அள்ளுவாளிகள் 549
கின்றது. மேல்தோல் இறவாத நிலையில் கொப்புளம் உண்டாகின்றது. இது உடைந்து புண்ணாகின்றது. (இ) ஊடுருவும் நசிவு (penetrating necrosis), தோல் கீழ்த்திசு,நார்,தசை, எலும்பு யாவற்றையும் அழித்துக்கொண்டு உட்செல்லும். ஆழத்திலுள்ள திசுக்களின் நசிவு, தோலின் நசிவைக் காட்டிலும் மிகுதியாக இருக்கும். ஆகவே அது சுரங்கம் போன்று குடைவாகவும் தோன்றும். தொழுநோயாளிகளில் இப்புண்கள் பாதத்தில் தோன்றும். தடுப்பு முறை. அழுந்து புண் வராமல் நோயாளி யைப் பாதுகாத்தல் மிகவும் முக்கியம் ஆகும். அது மிகக் கடினமான செயலும் ஆகும். எனவே தடுப்பு முறை முதன்மையானது. முதலுதவியாக நோயாளியின் புடைப்பாக உள்ள எலும்புப் பகுதிகளில் பஞ்சு வைத்து அழுத்தி மென்மையாக்க வேண்டும். பின்னர் நோயாளியை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றிப் புரட்டிப் போட வேண்டும். அலைப் படுக்கையில் அல்லது நுரை மெத்தைப் படுக்கையில் அல்லது கீழ்ப்புறமிருந்து காற்று வரக்கூடிய படுக்கையில் படுக்க வைக்கவேண்டும். சிவந்திருக்கும் இடங்களில் ஸ்பிரிட் தடவிப் பிடித்து விட்டு, டால்க்கம் மாவும் தூவி விட வேண்டும். அள்ளுவாளிகள் 549 சிகிச்சை. அழுந்து புண் உண்டாகிய பின் அதில் உள்ள நுண்ணுயிரிகளைச் சோதித்து அவற்றைக் கொல்லும் நுண்ணுயிரிக் கொல்லிகளை (antibiotics) உபயோகப் படுத்தவேண்டும். அழுகிப்போன இழை யங்களை வெட்டி எடுத்துவிட்டுத் தூய்மைப்படுத்திப் புண்ணை ஆறச் செய்ய வேண்டும். தானே ஆறாத புண் ஆயின் ஒட்டு மருத்துவ முறையில் (plastic surgery) புண்ணை ஆற்றவேண்டும். நூலோதி லெ.சி. Guttmann, L. Med. Times. N. Y.Vol. 73,1945. Guttmann L. Lancet Vol. 1.1945. அள்ளுவாளிகள் தளர்ந்த (loose) நியிையிலுள்ள மண், மணல், நிலக் கரி, கனிப் பொருள்கள், தானியங்கள் ஆகியவற்றை ஓரிடத்திலிருந்து அள்ளித் தூக்கி வேறு இடத்தில் சேர்க்க அள்ளுவாளிகள் (grab buckets) பயன்படு கின்றன. பத்து பரு மீட்டர் வரை கொள்ளவும். 7 3 6 ம J S 2 அள்ளும் நிலை அள்ளு வாளி மூடிய லை