அளவறி வேதிப்பகுப்பு 569
வேதிப் பொருள் ஒவ்வொன்றும் வளிமக் கலலையி லுள்ள ஒரு வளிமத்தைத் தன் பரப்பில் ஈர்த்துக் கொள்ளும் தன்மையது. ஒவ்வொரு வேதிப் பொரு ளின் மீதும் செலுத்திய உடனேயே வளிமக் கலவை யின் பருமனில் ஏற்படும் குறைவு அளக்கப்படுகிறது. இப்பருமன் குறைவு பொருளினால் ஈர்க்கப்பட்ட வளிமத்தின் பருமனைக் குறிக்கும். இதிலிருந்து ஈர்க்கப்பட்ட வளிமத்தின் அளவு கணிக்கப்படுகிறது. இங்ஙனம் தகுந்த பரப்பு ஈர்ப்புப் பொருள்கள் (surface active substances) மீது செலுத்திக் கலவையில் உள்ள ஒவ்வோர் அளவும் கண்ட, டறியப் படுகிறது. வளிமத்தைத் தன் பரப்பில் ஈர்க்கக் கூடிய பொருள் எதுவும் இல்லையெனில், இவ்வளிமத் தின் ஒரு குறித்த கன அளவுடன் அதனுடன் வினை புரியத் தக்க மற்றோர் வளிமத்தைக் கலந்து வினையை நிகழ்த்தி அதனால் ஏற்படும் பருமன் மாற்றத்தைக் கண்டறிந்து இதிலிருந்து வளிமத்தை அளவிடலாம். ஒளியியல் முறைகள். ஒளியியல் அளவீடுகளைக் கொண்டும் பொருளின் அளவறியலாம். இவற்றுள் உமிழ் நிரல் (emission spectroscopy), உறிஞ்சு நிரல் (absorption spectroscopy) முறைகள் குறிப்பிடத் தகுந்தவையாகும். உமிழ் நிரல் பகுப்பு. இம்முறையில் பொருளைச் சுடரிலோ அல்லது மின்பொறியிலோ வெப்பப் படுத்தி ஆவி நிலையில் ஒளிரச் செய்து உமிழப்படும் ஒளி, ஒரு நிரல்மானி (spectrometer) கொண்டு பகுத்தாயப் அளவறி வேதிப்பகுப்பு 569 படுகிறது. பொருளில் பல்வேறு தனிமங்கள் இருப்பின் ஒவ்வொரு தனிமமும் குறித்த அலை நீளம் கொண்ட ஒளியை உமிழ்வதால் ஒவ்வொரு தனிமத்திற்கும் நிரலில் ஒரு கோடு கிடைக்கிறது. கிடைக்கும் நிரற் கோட்டின் திண்மைக்கும், பொருளில் உள்ள தனிமத் தின் செறிவுக்கும் அளவறி தொடர்பு உள்ளது. எனவே தனிமத்தின் செறிவை அளக்க இயலும். இச் செய்முறையில் பொருளுடன் குறித்த அளவு அகத் திட்டப் (internal standard) பொருளாக வேறொரு தனிமம் சேர்க்கப்படும். அகத்திட்டப் பொருளின் செறிவு தெரியுமாதலால் நிரலில் திட்டப் பொருள் கோட்டின் அடர்வுடன் அளவிடப்பட வேண்டிய தனிமத்தின் நிரல் கோட்டு அடர்வை ஒப்பிட்டுத் தனிமத்தின் செறிவு கணக்கிடப்படுகிறது. மிக நுண் ணிய அளவில் உள்ள தனிமத்தின் செறிவைக் கூட இம்முறையில் கண்டறியலாம். உலோகவியல் (metal- lurgy), புவியியல் (geography), வானியல் (astronomy) போன்ற துறைகளில் இவ்வுமிழ் நிரல் பகுப்பாய்வு பெரிதும் பயன்படுகிறது. உறிஞ்சு நிரலில் பொருளின் ஒளி உறிஞ்சும் தன்மை பகுத்தாயப்படுகிறது. இவ்வாய்வு நிரல் ஒளிமானி முறை மூலம் நடைபெறுகிறது. நிரல் ஒளிமானி (spectrophotometer) முறையில் குறித்த அலை நீளமுள்ள ஒளி பொருளின் வழியே உறிஞ்சப்படுகிறதா அனுப்பப்பட்டு அவ்வொளி என ஆயப்படுகிறது. சேர்மத்தின் தன்மைக்கேற்ப அகச் சிவப்பு நிரல் ஒளிமானி அ.க-2-72