558 அளக்கையியல்
558 அளக்கையியல் உலோக இழைநாடா (metallic tape). இது உலோக இழை விரவிய துணியாலானது. 100', 50', அல்லது 30 மீட்டர், 50 மீட்டர் அளவுள்ளது. சிறுசிறு நீளங் களை விரைந்து அளக்க உதவுகிறது. இன்வார் நாடா. இரும்பும் நிக்கலும் கலந்த கலப்பு உலோகத்தால் ஆனது. இதன் வெப்ப விரிவு குறைவு. இது முக்கோண அளக்கையியலில் அடிப்படைக் கோடுகளை அளக்கப் பயன்படுகிறது. நீள அளக்கை முறை. ஒரு நேர்கோட்டில் கிடைத் தூரத்தை அளக்க அளக்கும் கோடு நேராக இருக்க வேண்டும். அதற்காக வண்ணமடித்த ஈட்டிக் கம்பு கள் அல்லது மூங்கில் கம்புகளைக் கோட்டின் இரண்டு முனைகளிலும் நட்டு ஒரு முனையிலிருந்து பார்த்து இடையில் ஈட்டிக் கம்புகள் வைத்து எல்லாக் கம்புகளும் பார்வைக் கோட்டில் நேராக இருக்கும்படி நடுவர். இதனை நேரமைத்தல்(ranging) என்பர். கிடைக்கோட்டை, நேரடியாக அளந்து செல்வர். நீளம் சாய்தளத்தில் அல்லது மலைச்சரிவில் அளக்கக் கீழ்க்கண்ட முறைகளைக் கடைப்பிடிப்பர்: சிறுபகுதியாக இருந்தால் கிடைமட்டத்தில் அப் பரப்பைப் படிப்படியாக வெட்டிப் படியின் கிடைத் தூரத்தை மட்டும் அளப்பர். தோராயமாக அளக்க நாடாவின் ஒரு முனை யைச் சரிவில் வைத்து, மறுமுனையைக் கிடைமட்டத் தில் வைத்து (இதைக் கண்மதிப்பிலோ கை ரசமட்டத் தின் உதவியாலோ செய்யலாம்) மட்டப்படுத்தி, அந்த முறையிலிருந்து தூக்குக் குண்டை விட்டு, அது விழும் முனையைக் குறித்துக்கொண்டு அந்தச் சரிவு முனையிலிருந்து மீண்டும் தொடர்ந்து அளந்து சென்று முடிக்கலாம். தூக்குக்குண்டு இல்லையேல் சிறு கல்லைப் போட்டு அது தரையில் விழும் இடத் தைக் குறித்துக்கொண்டு அங்கிருந்தும் தொடரலாம். 7 அ அ3 அ, தொலைவு = ஆ அ, + B2 +&; + அ+ படம் 5. மலைச்சரிவில் நீளம் அளத்தல் ககக சரிவின் கோணத்தை அளந்து அதிலிருந்து கோணக் கணக்கின்படி அளவெடுக்கலாம். சரிவுக் கோணத்தைக் கணக்கிடச் சாய்மானமானி (clino- meter) பயன்படுகிறது. ஓர் அரைவட்டக் கோணமானி யைத் தலைகீழாகவைத்து அதன் மையத்திலிருத்து ஒரு தூக்குக்குண்டு பொருத்திய அமைப்பே இது, சரிவில் 061=062 190° 6. மலைச்சரிவில் சாய்மானமானி முறையில் நீளம் அளத்தல் தேவையான இடைத்தூர முனைகளில் கம்புகள் நட்டு, அவற்றைக் கண்மட்ட அளவில் அளந்தோ ஒரே உயரத்தில் இரு முனைகளிலும் புள்ளிகள் குறித் துக் கொண்டோ,இந்த இருமுனைகளையும் இணைக் கும் கோடும், சரிவுகாணியின் நேர்கோட்டுப் பக்க மும் ஒரே கோட்டில் இருக்குமாறு வைத்தால், தூக் குக்குண்டு சரிவின் கோணத்தைக் காட்டும். சரிவின் நீளத்தை அளந்து சரிவுக் கோணத்தையும் தெரிந்து கொண்டு கிடைத்தூரத்தை முக்கோணக் கணக்கு மூலம் அறியலாம். அபினே மட்டகி (Abney level) என்ற கருவியும் இதற்குப் பயன்படுகிறது. அளக்கைக் கோட்டுக்கு வலது இடது திசையி லுள்ள இடப்புள்ளிகளை இக்கோட்டின் குத்துக் கோட்டளவுகளாகக் குறிக்கலாம். அவ்வாறு வலது இடது புறமுள்ள புள்ளிகளின் குத்துக்கோட்டுப்