பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/581

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அளக்கையியல்‌ 551

அழுத்தக் குறைவு. வளிமத்தின் வெப்பநிலை விரை வைக் (velocity) கூட்டுவதற்குப் பயன்படும். இந்த வெப்பநிலையும், அழுத்த மாறுபாடும் துளைவாயி னால் ஏற்படுபவை. ஓர் அணையின் மதகிலிருந்து வெளியேறும் நீரின் விரைவு அணையின் மேல்மட்டத் திலிருந்து தடையிலாது விழும்போது, மதகுஇருக்கும் ஆழத்தை அடையும் போதுள்ள விரைவுக்குச் சமமாக இருக்கும் என்பது டாரிசெல்லியின் தேற்றம். அதன் (2gh). இதில் v = பாய்மத்தின் விரைவு, படி y = h= அழுத்தம், g = ஈர்ப்பு முடுக்கம். வெளியேற்றம் g: து Q = Ca A(2gh) இதில் A = மதகின் பரப்பு, h= நீர்மட்ட உயரம்,C = நீர் வெளியேற்றுக் கெழு. அளக்கும் துளைவாயில் இச்சமன்பாடு பயன் படுகிறது. அளக்கும் துளைவாயின் எளிய வடிவமைப்பை படம் 1இல் (பக். 550) காண்க. அதில் துளைவாயின் முன்னும் பின்னுமுள்ள அழுத்தம் (hy, h,) அளக்கப் படுகிறது. குழாயின் விட்டமும் துளையின் விட்டமும் 21,ag, ஆயின், Q 1 Cd a1 a; (2gh)2 a1 2 2 - மீட்டர்/நொடி'. இதில் h = h- h,, g = 9.81 மீட்டர் / நொடி". துளையின் வழியாக ஒரு வளிமம் செல்லும்போது அதன் பருமன் கூடினால் அதற்கென விரிவுக்கூறு ஒன்றுசேர்க்க வேண்டும். வெப்ப நிலையினால் வளிமம் வேறுபடும்போதும் அதற்கெனவும் ஒரு வெப்ப விரிவுக் கூறு சேர்க்க வேண்டும். காண்க, டாரிசெல்லி தேற்றம்; தொண்டைக் குழல் (venturi tube). நூலோதி -வை. இல. American Society of Mechanical Engineers, Fluid Meters, 5th Edition, ASMEO, New York, 1959. அளக்கையியல் நிலக்கோளத்தின் மேற்பரப்பிலோ, மேலோட்டிலோ அல்லது வானவெளியிலோ உள்ள ஒரு புள்ளியையோ ஒரு பொருளையோ இடப்பரப்பையோ பார்த்து, அறிந்து, குறித்து, அளவெடுப்பதும், எடுத்த அளவை வரைபடத்தில் குறித்து வைப்பதும் அளக்கையியல் அளக்கையியல் 551 எனப்படும். குடியிருக்கும் வீடு, நடக்கும் தெரு, வாழும் கிராமம் அல்லது நகரம், செல்லும் ஊர்திச் சாலை, நெடுஞ்சாலை, குடிநீர்க்குழாய், கழிவு நீர்க்குழாய் அமைப்பு, பயிரிடும் நிலம், வீட்டு மனை, ஆகியவற்றின் எல்லைகள் மாறாமல் செய்யப்படும்பதிவுக்கும் பாதுகாப்புப் பணிகளுக்கும் பாசன நீர், தொழிற்சாலைகள், காலங்காட்டும் கருவி முதலிய யாவற்றையும் சீராக அமைப்பதற்கும், அடிப்படையாக பாதுகாப்பதற்கும் விளங்குவது அளக்கையியல். வரலாறு. பழங்கால மனிதன் தான் வாழும் இடத்திலிருந்து உணவு தேடிச் செல்லும் இடம் வரை சென்ற பாதையில் விட்டுச்சென்ற இலைகளோ, பூக்களோ, கம்புகளோ, அவன் வழியின் அடையாள மாக விளங்கி, அவன் 'காலடி எண்ணிக்கை' அளவு கோலாக அமைந்து அவன் இருப்பிடம் திரும்ப உத வியது. தன் இருப்பிடத்தைக் குறித்துக் கொள்ளவும் அடையாளம் வைத்து மீளத் திரும்பவும் செய்த இம்முதல் முயற்சியே அளக்கை பியலின் தொடக்கம். மனிதன் பண்டைத் தமிழகத்தில் சிறு அலகாக விரவ் இருந்தது.ஆறு விரல், ஒரு சாண்; இரு சாண் ஒரு முழம்; இரண்டு முழம் ஒரு கோல்; 4 கோல் ஒரு தண்டம்; 500 தண்டம் ஒரு கூப்பிடு தூரம்; இரண்டு கூப்பிடு தூரம் ஒரு யோசனை; நான்கு யோசனை ஒரு காதம். கோல் 33 அங்குலத்திற்குச் சமம். பூம்புகாரில் புதைந்திருந்த ஒரு தூம்பின் அகலம் 33 அங்குலம் அல்லது 84 செ.மீ. இந்த அளவுமுறை கடந்த 2000 ஆண்டுகளாகத் தமிழகத்தில் வழங்கி வருகின்றது. மா, காணி, வேலி போன்ற பரப்பளவுகள் வயற் காட்டை அளப்பதற்குப் பயன்பட்டன. குடும்பு, கண்ணாறு போன்றவை ஊர், நகரங்களைப் பகுக் கப் பயன்பட்டன. புகார், மதுரை, காஞ்சி போன்ற திட்டமிட்ட நகரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பேர ரசன் இராசராசன் (985-1014) காலத்தில் நிலஅளவு கள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுப் புத்த கங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தன. பின்னர் வந்த சோழப் பேரரசர்கள் காலத்திலும், விசயநகர மன் னர்களின் காலத்திலும், அவ்வப்போது மறு அளக் கைகள் செய்யப்பட்டன. தமிழ்நாட்டின் ஒரு தண்டம் 11 நீளம் (132 அங்குலம்). இது 4 கோல் = 8 முழம் = 16 சாண் = 96 விரல், இதே 132 அங்குல நீளம் ரோமானி யர்களாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனைப் பத்தாகப் பகிர்ந்து 13.2 அங்குல நீளத்தை ஒரு அடி என அவர்கள் வைத்துக் கொண்டனர்.