பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/586

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

556 அளக்கையியல்‌

556 அளக்கையியல் நேர்நோக்கியை ஒட்டி கோடு ஒரு வரைந்து கொள்ள வேண்டும், இடைத்தூரத்தை நாடா அல்லது சங்கிலியால் அளந்து வரைவளவிற் கேற்பச் சுருக்கி அடுத்த நிலையத்தைக் குறித்துக் கொள்ளவேண்டும். பின்னர் அடுத்த நிலையத்திற்கு மேடையை மாற்றி நிறுத்தி நேர்நோக்கியை ஏற்க னவே வரைந்த கோட்டின் மீது வைத்துக்கொண்டு, முதல் நிலையத்தில் நிறுத்தப்பட்ட கோலை நேர் நோக்கி மூலம் காணும் வகையில் மேடையைச் சுழற்றி நிறுத்திக் கொள்ளவேண்டும். இனி அளக்கையை முன்போல் தொடரலாம். இது சமதள மேடை அளக்கை எனப்படுகிறது; சிறிய பரப்புகளுக்கு ஏற்றது. கண்ணில் கண்டு வரை படத்தில் குறிப்பதால் பிழைகள் குறைவு. அளக்கை யைத் தொடங்கிய இடத்திலேயே முடிக்க வேண்டும். தொடங்கிய புள்ளியில் முடியாமல் சிறிதளவு பிழை இருந்தால் அதை எல்லா நிலையங்களுக்கும் பகிர வேண்டும். பிழை பெரிதாயின் திரும்பச் செய்ய வேண்டும். களை ஒளிப்பட அளக்கை. நெருங்கற்கரிய குன்றுகளும் சிறு மலைப் பகுதிகளும் அடங்கிய சிறுசிறு பகுதி பயன்படு அளக்கப் ஒளிப்பட அளக்கை கிறது. அளக்கையில் அடிப்படைத் தூர அளவும் கோண அளவும் தேவை. தூர அளவு கிடைமட்டத் திலும் உயரத்திலும் இருக்கலாம். உயரத்திலிருந்து தரையை ஒளிப்படம் பிடித்தால் தரையின் படம் கிடைக்கும். அடுத்தடுத்து எடுக்கப்படும் படங்களைத் தொடர்ச்சியாகவும் பக்கங்களிலும் வைத்துப் பார்த் தால் தரையின் முழுப்படம் கிடைக்கும். மலை, ஏரி, கட்டிடங்கள் அனைத்தும் தெரியும். ஒரு கண்ணால் காணும்போது பரப்பு மட்டும் தெரியும். இரண்டு கண்களால் நோக்கும்போது முப் பரிமாணமாக ஆழமும் தெரியும். இக்கொள்கை யைப் பயன்படுத்தி ஒரே சமயத்தில் குறிப்பிட்ட இடைவெளிக்கப்பால் உள்ள இரண்டு ஒளிப்படக் கருவிகளில் எடுக்கப்படும் படங்களை அடுத்தடுத்து வைத்தால் ஆழமும் தெரியும். இரண்டு வில்லைக் கொண்ட பருநோக்கி (stereoscope) இதற்குப் பயன்படுகிறது. மலைகளின் பருமனையும், பள்ளத்தாக்குகளின் கொள்ளளவையும் கூட இவ் வாறு கணக்கிட முடியும். கண்ணாடி ஒளிப்பட அளக்கை பெரும்பாலும் விமானங்களி லிருந்து செய்யப்படுகிறது.விமானம் ஒரே உயரத்தில், ஒரே வேகத்தில் பறக்க வேண்டும். அடுத்த பறப்பு சமஅளவு தூரத்தில் முதல் பறப்புக்கு இணையாக இருக்க வேண்டும். உளவு அளக்கைக்கு (reconnai- ssance. survey) ஒளிப்பட அளக்கை மிகவும் ஏற்றது. இடைத்தூரக் கிடை அளக்கை. இரண்டு நிலையங் களின் இடையிலுள்ள கிடைத்தூரத்தை அளக்கப் பல முறைகள் கையாளப்படுகின்றன. காலடி அளக்கை. நடக்கும்போது இரண்டு காலடித் தூரங்களுக்கிடையே உள்ள சராசரி நீளத் தைக் குறித்துக்கொண்டு எத்தனை காலடி எடுத்து வைக்கிறோமோ அதை எண்ணிக்கொண்டு, ஒரு காலடித் தூரத்தையும் எடுத்து வைத்த காலடிகளின் எண்ணிக்கையையும் பெருக்கி, மொத்தத் தொலை வைக் கணக்கிடலாம், பொதுவாக ஒரு சராசரி மனி தனின் காலடித் தூரம் சுமார் 21" நீளம் இருக்கும் எனக் கொள்ளலாம். இது காலடி அளக்கையாகும். நடை எண் அளவி (passometer). காலடி அளக் கையில் காலடிகளின் எண்ணிக்கையை எண்ணிக் கொண்டு செல்வதற்குப் பதிலாகச் சட்டையில் மாட்டிக் கொண்டுள்ள இந்த நடை எண் அளவி யைப் பயன்படுத்துவர். உடல் இயக்கத்தை வைத்து எடுத்து வைத்த அடிகளின் எண்ணிக்கையை இக் கருவி நேரடியாகக் காட்டும். இதையும் அம்மனி தனின் காலடித் தூரத்தையும் பெருக்கித் தொலைவை அளக்கலாம். நடைத்தூர அளவி பிட்ட அளவி (pedometer). ஒரு குறிப் காலடித் தூரத்திற்கு இக்கருவியைச் சரி செய்து வைத்து நடையின்போது உடையில் மாட்டிச் சென்றால் நடைத்தூரத்தை நேரடியாக இக்கருவி காட்டும். அதாவது கால்நடைத் தூரத்தையும் நடை எண்ணிக்கையையும் பெருக்கும் வேலையையும் இதே செய்து நடைத்தூரத்தை நேரடியாக அளிக்கிறது. சுற்றெண்ணி அளவி (odometer). ஒரு சக்கரத் தில் இக்கருவியைக் கட்டி, அளக்க வேண்டிய இடத் தில் சக்கரத்தை ஓட்டினால் இக்கருவி அச்சக்கரம் எத்தனைச் சுற்று சுற்றியது எனக் காண்பிக்கும். சக்கரத்தின் வெளிச்சுற்றை அளந்தெடுத்துக் கொண்டு வெளிச்சுற்றின் நீளத்தையும் சுற்றின் எண்ணிக்கை யையும் பெருக்கினால் இடைத்தூரம் கிடைக்கும். விரைவி அளவி (speedo meter). இக்கருவி, சுற்றும் சக்கரத்தின் அச்சில் இணைத்த சுழல் கம்பிகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. சுழலும் சக்கர வண்டி ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்தை அடைவதற்கு ஆன இடைத்தூரத்தை நேரடியாகத் தெரிவிக்கிறது. அதாவது சக்கர வெளிச்சுற்றின் நீளத்தையும் சக்கரச் சுற்று எண்ணையும் தானே பெருக்கி நேரடி யாகத் தூரத்தைத் தெரிவிக்கிறது. கார், மோட்டார் சைக்கிள் முதலியவற்றில் இக்கருவி பயன்படுகிறது.