அழுத்த மின்சாரம் 541
electrical polarization) ஏற்படுத்தும். பொதுவாக ஒரு படிகத்தில் மின் முனைவு அச்சு, இயந்திர அழுத்த வகையைச் சார்ந்துள்ளது. ஒரு தனி அச்சில் மட்டும் வரையறுக்கப்பட்ட அழுத்த மின் முனைவு உடைய படிகவகைகள் இல்லை. பல படிக வகைகளில் மின் முனைவு ஓர் அச்சுக்கு உரித்தாகாமல், ஓர் தளத் திற்கு உரித்தாகிறது. பத்துவகைப் படிகங்களில் நீர்ம நிலை அழுத்தம் அழுத்த மின் விளைவைக் கொடுக் கின்றது. நேர் அழுத்த மின் விளைவின் வெப்ப இயக்க வியல் முடிவுதான் எதிர் அழுத்த மின் விளைவு ஆகும். படிகத்திற்கு கொடுக்கப்படும் மின்புல (E)த் தால் படிகத்தில் மின் முனைவு (P) தோன்றிப் படிகத்தில் சிறு திரிபு (S) உண்டாகிறது. இந்தச் சிறு திரிபு, மின் முனைவு மதிப்பு Pக்கு நேர்விகிதத் தில் உள்ளது. மின் முனைவு மதிப்பு மின்புலம் Eக்கு நேர்விகிதத்தில் உள்ளது. இந்த அழுத்த மின் திரிபு p அல்லது E2க்கு நேர் விகிதத்தில் உள்ளது. இந்தத் திரிபை மின்திரிபு எனலாம். இது எவ்லா மின் கடத் தாப் பொருள்களிலும் உண்டு. மின் - இயந்திரப் பிணைப்பு. நேர் அழுத்த மின் விளைவு ஒரு படிகத்தை ஒரு மின்னாக்கியாகவும், எதிர் விளைவுப் படிகத்தை மின்னோடி (motor ) யாகவும் மாற்றுகிறது. ஒரு மின்னோடிக்கு உள்ள பொதுத் தன்மைகள் அழுத்த மின் படிகங்களுக்கும் உண்டு. எடுத்துக்காட்டாக, மின் கடத்தாப் பொரு ளின் மின் கடத்தா மாறிலி (di-electric constant) போன்ற மின் தன்மைகள், இயந்திர அழுத்தத்தைப் பொறுத்துள்ளன. மாறாக, மீட்சி மாறிலி போன்ற இயந்திரத் தன்மைகள் மின்புல நிலைகளைப் பொறுத் துள்ளன. மின் இயந்திரப் பிணைப்புக் காரணி 'K' யைப் பின்வருமாறு வரையறுக்கலாம். அழுத்த மின் படிகத்தின் எதிர்ப் பக்கங்களை மின் மூலத்தின் எதிர் நேர்மின்வாய், மின்வாய், இவற்றுடன் இணைப்பதாகக் கொள்வோம். உருவான இயந்திர ஆற்றலுக்கும், மின் மூலத்தால் கொடுக்கப்பட்ட ஆற்றலுக்கும் உள்ள விகிதம் K' எனக் கொள்ளப் படுகிறது. பொதுவாக K இன் மதிப்பு 1க்குக் குறை மாறுகிறது. வான மதிப்பிலிருந்து 30% வரை குவார்ட்ஸ் படிகத்திற்கு K இன் மதிப்பு ஏறத்தாழ 10% ஆகும். ஃபெரோ மின் படிகங்களில் K இன் மதிப்பு 1ஐ நெருங்குகிறது. குவார்ட்ஸ் படிகத்தில் 1 நியூட்டன் / மீட்டர் அமுத்தம் கொடுக்பப்படும் போது, அதே அச்சில் 2 × 10-12 கூலும் என்ற (மீட்டர்)" அளவில் முனை மின்னூட்டம் உண்டாகிறது. 104 வோல்ட் /மீட்டர் அளவில் மின்புலம் என்ற 2× 78 கொடுக்கப்படும்போது 2 × 10 -s அளவு திரிபை ஏற்படுத்துகிறது. KH,PO அழுத்த மின்சாரம் 541 ரோச்சல் உப்பு போன்ற ஃபெரோமின்படிகங்களிலும், NH,H, PO+ போன்ற ஃபெரோ அற்ற மின் படிகங்களிலும் இந்த விளைவுகள் பலமடங்காகும். ளன. அழுத்த மின் பன்முகப் படிகங்கள். பேரியம் டைட்டனேட்டும் அது போன்ற கூட்டுப் பொருள் களும் குறிப்பிடத் தகுந்த தன்மையைப் பெற்றுள் இவற்றிற்குத் தேவையான உயர்ந்த மின் புலத்தையளித்தால் X,y, z திசைகளில் ஏதேனும் ஒரு திசையில் மின் முனைவை உண்டாக்கலாம். இதனால் அழுத்த மின் விளைவுடைய பன்முகப் படிகங்களை (செரமிக்) உருவாக்குதல் இயலும். அம்மாதிரி படி கங்களுக்கு மின்-இயந்திர பிணைப்புக் காரணி 50% வரை உள்ளது. அழுத்த மின் ஒத்ததிர்வி. சில ஃபெரோ மின் படிகங்களைத் தவிர, மற்ற படிகங்களில் எல்லாம் நிலையான ஒருதிசை மின்னழுத்தம் கொடுக்கப்படும் போது உண்டாகும் அழுத்த மின் விளைவு மிகக் குறைவு ஆகும். படிகத்தின் இயல்பு அதிர்வெண்ணுக் குச் சமமான அதிர்வெண்ணுடைய மாறுதிசை மின் னழுத்தம் கொடுத்தால், படிகத்தில் உண்டாகும் அழுத்த மின் விளைவு மிக அதிகமாகும். அதிரும் படிகம் நேர் அழுத்த மின் விளைவின் மூலம் மின் சுற்றின் மீது எதிர்வினை புரிகிறது. இயந்திர ஒத் ததிர்வில், இந்த வினை படத்தில் காட்டிய மின் சமன்பாடு சுற்றின் வினைக்குச் சமம். ஆனால், க்கு ஏற்ப உள்ள R = 1 2π VLC மின்சுற்றின் ஒத்ததிர்வு அதிர்வெண், இயந்திர ஒத்ததிர்வு அதிர் வெண்ணுக்குச் சமமாய் இருத்தல் வேண்டும். R Co படம் 1. ஒத்ததிர்வு நிலையில் அழுத்த மின் ஒத்ததிர்வுக்குச் சமமான மின்சுற்று. மின் சுற்றின் ஒத்ததிர்வுக்கும், அழுத்த மின் ஒத்ததிர்வுக்கும் பல வேறுபட்ட அதிர்வு நிலைகள் உண்டு. ஆனால் மின் சுற்றுக்கு அவ்வாறு இல்லை; ஒரே ஒரு அதிர்வெண்தான் உண்டு. மின்சுற்று அங்கங்கள். படிக மாறிலிகளிலிருந்து,