பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/568

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538 அழுத்தமானிகள்‌

538 அழுத்தமானிகள் பயன்படுத்தப்படுவதுடன் தரமான களிலும் பயன்படுத்தப்படுகின்றது. உயர் ஆய்வு தொட்டி வடிவ அழுத்தமானி. இதில் நீர்த் தொட்டி போன்று ஒரு புறமும், மிகக் குறைந்த குறுக்குப் பரப் புடன் கூடிய மற்றொரு புறமும் உள்ளன. (படம்-2). நீர்த் தொட்டியின் குறுக்குப் பரப்பு, சிறு புழைக் குழாயின் குறுக்குப் பரப்பைவிட 1,500 மடங்கு கூட அதிகமாக இருப்பதுண்டு, இதனால் இயல்பான அழுத்தங்களில், அழுத்தத்திற்கு ஏற்பத் தொட்டி வடி வமான புயத்தில் நீர்ம மட்டம் குறிப்பிடும்படியாக வேறுபாட்டிற்கு உள்ளாவதில்லை. தொடக்க நிலைக்கு ஏற்ப அளவு கோலை முறையாகப் பொருத்திக் கொண்டுவிட்டால், தொட்டி வடிவப் புயத்தில் ஏற்படும் நீர்மமட்ட வேறுபாட்டுப் பிழை களையும் தவிர்த்துக் கொண்டுவிடலாம். இங்கு சிறு புழைக் குழாயில் உள்ள நீர்ம மட்டத்தை மட்டும் அளவிட்டு, அழுத்தத்தை அளவிடலாம். படம் 2. சாய்வுக் குழாய் அழுத்தமானி, இது எளிய, ஆனால் இன்னும் நுட்பமான அழுத்த அளவீடுகளுக்குப் பயன் படுத்தப்படும் அழுத்தமானியாகும். இதன் அமைப்பு படம் - 3இல் காட்டப்பட்டுள்ளது. இதன் ஒரு புறம் தடித்த குழாயாகவும், மற் றொரு புறம் கிடைத்தளத்திற்குச் சாய்வாக வைக்கப் பட்டுள்ள சிறு புழைக் குழாயாகவும் உள்ளன. இது குறைந்த அழுத்தங்களை அளவிடப் பெரிதும் பயன் படுகின்றது. படம் 3. 5 கண்ணாடிக் குழாய் அழுத்தமானிகள் துல்லிய மான பல அளவீடுகளுக்கு உறுதுணை புரிந்தாலும், அளவீடுகளைப் பதிவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் இல்லை. ஏற்புடையனவாக இதற்குப் பாதரச் அழுத்தமானி, மிதவை அழுத்தமானி (float type manometer), இடைத்திரை அழுத்தமானி (diaphragm gauage) போன்ற பல சிறப்பு அழுத்தமானிகள் பயன்படுத்தப்படுகின்றன. 'ப' வடிவ அழுத்தமானியின் அளவீட்டு நுட்பத் திறன் 0.1 செ.மீ. சாய்வு அழுத்தமானியில் இது 0.02 செ.மீ. ஆகும். எனினும் அளவீட்டு நுட்பத் திறன் எடுத்துக்கொள்ளப்படும் நீர்மத்தின் தூய்மை, அழுத்தமானியைக் கையாளுபவரின் செய்முறைத் திறன் ஆகிய இவற்றுடன் தொடர்புடையதாக இருக்கின்றது. அழுத்தமானியில் ஒரு புறம் திறந்து இல்லாமல் மூடப்பட்டவாறும் அமைத்துக் கொள்ள முடியும். இதில் மூடப்பட்ட முனையில் நீர்ம மட்டத்திற்கு மேலுள்ள காற்று அதில் உள்ள நீர்ம மட்டத்தின் ஏற்ற இறக்கத்திற்குத் தக்கவாறு அமுக்கப்படு கின்றது அல்லது விரிவடைதலுக்கு உள்ளாகின்றது. சம அழுத்தம் உள்ள நிலையில் இரு புறங்களிலும் நீர்ம மட்டம் சமமாக இருக்கும். வளிமத்தின் இயக்க ஆற்றல் தொடர்பான சமன்பாடுகளைக் கொண்டு செயல்படும் அழுத்தத்தைக் கணக்கிட்டு அறியலாம். மெற்சொன்ன அழுத்தமானிகளைத் தவிர வேறு சில சிறப்பு அழுத்தமானிகளும் பயன்படுத்தப்படு கின்றன. சாட்டோக் அளவியில் (chattock gauge) ஒன் நுடன் ஒன்று கலவாத, ஆனால் ஏறக்குறைய ஒரே அளவு அடர்த்தி உடைய இரு நீர்மங்கள் மட்டத்தின் பயன்படுத்தப்படுகின்றன. பரப்பிடை நிலையை அழுத்தமானியைச் சிறிது சிறிதாகச்சாய்த் துச் சமப்படுத்தி அழுத்தத்தை அளவிடுகின்றார்கள்.