பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லூயிஸ் கோட்பாடு, புரோட்டான் மாற்றத்திற்குள் ளாகும் பொருள்கள் மட்டுமின்றி மற்றப் பொருள் களுக்கும் பொருந்துகின்றது. போரான் முஃபுளோ ரைடு (BF,) எலெக்ட்ரான் குறைச்சேர்மம். ஆனால் அம்மோனியாவில் ஓர் இணை எலெக்ட்ரான உள்ளது. இவ்விரண்டும் கீழ்க்கண்டவாறு வினைபுரி கின்றன.

F H F : B+ON : H + F H FH F-B-N-H FH

அமிலமும் காரமும்

அமிலம் (BF,), காரம் (NH,) இலிருந்து இணை எலெக்ட்ரான்களைப் பெற்றுக்கொள்வதால் சக பிணைப்பு உண்டாகிறது. எல்லா லூயிஸ் காரங்க ளும் ஓர் அடிப்படைப் பண்பைப் பெற்றுள்ளன. அவை இணை எலெக்ட்ரான்களையோ பங்கிடப் படாத எலெக்ட்ரான்களையோ கொண்டிருக்கின் றன. இதே போல் எல்லா லூயிஸ் அமிலங்களும் காலியான மூலக்கூற்றுச் சூழகங்களைப் (empty moiecular orbitals) பெற்றிருக்கின்றன.

உசநோவிச் கொள்கை. அமில-காரங்களைப் பற்றி கி.பி. 1939 ஆம் ஆண்டில் சில சமயங்களில் நேர்மம் - எதிர்மம் கொள்கை (positive-negative theory) என்று சொல்லப்படுகின்ற கொள்கையை எம். உசநோவிச் (M. Usanovich) என்பவர் வெளியிட் டார். இக்கொள்கைப் படி அமிலங்கள் காரங்களு டன் சேர்ந்து உப்பை உண்டாக்கும்; நேரயனியைக் (cation) கொடுத்து எதிரயனியுடன் (anion) சேரும் காரங்கள் எதிரயனியைக் கொடுத்து நேரயனி களுடன் சேரும்.

Na,O + SO, → 2 Na + + $o; 2 Na + Cl = 2 Na+ + 2 CIT (1) (2)

(1) வினையில் SO, அமிலமாகும்; காரணம் 0 அய னியை எடுத்துக்கொண்டு S0,15 மாறுவதுதான். (2) வது வினையில் Cடி அமிலமாகும்; ஏனெனில் இது எலெக்ட்ரான்களுடன் இணைந்து CI- ஆக மாறுகிறது. (2)ஆவது வினை ஆக்சிஜனேற்ற-இறக்க வினையாகும். ஆக்சிஜனேற்ற-இறக்கக் கோட்பாடு களும் இக் கொள்கையால் இணைந்திருப்பது இக் கொள்கையின் சிறப்பாகும்.

வன் அமிலங்களும் வன் காரங்களும், மென் அமி லங்களும் மென் காரங்களும். லூயிஸ் கொள்கைப்படி அமிலங்கள் காரங்களுடைய பண்புகளை ஒருமைப் படுத்த எடுத்த முயற்சிகள் மிகவும் சிக்கலுக்கு உள்

ளாயின. ஆகையினால் இந்த முறைப்படுத்தலில் முதன் முதலில் 1963 ஆம் ஆண்டில் ஆர்.ஜி. பியர் சன் (R. G. Pearson) ஓரளவு வெற்றிகண்டார். அவர் கொள்கைப்படி, லூயிஸ் காரங்களை அவர் மென்காரங்கள் (soft bases) என்று அழைத்தார். இந்த மென்காரங்கள் அதிக முனைவாக்கும் தன்மை உள்ளவையாகவும், குறைந்த எலெக்ட்ரான் ஈர்ப்பு சக்தி உள்ளவையாகவும், எளிதில் ஆக்சிஜனேற்றப் படுபவையாகவும் இருக்கின்றன. ஆனால் காரங்கள் இதற்கு நேர் எதிர்ப்பண்புகளைக் கொண்டிருந்த தால் அவை வன்காரங்கள் (hard bases) என்று அழைக்கப்பட்டன. சில காரங்களை உயரும் மென்மை வரிசையில் கீழ்வருமாறு குறிப்பிடலாம்.

H,O> OH > F> NH;> NO,> Br" >[> SOx 2

வன் அமிலங்கள் மிகவும் குறைந்த முனைவாக்கும் தன்மை உள்ளவையாகவும் பருமன் குறைந்தவையா கவும் (small size) மிகையான நேர் ஆகசிஜனேற்ற எண்ணைக் கொண்டவையாகவும் இருக்கும்.

2+ Ht, Lit, Na+, Mg, Ca 3+ Fe³+

மென் அமிலங்கள் அதிக முனைவாக்கப் பண்பு களையும் சுழி அல்லது நோமின் சுமையையும், அதிகப் பருமனளவும் எளிதில் கிளர்வு பெறக்கூடிய எலெக்ட்ரான்களைக் கொண்டும் இருக்கும்.

Cu+, Ag, Cd", Pt+, I,

இவ்விரண்டுக்கும் இடையிலுள்ள அமிலங்கள் Fe . 2+ Pt வன் அமிலங்கள் வன் காரங்களுடனும் மென் அமிலங்கள் மென் காரங்களுடனும் வினைபுரிகின் றன. இந்தக் கொள்கை, அமிலங்களையும் காரங்க ளையும் பகுப்பதற்கு மட்டுமே பயன்படுமே அன்றி அவற்றின் பண்புகளைக் கொள்கையளவில் விளக்கப் பயன்படாது.

நூலோதி

-இரா.ச.

1. McGraw-Hill Encyclopaedia of Chemistry, Fifth Edition, McGraw-Hill Book Company, New York, 1982.

2. Longo, Frederick R., General Chemistry, Interaction of Matter, Energy and Man, Revised First Edition, McGraw-Hill Book Company New York, 1974.

°4

29