பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது அசெட்டோஃபீனோன் (acetophenone) கிடைக்கிறது. இல்வினை ஃப்ரீடல்- கிராஃப்ட்ஸ் வினை எனப்படும்.

AICI, C;H; + CH,COCI →→ C.H.COCH;

பயன்கள். அசைல் குளோரைடுகள், பதிலீட்டு வினைகளில் பயன்படுகின்றன. மேலும் கரிமச் சேர் மங்களிலுள்ள ஹைட்ராக்சில் தொகுதிகளைக் கண் டறிவதற்கும் அவற்றின் எண்ணிக்கையினை மதிப் பிடுவதற்கும் இவை பயன்படுகின்றன.

அராயில் ஹாலைடுகள். பென்சாயிக் அமிலம், தயோனைல் குளோரைடுடன் வினைபுரியும் பொழுது பென்சாயில் குளோரைடு (benzoyl chloride) கிடைக்கிறது.

C,H,COOH + SO,CI; CàH,COCl + SO; + HCI

இதேபோல் மற்ற அரோமாட்டிக் அமிலங்களும் தயோனைல் குளோரைடு அல்லது பாஸ்ஃபரஸ் முக்குளோரைடு அல்லது பாஸ்ஃபரஸ் ஆக்சி குளோ ரைடு அல்லது பாஸ்ஃபரஸ் ஐங்குளோரைடுடன் வினைப்பட்டு அந்த அமிலங்களின் அமிலக் குளோ ரைடுகளைக் கொடுக்கின்றன.

பண்புகள். பென்சாயில் குளோரைடு எரிச்சல் ஊட்டக்கூடிய நெடிகொண்ட புகையும் நீர்மம். மற்ற அமிலக் குளோரைடுகள் நீர்மங்களாகவோ அல்லது திண்மங்களாகவோ இருக்கும்.

பென்சாயில் குளோரைடு சோடியம் ஹைட் ராக்சைடு உடனிருக்க அனிலீன், ஃபீனால் போன்ற வற்றுடன் தீவிரமாக வினைபுரிகிறது.

NaOH CH,NH, + C.H COCI → C,H,NHCOC H.

NaOH C_H,OH + C;H,COCI + C.H,OCOC.H

இவ்லினைக்கு ஷாட்டன்-பாமன் வினை (SchottenBaumann reaction) என்று பெயர்.

இந்த அமில ஹாலைடுகள் அமில உப்புகளுடன் வினைபுரிந்து அமில நீரிலியைக் கொடுக்கின்றன.

R'COCI + RCOONa -→ RCOOCOR'

பென்சாயில் குளோரைடு அமீன்களைப் பிரிப் பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இது கூட்டங்

அமிழ்கோணமும் செவ்வமிழ் திசையும் எழுகோணமும் 31

களைக் கலைப்பதற்குப் பயன்படுத்தப்படும் கண் ணீர்ப்புகைக் குண்டுகளில் பயன்படுகிறது. காண்க, அசைலேற்றம்.

-இரா. இல.

நூலோதி

1. Finar I.L., Organic Chemistry, Vol I, Sixth Edition, ELBS, London, 1973.

2. McGraw-Hill Encyclopaedia of Chemistry, Fifth Edition, McGraw-Hill Book Company, New York, 1983.

அமிழ்கோணமும் செவ்வமிழ்திசையும் எழுகோணமும்

ஒரு சரிவான தளத்தின் உண்மை அமிழ்வு அல்லது உண்மை அமிழ்கோணம் (true dip) என்பது கிடைத் தளத்துடன் அது சாய்ந்துள்ள கோண அளவாகும் (படம் 1). இக்கோணம் செவ்வமிழ் திசைக்குச் செங் குத்தாக அளக்கப்படும். தோற்ற அமிழ்கோணம் (apparent dip) என்பது பிற திசைகளில் அளக்கப் படும் அமிழ் கோணமாகும். செவ்வமிழ் திசையும் இரு தோற்ற அமிழ்கோணங்களும் தரப்பட்டால் உண்மை அமிழ்கோணத்தை எளிதாகக் கண்டறி யலாம். படுகைத் தளத்தின் அமிழ்கோணத்தை +1° அளவு துல்லியமாக அளக்க முடியாது.

வட்டார அமிழ்கோணம் என்பது அந்த வட்டார முழுவதிலும் அளக்கப்பட்ட அமிழ் கோணங்களின் பொதுமைப்படுத்திய கோணமாகும். சிறு சிறு வேறு பாடுகள் இங்குத் தள்ளப்படும். அமிழ்கோணம் அமிழ் திசையைக் குறிக்கவும் பயன்படுகிறது.

செவ்வமிழ்திசை

படுகைத் தளம்

செவ்வமிழ்திசை நீர்மட்டத்தளம் :

படம் 1. அமிழ்கோணமும் செவ்வமிழ்திசையும்