பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/575

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழுத்தமூட்டிய ஊதுலை 545

அழுத்தமூட்டிய ஊதுலை 545 நுண் செவி படம் (6) இல் இந்த அமைப்பு காட்டப்பட்டுள்ளது. அழுத்த மின் படிகத்தண்டின் முனைப்பரப்பு நுண் அலை ஒத்ததிர்வுக் குழியில் வலிமையான அலை மின்புலத்தில் வைக்கப்பட்டுள்ளது. கேளா அலைகள் படிகத் தண்டின் வழி கடத்தப்படு கின்றன. மிகக் குறைந்த வெப்ப நிலைகளில் ஆற்றல் சரிவு குறைவு. அழுத்தமின் விளைவுப் படிகங்கள் மின் ஆற்றலை இயந்திர ஆற்றலாய் மாற்றப் பயன்படும் ஆற்றல் மாற்றிகள், செவியுணரா அலையியற்றிகள், ஒலிவாங்கிகள், ஒலி ஏற்பிகள், அதிர்வெண் கட்டுப் படுத்தப்பட்ட குவார்ட்ஸ் அலையியற்றிகள் போன்ற வற்றில் பயன்படுத்தப்படுகின்றன. பங்கு வரை குவார்ட்ஸ் படிகங்களால் கட்டுப்படுத்தப்பட்ட அலையியற்றிகள் 1 கிலோ ஹெர்ட்ஸ் முதல் 100 மெகா ஹெர்ட்ஸ் வரை அதிர்வெண் உடையனவாயும், 10°இல் ஒரு அதிர்வெண் நிலைப்பாடு உடையனவாயும் உள்ளன. இப்படிகங்கள் அதிர்வெண் வடிப்பான்களாயும் பயன்படுகின்றன. படிகங்களின் மின் மறுப்பு, அதன் ஒத்ததிர்வு அதிர்வெண்ணுக்கு இருபுறமும் உள்ள அதிர்வெண் பட்டைகளில் உள்ள மின் குறிப்பலை களை மட்டும் செல்லவிடும். இத்தகைய அதிர்வெண் வடிப்பான் குவார்ட்ஸ் படிக ஒத்ததிர்விகள், தொலை பேசி அமைப்புகளில் ஊர்தி அதிர்வெண்களைப் பிரிக்கவும், வானொலி அமைப்புகளில் தேவையற்ற அதிர்வெண்களை நீக்கிக் குறிப்பலை அதிர்வெண் பட்டையை மட்டும் அனுப்பவும் பயன்படுகின்றன. அழுத்த மின் படிகங்கள் பயன்படுத்தப்பட்ட ஆற்றல் மாற்றிகள், படிக ஒலி வாங்கிகள், போனோகிராப் ஏற்பிகள், அழுத்த உணர் கருவிகள் போன்றவற்றில் இயந்திர விசைகளை மின் குறிப்பலைகளாக மாற்றப் பயன்படுகின்றன. நீரின் அடியில் ஆழமறியும் கருவிகளிலும், செவியுரா ஒலியலைகள் கொண்டு தூய்மைப்படுத்தும் கருவிகளிலும், மின் ஆற்றலை இயந்திர ஆற்றலாய் மாற்றப் பயன்படும் ஆற்றல் மாற்றிகள் பயன்படுத்தப்படுகின்றன. குவார்ட்ஸ், அம்மோனியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட், ரோச்சல் உப்பு, பேரியம் டைட்டானேட் போன்ற படிகங்கள், வளிம, திண்ம, நீர்மப் பொருள்களில் உயர் அதிர் வெண்களை உண்டாக்கவும். கண்டறியவும் பயன் படுகின்றன.2.4 × 10 ஹெர்ட்ஸ் வரை உயர் அதிர் வெண் செவியுணரா அலைகள் இப்படிகங்களால் உண்டாக்கப்படுகின்றன. 1960ஆம் ஆண்டில் லேசர் கண்டுபிடிக்கப்பட்டபின் அழுத்தமின் விளைவுப் படி கங்களின் பயன்கள் மேலும் அதிகரித்துள்ளன. உயர் அதிர்வெண்களில் லேசர் ஒளியைப் பண்பேற்றம் செய்யவும் இவை பயன்படுத்தப்படுகின்றன. கு.க. நூலோதி 1. Berling, D.A., Current D.K., Jaffe, H., Piezo- electric and Piezomagnetic materialsand their function in transducers, John Willey Ltd, New York, 1982. 2. Cady, W.G., Piezo-electricity, Dover Publica- tion, New York, 1964. அழுத்தமூட்டிய ஊதுலை இயல்பான அழுத்தத்தைவிட அதிகமான அழுத்தத் தில் இயங்கும் ஊதுலை அழுத்தமூட்டிய ஊதுலை ( pressurised blast furnace) எனப்படும். இந்த அழுத்தம் ஒரு வளிமக் குழாயில் வளிமத்தை நெரித் துப் (throttled) பெறப்படுகிறது. இதனால் உலையில் குறைந்த விரைவுள்ள (velocity), ஆனால், கூடுதலான 13 2 4 5 12 11 10 அழுத்தம் ஊட்டியதுலையின் நிகழ்வரிசைப்படம் 1) வன்பரப்புக் குழிவாய் இதழ், 2) தூய வளிம வழிகுழாய், 3) காப்பு இதழ், 4) சமமாக்கும் இதழ், 5) ஓர் அமைப்பு வன் பரப்புக் கொட்டுகலம், 6) தூய வளிமம், 7) நெரிப்பு இதழ், 8) வீழ்படிவகத்துக்கு, ஓ) ஈர அடைவலயம், 10) இருபுறச் சிறகு இதழ், 11) வழிகை, 12) உலர் தூசி பிடிப்பி,13)வன் பரப்பு மணிக்கலன்.