பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/577

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழுந்துப்‌ பொருத்து 547

இழைகள் ஒன்றோடொன்று பின்னிப் பாய்போல் மாறுவதால் ஒரு செறிந்த கட்டமைப்பு உருவாகிறது. இந்த ஆடை அழுந்திய குல்லாய்கள் கையுறைப் புறணிகள் (glove linings), மேசை விரிப்புகள், தரை விரிப்புகள் ஆகியவற்றிற்குப் பயன்படுகிறது. பயன் பாட்டுக்கேற்றபடி இவ்வகை ஆடைகளின் தரமும் தடிப்பும் மாறும். நெய்த அழுந்தலாடை (woven felt). இது இழை முகப்புடைய கம்பளித் துணியாகும். இது நெய்த இழைக் கட்டமைப்புப் புலப்படாமல் அழுந்தலாடை களின் கட்டமைப்பே தோன்றும்படி நன்கு அழுத்தப் பட்டுப் பாய்போலாக்கப்படுகின்றது. நெய்த அழுந்த லாடைகள் 50 விழுக்காடு அளவு அகலத்திலும் நீளத் திலும் சுருங்கும். இவ்வாறு சுருங்கிய ஆடை வலி வானது; உறுதியானது; அழுந்தலாடையைவிட மீட்சிமை (elasticity) உடையது. நூலோதி Grosicki, Z., Watson's Textile Design and Colour, 7th Edition, Newness - Butterworth, London, 1980. அழுந்திய திண்வரித் துணிகள் அதிகமாக அழுந்திய புடைப்புடைய கம்பளித் துணியே இது. இதன் பரப்பு சுடர்விடும் சிற்றிழை களான திண்வரிகளை (naps) உடையது. இவை துணியின் நெடுக்கு வாட்டத்தில் அமைந்திருக்கும். நெய்த அமைப்பும் கட்டமைப்பும் முழுதும் உள் மறைந்திருக்கும். இதன் நெசவு அல்லது யாப்பு அழுத்தல் செயல்முறையால் மிக அடர்ந்ததாகவும் இழை வளமுடையதாகவும், புடைத்தல் (raising) செயல் முறையால் இழைகள் பரப்பிக் கொண்டுவரப் பட்டு நீட்டி ஒரே திசையில் அமையும்படி சீவப்படும் (combed). துணியைக் கொதிக்க வைப்பதால் மினு மினுப்பு ஊட்டப்படுகிறது. பெட்டித் துணிகள், விளையாட்டு மேடைத் துணிகள், ஓட்டுநர்த் துணி கள், கண்ணிகள், பின்னிய பருத்தியாடை ஆகிய துணிகளுக்கு இது பயன்படும். நூலாகவோ, சும்பளி யிழையாகவோ, நெய்த துணியாகவோ இவை சாய மூட்டப்படுகின்றன. நூலோதி Grosicki, Z., Watson's Colour, 7th Edition, London, 1980 and Textile Design Newness - Butterworth, அழுந்துப் பொருத்து அழுந்துப் பொருத்து 547 என பொறியியல் துறையில் அழுந்துப் பொருத்து (press fit), இடைநிலைப்பொருத்து (transition fit), இடை வெளிப் பொருத்து (clearance fit ) மூன்று வகையான பொருத்துகள் வழக்கில் உள்ளன. அழுந்துப் பொருத்து என்பது தண்டு போலுள்ள உறுப்பு ஒன்றை அதைவிட அளவில் குறைந்த துளை ஒன்றினுள் அமுக்கிப் பொருத்துவதால் கிடைக்கும் பொருத்தாகும். இடைவெளிப் பொருத்தில் துளை யின் அளவு, தண்டின் அளவைவிட அதிகமாக இருக் கும். ஆனால் இடைநிலைப் பொருத்தில் தண்டின் அளவு துளையைவிடச் சிறிதளவு அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம். அழுந்துப் பொருத்தில் உள்ள தண்டின் அளவுக்கும் துளையின் அளவுக்கும் உள்ள வேறுபாட்டைக் குறுக்கீடு (interference) என்று கூறலாம். அழுந்துப் பொருத்தின் பயன்பாட்டைப் பொறுத்துக் குறுக் கீட்டின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. எடுத்துக் காட்டாக ஒரு தாங்கியின் பூண் (bearing bush) ஒன்றைச் சட்டகத்தில் (frame) பொருத்தும்பொழுது, பூண் வெப்ப ஏற்றத்தாழ்வினால் கழன்றுவிடாத அளவுக்குக் குறுக்கீடு இருக்க வேண்டும். அதேபோல் ஒரு சக்கரத்தை அதன் இருசுடன் (axle) இணைக்கும் பொழுது இருசின் மூலம் சக்கரத்திற்குச் செல்லும் திருக்கத்தைத் (torque)தாங்கிக்கொள்ளும் அளவுக்குக் குறுக்கீடு இருக்க வேண்டும். மேலும் குறுக்கீடு பொருத்தப்படும் உலோகங்களையும் பொறுத்தது. அதாவது, உலோகத்தின் மீட்சி மட்டு (modulus of elasticity) குறைவாக இருந்தால் குறுக்கீடு அதிக மாக இருக்க வேண்டும். ஆகவே அலுமினியச் சட்ட கத்தில் பொருத்தும் பொழுது குறுக்கீட்டின் அளவு எஃகுச் சட்டகத்தில் பொருத்தப் பயன்படும் குறுக் கீட்டைவிட ஏறத்தாழ மூன்று மடங்காக இருக்க வேண்டும். அழுந்துப் பொருத்தை அடையும்பொழுது ஏறத் தாழக் குறுக்கீடு அளவுக்குத் தண்டு சுருங்கவோ துளை விரியவோ செய்யும். அப்பொழுது சுருங்கிய அளவுக்கோ விரிந்த அளவுக்கோ தகுந்த தகைவு (stress) பொருத்தப்பட்ட இரண்டு உறுப்பு களுக்கிடையே ஏற்படுகின்றது. பொருத்தின் பரப் பளவால் மேற்சொன்ன தகைவைப் பெருக்கினால் விசை (force) கிடைக்கும், விசையை உராய்வுக்கெழு வால் (coefficient of friction) பெருக்கினால் பொருத்தின் விசை கிடைக்கும். இந்தப்பொருத்தின் விசைதான் பொருத்தப்பட்ட இரண்டு உறுப்பு களையும் பிரிந்துவிடாமல் வைத்துக்கொள்கிறது. அழுந்துப் பொருத்தை விசைப் பொருத்து