பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/584

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

554 அளக்கையியல்‌

554 அளக்கையியல் (Gunter) சங்கிலி பயன்படுகிறது. சிறு நிலப்பரப்பு கள், கட்டிடப்பகுதிகள், குடியிருப்புப் பரப்புகள் முதலியவற்றை அளக்க 100 அடி நீளம் கொண்ட சங்கிலி பொறியாளர் பயன்படுகிறது. சங்கிலி துத்தநாக முலாம் பூசப்பட்ட கம்பிகள் இணைத்து செய்யப்படுகின்றது. இது எடுத்துச் செல்ல இலகு வாக இருப்பதுடன் காடு மேடுகளிலும் புவ் புதர்வெளிகளிலும் நிலத்தின் மேல் இழுத்துச் செல்லும் வகையிலும், திண்மையும், வன்மையும் பொருந்தி உள்ளது. விரைவில் அறுந்தோ தேய்ந்தோ விடாது.சிறு நிலப்பரப்புகள், நில உடைமை அளவு கள் முதலியவற்றை அளக்க இது பயன்படுகிறது. இது நூறு பாகமாகப் பிரிக்கப்பட்டிருக்கும். 0.66 அடி நீளம் கொண்ட இப்பிரிவு லிங்க்(link) என அழைக்கப் படும். ஒரு சங்கிலியின் நீளம் 66 அடி ஆதலின் 10 சங்கிலி நீளம் ஒரு பர்லாங் ஆகிவிடும். தற்போது மெட்ரிக் முறை அளவுகள் வழக்கத்திற்கு வந்து விட்டதால் 25 மீட்டர் நீளம் கொண்ட சங்கிலி பயன்படுத்தப்படுகிறது. தொலைவளவி அளக்கை (Tacheometric survey). ஒவ்வொரு தொலைநோக்கியிலும் படத்தட்டில் செங் குத்துக் கோடும்,மையம், மேல், கீழ் என மூன்று கிடைக்கோடுகளும் இருக்கும். தொலை தூரத்தில் நிறுத்தப்பட்ட மட்டக்கம்பத்தில் அளவுகள் மேல். கீழ் கிடைக்கோடுகளின் இடையே எவ்வளவு வெட் டப்படுகிறதென்பதை அறியலாம். இதனைத் தொலை நோக்கி மாறிலியால் பெருக்கினால் நிலையத்திற்கும் மட்டக்கம்பத்திற்கும் இடையிலுள்ள சாய்வுத்தூரம் கிடைக்கும். உயரக்கோணத்தையும் அளந்து கொண் டால் கிடைத்தூரத்தை அறியலாம். இக்கருவிக்குத் தொலைவளவி என்று பெயர். தொலைவளவி பயன் படுத்துவதால் இதனை தொலைவளவி அளக்கை என்பர். தூரத்தை நேராக அளப்பதை தொலைவு முறை (stadia method) என்பர். மாறாக தொலைவில் நிறுத்தப்படும் மட்டக் கம்பத்தில் குறிப்பிட்ட நீளத்தின் இரு முனைகள் அடங்கும் (subtended) கோணத்தை முழுநோக்கியின் (Theodolite) மூலம் துல்லியமாகக் கணக்கிட்டு அதிலிருந்து அப்புள்ளியின் தொலைவையும் உயரத் தையும் கணக்கிடுவர். இதை "அடங்கிய சட்டம் முறை" (subtended bar method) என்பர். பெரும் பாலும் முழுநோக்கியே தொலை வளவியாகப் பயன் படுகிறது. 64 முழுநோக்கி அளக்கை. கிடைத்திசையில் 360 பாகையிலும், நிலைத் திசையில் 360 பாகையிலும் பார்க்கக்கூடிய தொலைநோக்கி பொருத்தப்பட்டதே முழுநோக்கி. இதனால் ஒரு நிலையத்திலிருந்து இனனொரு நிலையத்தின் கிடைக்கோணம், நிலைக் கோணம் இரண்டையும் அளக்க முடியும். முக்கோண அளக்கையில் கிடைக்கோணங்களை யும் நிலைக்கோணங்களையும் மிகத்துல்லியமாக முழு நோக்கியில் அளக்க இயலும். முழுநோக்கியைப் பயன்படுத்தி அளக்கும் முறை முழுநோக்கி அளக்கை எனப்படும். காந்தவட்டை அளக்கை (compass surveying). காந்தவட்டையைக் கொண்டு செய்யும் அளக்கையைக் காந்தவட்டை அளக்கை என்பர். ஒரு கூர் முனையில் ஆடும் காந்தஊசி கொண்ட வட்டப்பேழை காந்த வட்டை ஆகும். இதை ஒரு முக்காலியின் மீது நிறுத்தி, அளவு காண இயலும். காந்த ஊசி எப்போதும் வடக்கு நோக்கியே நிற்கும். காந்தவட்டை நிற்கும் நிலையத்திலிருந்து ஒரு கோடு வடக்கு நோக்கியே அமையும். காந்தவட்டை நிற்கும்நிலையத்திலிருந்து ஒரு கோடு வடக்குத்திசையோடு தாங்கும் கோணத்தை திசைக்கோணம் (Bearing) என்பர். கோட்டின் திசைக் கோணமும் நீளமும் தெரிந்தால் அதனை வரைபடத் தில் குறிக்க முடியும். இவ்வாறு காந்தவட்டை கொண்டு செய்யும் அளக்கை காந்தவட்டை அளக்கை எனப்படும். சிறிய பரப்புகளுக்கு இது ஏற்றதும் எளியதும் ஆகும். பூமியின் வடக்கு தெற்கு முனைகளின் வழியாகச் செல்லும் கற்பனைக் கோட்டை நெடுவரை (meri- dian) என்பர். இதுவே உண்மை நெடுவரை. காந் தப்புலத்தின் வடதென் முனைகள் புவியியல் வட தென் முனைகளோடு ஒன்றியிருக்கவில்லை. அதனால் காந்த நெடுவரையும், புவியியல் நெடுவரையும் சற்றே விலகியிருக்கும். இவ்விலக்கம் கோண அளவு ஆகும். இது இடத்துக்குஇடம் மாறும். நீண்ட காலங்களில் இது சற்றே மாறிக்கொண்டே இருக்கும். இதனை விலகுகோணம் (angle of deflection) என்பர். இதனை அவ்வப்போது வெளியிடப்படும் கடற்காலங்காட்டி (Nautical Almanac) நூலிலிருந்து அறிந்து கொள்ள லாம். காந்த நெடுவரையிலிருந்து உண்மை நெடுவரை யைக் கணக்கிட விலகுகோணத்திற்கான திருத்தம் சேர்க்க வேண்டும். சமதள மேசை அளக்கை (Plane table surveying). ஒரு முக்காலியில் பொருத்தும் வகையில் அமைந்த சமதள வரைவுப் பலகையே சமதள மேடையாகும். வெண்கலத்தில் இரு செங்குத்துத்தகடுகளில் ஒன்றில் பார்வைத் துளையும், மற்றதில் ஒரு முடியிழையும் பொருத்தப்பட்ட நேர்நோக்கி (Alidate) ஒரு துணைக் கருவி. தொலைநோக்கியுடன் பொருத்தப் பட்ட நேர் நோக்கிகளும் உண்டு. மேடையை முக்காலியில் நிறுத்தி மட்டப்படுத்திக் கொள்ள வேண்டும். நிலையப் புள்ளியைக் குறித் துக்கொண்டு, அடுத்த நிலையத்தின் மீது நிறுத் தப்பட்ட கோலை நேர்நோக்கி மூலம் பார்த்து,