அழுத்த மின் படிகம் 539
பிரானி அளவி (pirani gauge) 5. னப்படும் இது வெப்பக்கம்பி (hot wire mano- அழுத்தமானி meter) எனப்படும். வீசும் காற்றை இந்த இழை வழியே கடந்து செல்லுமாறு செய்து, அதில் ஏற் படும் ஆற்றல் இழப்பைக் கணக்கிட்டறிந்து, அழுத்தத் தைக் கணக்கிடுகின்றார்கள். வானிலை ஆராய்ச்சி களுக்கு இது பெரிதும் பயன்படுகின்றது. அழுத்த மின் படிகம் -மெ.மெ. அழுத்த மின் விளைவு.1880 ஆம் ஆண்டில் பியரி, ஜாக்கஸ் கியூரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட "அழுத்த மின் விளைவு' (piezo electric effect) என் பது, மின்கடத்தாப் படிகங்கள் சிலவற்றில் புற இயக்க விசை கொடுத்து அழுத்தப்படும்போது மின்னூட்டம் தோன்றும் நிகழ்ச்சி ஆகும். இந்நிகழ்ச் சிக்கு எதிராக அப்படிகங்களுக்கு மின்னழுத்தம் கொடுக்கப்படும்போது அவற்றின் மற்ற இருபக்கங் களில் புற இயக்க அமுக்கம் அல்லது விரிவு ஏற்படும். படிகங்களுக்கு மாறு மின்னழுத்தம் கொடுக்கப் பட்டால் மற்ற இருபக்கங்களிலும் புற இயக்க அமுக் கமும் விரிவும் மாறி மாறி ஏற்படும். எனவே படிகம் அதிர்வுக்கு உட்படுகிறது. முதலில் அழுத்தமின் விளைவுப் பொருள்கள். ஆராயப்பட்ட அழுத்தமின் படிகங்கள் குவார்ட்ஸ், டூர்மலைன், ரோச்சல் உப்பு (சோடியம் பொட்டா சியம் டார்ட்ரேட்) ஆகியவை, 1940 ஆம் ஆண்டில் பேரியம் டைட்டனேட் அழுத்தமின் படிகம் கண்டுபிடிக்கப்பட்டது. குவார்ட்ஸ் அழுத்த மின் நிலைப்பாடு படிகம் நீரில் கரையாததால் அதிக உடையது. ரோச்சல் உப்பு அதிகமான அழுத்தமின் விளைவு உண்டாக்க வல்லது. எனவே அது அதிக உணர்திறன் உள்ள கருவிகளில் பயன்படுத்தப்படு கிறது. எனினும் இது 53°C வெப்ப நிலைக்கு மேல் சிதைவடைந்து விடுவதால் உயர்வெப்ப நிலைகளில் பயன்படாது. பேரியம் டைட்டனேட் (BaTiO,) படிகம் குறைந்த உணர்திறன் கொண்டது என்றா லும் 120°C வெப்பநிலை வரை நிலைப்பாடுடையது. தற்போது டூர்மலைன், அம்மோனியம் டைஹைட் ரஜன் பாஸ்பேட் (ADP), எத்திலின் டையமின் டார்ட் ரேட் (EDT) போன்ற அழுத்த மின் படிகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அழுத்தமின் படிகங்களைத் தயாரித்தல். அழுத்த மின் படிகங்களின் அதிர்வெண்போன்ற பண்புகள் படிகங்களின் அளவுகளையும், படிகஅச்சைப்பொறுத்து ஒத்ததிர்வுப் பரப்புக்களின் அழுத்த மின் படிகம் 539 சுழற்சிக் கோணங் களையும் சார்ந்திருக்கும். எனவே பெரிய குவார்ட்ஸ் படிகங்களில் X- கதிர்க் கோணமானிகளின் உதவி யால் சுழற்சிக் கோணங்களை அளந்து தேவை யான கோணங்களும் அளவுகளும் உள்ள படிகங்கள் வெட்டப்படுகின்றன. பின்னர் இவை பட்டை தீட்டப்பட்டுத் தேவையான அதிர்வெண்களில் அதிர் வுறும்படி செய்யப்படுகின்றன. தூய்மைப்படுத்தப் பட்ட படிகப்பரப்புகளில் மின்வாய்கள் பொருத்தப் பட்டு, வெற்றிடமாக்கப்பட்ட குழாய்களில் மூடிவைக் கப்பட்டுள்ளன. வெற்றிடமாக்கப்பட்ட குழாய்களில் உள்ள படிகங்கள் அதிகத்திறன் தர இயலாதவை. எனவே அதிசுத்திறன் அலையியற்றிகளில் மந்தவளி மங்கள் நிரப்பப்பட்ட குழாய்களில் உள்ள படிகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அழுத்தமின் விளைவுப் படிகங்களின் அமைப்பு. படிகங்களில் அழுத்தத்தின் விளைவு ஏற்பட இன்றி யமையாத நிலை படிக அமைப்பில் சீர்மை மையம் (centre of symmetry) இல்லாதிருப்பதே ஆகும். 32 வகைப் படிகங்களில், 21 வகைகள் சீர்மை மையம் இல்லாதவை. இவற்றுள் ஒரு வகை தவிர மற்றவை துத்தநாகம் சல்பர் படம் 1. அனைத்தும் அழுத்தமின் விளைவு உண்டாக்குபவை. இவற்றில் அழுத்தமின் விளைவு ஏற்படக் காரணம் சீர்மை மையம் இல்லாத படிகங்களில் இயந்திர விசை