பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/607

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அளவுக்‌ கருவிகள்‌, மின்னியல்‌ 577

அமைப்பில் இணைக்கப்பட்ட மயிரிழை விற்சுருள் hair spring) பயன்படுகிறது. கட்டுப்பாட்டுத் திருக் கம் (controlling torque) இயங்கும் அமைப்பின் விலகு கோணத்தைப் பொறுத்தது. எனவே இந்தக் கட்டுப்பாட்டுத் திருக்கத்தை வழங்க,விற்சுருளின் சுற் றுக்களின் எண்ணிக்கை தேவையான அளவு அதிக மாக அமையவேண்டும். அவ்வாறு இருந்தால்தான் ஒற்றை நீளத்தில் ஏற்படும் உருமாற்றம் (deforma- tion/length) சிறியதாக இருக்கும். விற்சுருளில் நிலை யான தகைவு (permanent set) ஏற்படா வண்ணம், விற்சுருளின் தகைவு வரையறுக்கப்பட வேண்டும். என ஓர் அகல் விற்சுருளை (spiral spring) எடுத்துக் கொள்வோம். இது L நீளத்தையும், செவ்வகக் குறுக்குவெட்டையும் கொண்ட தகட்டிலிருந்து (strips) செய்யப்பட்டதாக வைத்துக் கொள்வோம். இதன் ஆரத்தடிப்பை (radial thickness) t மீ. வும் ஆழத்தை t மீ. எனவும் கொள்வோம். விற் சுருள் செய்யப்பட்ட உலோகத்தின் யங்கின் மட்டு (Youngs modulus, E எனக் கொள்வோம். விற் சுருளின் ஒரு நுனி, இயங்கும் அமைப்பில் இணைக் கப் பட்டிருக்கும்போது, இயங்கும் அமைப்பின் விலக் கம் 1 ஆரகன் ஆக இருந்தால், கட்டுப்பாட்டுத் திருக்கத்தையும் i என்ற விலகு கோணத்தையும் இணைக்கும் விதியைக் கீழ்க்காணுமாறு எழுதலாம். T: Eb t³ 12L இவ்வாறாகக்கட்டுப்பாட்டுத் திருக்கம் & வுக்கு நேர்ப்பொருத்தத்தில் இருக்கும். இங்கு, 0 என்பது கருவியின் விலக்கம். மேலும், விற்சுருளின் விலக் கத்தை இணைக்கும் மற்றொரு வாய்பாட்டைக் கீழ்க் காணுமாறு எழுதலாம். L = E 8 1/2 Smax Smax என்பது விற்சுருளின் பெருமத் தகைவு (maximum stress). அதுதளர்ச்சிக்கு உட்படாததாகவும் இருக்க வேண்டும். இதனுடைய தடையும், வெப்ப நிலைக் கெழுவும்(temperature coefficient) குறைவாக இருக்க வேண்டும். பாஸ்பர வெண்கலத்துடன் (phos phor bronze) சிலிகான் வெண்கலம் (silicon bronze), செம்பு (copper), கடின உருள் வெள்ளி (Hard roller silver), பிளாட்டின வெள்ளி (platinum silver). பிளாட்டின இரிடியம் (platinum iridium), ஜெர்மன் வெள்ளி (German silver) ஆகியவை விற்சுருள் செய்யப் பயன்படுகின்றன. புவி ஈர்ப்புக் கட்டுப்பாடு (Gravity control). புவி கட்டுப்பாட்டுக் கருவிகளில், இயங்கும் ஈர்ப்புக் அ.சு-2-37 அளவுக் கருவிகள், மின்னியல் 577 அமைப்பு விலகும்போது ஒரு கட்டுப்படுத்தும் திருக் கம் (controlling torque) உண்டாகுமாறு ஒரு சிறிய இயங்கும் அமைப்போடு இணைக்கப்பட் எடை டுள்ளது. wsine படம் 2. புவிஈர்ப்புக் கட்டுப்பாடு 1. குறிமுள் 2. சமன்செய் எடை 3. கட்டுப்பாட்டு எடை விலக்கம் 8 ஆக இருக்கும்போது, கட்டுப்பாட் டுத் திருக்கம் Wi sin 9 ஆகும். இதில் W என்பது கட்டுப்பாட்டு எடையையும் (control weight), 1 என்பது இயங்கும் அமைப்பின் சுழல் அச்சிலிருந்து அடக்கும் எடைக்குமிடையே உள்ள தொலைவையும் குறிக்கிறது. கட்டுப்படுத்தும் திருக்கம் விலகு கோணத்தின் சைனைப் (sine) பொறுத்தது. ஆனால் விற்சுருள் கட்டுப்பாட்டு முறையில் கட்டுப் பாட்டுத் திருக்கம் விலகும் கோணத்தைப் பொறுத் தது. கட்டுப்படுத்தும் எடையைத் தாங்கியுள்ளகையில் (arm) அடக்கும் எடையின் நிலையைக் கூட்டிக் குறைத்து, அடக்கும் திருக்கத்தை எளிதில் கூட்டிக் குறைக்கலாம். எனவே, புவிஈர்ப்புக் கட்டுப் பாட்டுக் கருவிகளைக் கண்டிப்பாகச் செங்குத்தான நிலையில்தான் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் அடக்குதல் நடைபெறும். அவை சமதளத்தில் இல்லாவிட்டால் அவற்றின் சுழிநிலை (zero position) பாதிக்கப்படலாம். விற்சுருள் கட்டுப்பாட்டையும் புவிஈர்ப்புக் கட்டுப் பாட்டையும் ஒப்பிட்டுப் பார்த்தல். புவிஈர்ப்புக் கட்டுப் பாட்டுக் கருவிகள், மலிவானவை; வெப்பத்தால் பாதிக்கப்படாதவை; காலத்தால் அழியாதன. விற்சுருள் கட்டுப்பாடு. இதில் விலக்குத் திருக்கம்TD அளக்கப்படவிருக்கும் மின்னோட்டத்திற்கு (I) நேர் விகிதத்தில் இருக்கும். எனவே To =KI (1)