அளவுக் கணிப்பியல் 573
பிழைவிடுக்காடு கருவியின் அளவு அளவீடு செய்த கருவியோடு இந்த அட்டவணையை யும் கொடுக்கவேண்டும். இதை வைத்துக்கொண்டு சரியான அளவை, கருவியின் அளவிலிருந்து கணக் கிடலாம். சரியான அளவு = கருவியின் அளவு × (1- பிழை விழுக்காடு 100 ) ஒரு கருவியை ஒரு பருமானத்திற்கு அளவீடு செய்யும்போது மற்ற பல பருமானங்கள் அந்தக் கருவியின் அளவை மாற்றி அமைக்கக்கூடும். ஆகவே கருவியை ஒரு பருமானத்திற்கு அளவீடு செய்யும் போது மற்றப் பருமானங்களை அளவு மாறாமல் வைத்துக் கொள்ளவேண்டும். அம்முறைக்கு மாற்ற மற்ற அளவீடு செய்தல் (static calibration) என்று பெயர். ஒரு கருவியை வெவ்வேறு பருமானத்திற்கு மாற்றி மாற்றி அளவீடு செய்து, அதைக் கொண்டு கூடுமானவரை எல்லாப் பருமானங்களும் மாறும் போது ஏற்படும் பிழையைக் கணக்கிடலாம். ஒரு கருவி பயன்படும் உண்மை நிலையில், அதாவது, பருமானங்கள், தன்னியல்பாக வேறுபடும் நிலையில் அளவீடு செய்வது மிகவும் கடினமே. அளவுக் கணிப்பியல் எஸ்.அர. நீளம், பரப்பு, பருமன் ஆகியவற்றின் அளவுகளைப் பற்றிக் கூறும் கணிதப்பிரிவு அளவுக் கணிப்பியல் (mensuration) எனப்படுகிறது, அடிப்படையான சில நேர்கோடுகள், வளை கோடுகள் ஆகியவற்றின் அளவு களிலிருந்து தொலைவுகளை அறியவும், சமதளமான பரப்புகளையும், வளைவான பரப்புகளையும் கணிக்கவும், பருமன்களைக் கணிக்கவும் உரிய முறை களும் வாய்பாடுகளும் இத்துறையில் தரப்படுகின்றன. கோடுகளை அளவிடல். நேர்கோடுகள் அளவு கோல்களாலோ, சங்கிலிகளாலோ அளவிடப்படு கின்றன. இரண்டு இடங்களுக்கு இடையே உள்ள அளவுக் கணிப்பியல் 573 வரைகளைக் தொலைவை நேரடியாக அளக்க முடியாவிட்டால் நாம் நேரடியாக அளக்கமுடிந்த கொண்டு, வடிவ கணித முறைகளால், அளக்கமுடி யாத தொலைவைக் கணக்கிடலாம். ஒரு வட்டத்தின் சுற்றளவிற்கும் அதன் விட்டத் திற்கும் உள்ள விகிதம் ஒரு மாறிலியாகும். இது ா என்ற இரேக்க எழுத்தினால் குறிக்கப்படும். இதன் மதிப்பு தோராயமாக 3. 1415927 (22/7). வட்டத்தின் வில்லை அளப்பதில் பின்வரும் அடிக்கோள்கள் (axtoms) பயன்படுகின்றன. (1). சம ஆரமுள்ள வட்டங்களின் விற்கள் அவைஎதிர்கொள்ளும்கோணங் களுக்கு நேர்ப்பொருத்தத்தில்இருக்கும். (2)வெவ்வேறு வட்டங்களில் ஒரே கோணத்தை எதிர்கொள் ளும் விற்கள் அவ்வட்டங்களின் ஆரங்களுக்கு நேர்ப் பொருத்தத்தில் இருக்கும். கணிதத்துறையில் கோணங் களைப் பாகைகளில் அளவிடாது ஆரகம் அல்லது ரேடியன் (radian) என்ற அலகில் அளவிடுகிறார்கள். ஒரு வட்டத்தின் ஆரத்திற்குச்சமமான நீளமுள்ள வில், எதிர்கொள்ளும் கோணம் ஓர் ஆரகம் எனப்படும். ஒரு முழுவட்டத்தில் 21 ஆரகங்கள் உள்ளன. 2ள ஆர கங்கள் 360° க்குச் சமம். ஓர் ஆரகம் என்பது தோரா யமாக 57. 27 க்குச் சமம். திருத்தமான வட்ட வடிவ மற்ற வளைவின் நீளத்தை அளவிட, அதைச் சிறு பகுதிகளாகப் பிரித்து ஒரு சுவராயத்தின் உதவியால் இப்பகுதிகளின் நீளத்தை ஒரு நேர்கோட்டின் மேல் தொடர்ச்சியாகக் குறித்துக்கொண்டு அதன் நீளத் தைச் செய்முறையால் அறியலாம். வளைகோட்டின் சமன்பாடு தெரிந்தால் கலனகணித (calculus) முறை யைப் பயன்படுத்தியும் நீளத்தைக் கண்டறியலாம். இதற்கான வாய்பாடு என்பதாகும். S = dx a சமதளப் பரப்புகளைக் கணக்கிடல். பரப்புகளில் மிக எளிய வடிவுள்ளது செவ்வகம். இதன் நீளத் தையும் அகலத்தையும் பெருக்கிப் பரப்பைக் கணக் கிடலாம். இணைகரத்தின் பரப்பை இவ்வாறே a D படம் 1, இணைகரத்தின் பரப்பைக் கண்டறிதல்