஆனால் அலுமினியம், குறைந்த அளவு தாங்குதிறனும், குறைந்த உருகுநிலையும் (melting point) உடையது என்பதால் அனைத்து வகைக் கொப்பறைகளுக்கும் பயன்படுத்துதல் இய லாது. செம்புக்கலவைகளான கலன்கள் உணவுப்பண் டங்களைக் கெடாமல் வைத்திருப்பதற்குப் பயன்படு கின்றன. பற்றவைப்பு (welding) வேலைகளில் வளிமங் களைக் கொண்டிருக்கவும், துருப்பிடிக்காத அமைப் பும் இத்தகைய கலன்களின் சிறப்புக் கூறுபாடுகளா கும். துருப்பிடிக்கக்கூடியதும்,பேரளவு வெப்பநிலை யிலும் உள்ள பாய்மங்களைவைத்திருப்பதற்கும் நிக்கல் கொப்பறைகள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. அழுத்தக் கொப்பறைகளின் வகைகள், குறை அழுத் தக் கொப்பறைகள் 200 வளிமண்டல அழுத்தத்திற் கும் குறைவானவை. மிகு அழுத்தக் கொப்பறைகள் 200 வளிமண்டல அழுத்தத்திலிருந்து 3000 வளி மண் டல அழுத்தம் வரை உடையவை. எனவே அழுத்தக் கொப்பறைகள் என்பவை தனிப்பட்ட எந்திரமோ அமைப்போ அல்ல. பலவித மான தொழிற்கூடங்களிலும் பல்வேறு வகையில் அழுத்தக்கொப்பறைகள் இன்றியமையாத உறுப்பா கின்றன. தகுத்த உலோகக்கலவையைக் கொண்டு வேண்டிய அழுத்த நிலை-வெப்பநிலைக்கு ஏற்ப, துணைக்கருவிகளையும்பாதுகாப்புச்சாதனங்களையும் கொண்டு நன்றாகப் பேணும்படி அழுத்தக் கொப் பறைகள் திட்டமிடப் படுகின்றன. இத்தகைய அழுத் அமைப்புகளோடும் தக் கொப்பறைகள் சிறப்பான சீரான தொழில்நுட்பங்களுடனும் அமைந்திருக்கும். கையில் எடுத்துச்செல்லக்கூடிய எளிமையான அமைப் பிலிருந்து எரிபொருள் எண்ணெய்த்தூய்மிப்புத் மிகப்பெரிய அழுத்தக் தொழிற் கூடங்களிலுள்ள வகையிலும், வெவ்வேறு அமைப்பிலும், வடிவிலும் அழுத்தக் கொப்பறைகள் கொப்பறைகள்வரை, உள்ளன. இவை பாடுகளுடன் தொழில் வளத்துக்கும் வளர்ச்சிக்கும் சிறப்புற உதவுகின்றன. எண்ணற்ற வகையில், மேம் கே.ஆர். கோ