568 அளவறி வேதிப்பகுப்பு
568 அளவறி வேதிப்பகுப்பு பகுப்பாய்வு வேதியியலைப் பண்பறி பகுப்பு (qualitative analysis), அளவறி பகுப்பு (quantitative analysis) என இரு வகைப்படுத்தலாம். ஒரு பொரு ளில் என்னென்ன தனிமங்கள் அல்லது சேர்மங்கள் உள்ளன என்பதைக் கண்டறிவதே பண்பறி பகுப் பாகும். ஒவ்வொரு தனிமமும் அல்லது சேர்மமும் எவ்வளவு உள்ளது என்கிற அளவைக் கண்டறியும் பிரிவே அளவறி பகுப்பாகும். அளவறி வேதிப்பகுப்பு கீழ்க்காணும் முறைகளை உள்ளடக்கியது. எடையறி பகுப்பு முறை (gravimetric analysis) பருமனறி பகுப்பு முறை (volumetric analysis) வளிம் - பருமனறி பகுப்பு முறை (gas-volumetric analysis) ஒளியியல் முறை (optical methods ) மின்வேதிப் பகுப்பு முறை (electrochemical analysis) பிற இயற்பு வேதியியல் முறைகள் (other physico-chemical methods) எடையறி பகுப்பு, இம்முறையில் அளவறியப்பட வேண்டிய தனிமம் தூய நிலையிலோ குறித்த இயை புள்ள சேர்மமாகவோ பிரித்தெடுக்கப்பட்டு எடை யிடப்படுகிறது. இவ்வெடையிலிருந்து அத்தனிமத் தின் இயைபு கணக்கிடப்படுகிறது. எடையறி பகுப்பு முறையை மூன்று வகை களாகப் பிரிக்கலாம்: பொருளில் அளவறியப்பட வேண்டிய கூறினை முழுமையாகப் பிரித்தெடுத்து எடையறிவது முதல் வகை.இரண்டாவது வகையில் பொருளில் அளவறியப் பட வேண்டிய கூறு முழுவதும் நீக்கப்பட்டு எச்சம் எடையிடப்படுகிறது. மூன்றாவது வகையில், அள வறியப்பட வேண்டிய கூறு மட்டும் தகுந்த வேதிச் சேர்மமாக மாற்றப்பட்டு இச்சேர்மம் பிரித்தெடுக்கப் பட்டு எடையிடப்படுகிறது. பருமனறி பகுப்பு. இப்பகுப்பில் ஒரு பொருளின் செறிவு (concentration), அதனுடன் முழுமையாக வினை புரியத் தேவையான செறிவு தெரிந்த மற் றொரு வினைப்பொருளின் (reagent) பருமனை அளந்து கணக்கிடப்படுகிறது. அளவிடப்பட வேண்டிய கூறினைக் கொண்ட பொருளில் சிறிதளவு துல்லியமாக எடையிடப் பட்டு ஒரு கரைசல் (solution) தயாரிக்கப்படுகிறது. அக்கரைசலில் அதனுடன் வினைபுரியத்தக்க, திறன் தெரிந்த மற்றொரு கரைசல் சிறிது சிறிதாகச் சேர்க்கப்பட்டு முழுவதும் வினையுறத் தேவைப்படும் திறன் தெரிந்த கரைசலின் பருமன் கண்டறியப் படுகிறது. இச்செயல் முறித்தல் (titration) எனப் படுகிறது. பயன்பட்ட திறன்தெரிந்த கரைசலின் பருமனிலிருந்து பொருளில் உள்ள கூறின் அளவு (group estimation) கணக்கிடப்படுகிறது. இது ஒரு நேர்முகமுறை. மற்றொரு மறைமுக வழியிலும் இவ்வளவீட்டை நிகழ்த்த முடியும். அளவிடப்பட வேண்டிய பொரு ளுடன் வினைபுரியத் தக்க திறன் தெரிந்த (நியமக்) கரைசல் (standard solution) தேவைக்கு அதிக மாகவே அளந்து சேர்க்கப்படுகிறது. வினை புரிந்தது போக எஞ்சியுள்ள கரைசலின் அளவு முறித்தல் வினை மூலம் கண்டறியப்படுகிறது. இதிலிருந்து பொருளுடன் வினையுற்ற கரைசலின் கரைசலின் கன அளவு கண்டறியப்பட்டுப் பொருள் அளவு கணக்கிடப் படுகிறது. அளவிடப்பட வேண்டியபொருளுக்கும் சேர்க்கப் பட்ட கரைசலுக்கும் இடையே நிகழும் வினை கீழ்க்காணும் வரம்புகளுக்குட்பட்டிருந்தால் மட்டுமே பருமனறி பகுப்பியலில் பயன்படுத்த முடியும். 1. வினை மீளா வினையாயிருத்தல் வேண்டும். 2. வினை முடிவுநிலை எளிதில் கண்டறியத் தக்கதாய் இருத்தல் வேண்டும். 3. வினை விரைவாக நடைபெறல் வேண்டும். பருமனறி பகுப்பு முறை வினைகளைப் பொது வாக மூன்று வகைப்படுத்தலாம். (1) நடுநிலையாக்க வினைகள் (neutralisation reactions) எனப்படும் வினைகளில் ஹைட்ரஜன் அயனியும் ஹைட்ராக்சில் அயனியும் இணைகின்றன. இவ்வினைகள் அமில- கார முறித்தல் (முறிவு) (acid-base titration) எனப் படுகின்றன. (2) ஆக்சிஜனேற்ற இறக்க வினைகள் (oxidation-reduction reactions): இவ்வினைகளில் வினையுறும் பொருள்களில் உள்ள தனிமங்களின் ஆக்சிஜனேற்ற நிலை மாற்றமடைகிறது. இவ் வினைகள் ஏற்ற-இறக்க முறித்தல் எனப்படுகின்றன. (3) வீழ்படிவாக்க விளைகள்(precipitation rcactions). இத்தகு வினைகளில் வீழ்படிவு தோன்றுகிறது. வளிம - பருமன். வளிமங்களின் பருமனை அளந்து அவற்றின் செறிவு அறியப்படுகிறது. இம்முறையில் வளிமக்கலவையில் உள்ள பல வளிமங்களிள் அள வினை அறியக் கீழ்க்காணும் முறை கையாளப் படுகிறது: பருமன் அளக்கப்பட்ட வளிமக் கலவையின் வெப்பநிலை, அழுத்தம் ஆகியவையும் அளக்கப் பட்டுப்பின் இக்கலவை தகுந்த வேதிப் பொருள்கள் வழியே அடுத்தடுத்துச் செலுத்தப்படுகிறது. இவ்