அளவு சுருக்கல் 585
பாய்மத்தில் எடைக்கும் பரப்புத் தடைக்கும் ஏற்ற வாறு துகள்கள் படியும் வேகத்தைக் கொண்டு அதற்குச் சமமான விட்டத்தைக் கண்டறிந்தும் துகள்களின் விட்டம் கணிக்கப்படுகிறது. இது போலவே பரப்புக் கவர்ச்சி (Adsorption) மூலமும் மேல்தளப் பரப்பைக் கண்டறியலாம் அல்லது முன்கூறிய முறைகளில் கண்டறிந்த விட்டத்திலி ருந்தும் மேல்தளப் பரப்பைக் கண்டறியலாம். ஒழுங்கற்றதுகள்கள் 00 L>B>T B கோலங்கள் ото புள்ளியியல் சராசரி விட்டங்கள் -DS- L=B= T 0 படம் 1. துகள்களின் அளவுகளும், வடிவங்களும் துகள்களின் சராசரி விட்டத்தைப் பற்றிய நடை முறை அறிவு இருந்தால் மட்டுமே அந்தத் துகள் களின் விட்டத்தையளக்கும் அளவை முறையைக் கூறமுடியும். னென்றால் ஒவ்வோர் அளவை முறையும் குறிப்பிட்ட அளவு விட்ட இடைவெளி யையே அளக்க உதவுகின்றது.விட்ட அளவைமுறை விட்டத்தைச் சார்ந்து அமைந்தாலும் அக்குறிப்பிட்ட விட்ட இடைவெளிக்குள் துல்லியமாக அளக்கவும் மதிப்பு வாய்ந்த முடிவுகளை அடையவும் வழி வகுக்கிறது. அளவு சுருக்கல் செயல்முறையில் அடங்கும் துகள் கள் பரந்த வெவ்வேறு அளவு இடைவெளியுடைய திரள்களாகவோ, பல தனித் துகள்களையுடைய மணி அமைகின்றன. அல்லது தூள்கட்டிகளாகவோ (powdery mass ) துல்லியமான அளவை என்பது நாம் அளவுக்கூறைப் (sample) எடுக்கும் தக்க பொறுத்து அமையும். இந்த அளவுக்கூறை, அது அமையும் திரளின் துகள் இயல்பையும் அளவையும் அ.க-2-74 அளவு சுருக்கல் 585 மாற்றாமல், அளக்கத் தகுந்த அளவுக்குச் சிறிதாக்கிப் பின்பு, அளக்கப் பயன்படுத்த வேண்டும். அவ்விதம் அளந்த அளவுகளைப் புள்ளியியலாக மதிப்பிட்டு மூல அளவுக்கூறின் முடிவுகளை மீளப்பெறல் வேண் டும். நமக்குத் தேவையான முடிவு பெருமப் பரப்பு அல்லது பெரும் விட்டம் அல்லது பெரும் அளவுக்கு அமையும் துகள் எண்ணிக்கை அல்லது பொருள் எடைப் பரவலாக (distribution) இருக்கலாம். துகள் களை அளக்கப் பயன்படும் முக்கிய முறைகளை அட்டவணையில் (பக்கம் 586) காண்க. அட்டவணையில் உள்ள துகளின் அளவு விவரங்கள் மேல்தளப் பரப்பு அவகுகளில் (units) அதாவது சதுர மீட்டர்/கிராம்களில் குறிப் பிடப்படுவதுண்டு அல்லது சமச் சராசரி விட்டங் களிலும் குறிப்பிடப்படுவதுண்டு. இது மேல்தளச் சராசரி விட்டம் என அழைக்கப்பட்டு X என்ற குறியீட்டால் மைக்ரான்களில் எழுதப்படும். அளவுப் பரவலிலிருந்து மேலும் முக்கியமான விவரங்களை அறிய முடியும். இது மொத்தத்தில் பத்து விழுக்காடு (10)% எடையளவு பெரிதாகவும் தொண் ணூறு விழுக்காடு (90%) எடையளவு சிறிதாகவும் உள்ள விட்டம் என எண்களில் குறிக்கப்படுகிறது. இந்த விவரத்தை வரைபடத்தில் ஓரளவுக்கெதிராக அந்த அளவைக்காட்டிலும் பெரிய அளவுடைய துகள் களின் தொடர் கூட்டல் விழுக்காட்டை (cumulative percentage) வரைந்து குறிப்பிடுவர். இத்தகைய வகைமை வளைவுகள் (typical curves) படம் 2இல் காட்டப்பட்டுள்ளன. பட S த்திலுள்ள வளைவின் ச சரிவுகளைத் (slopes) தொடர்ச்சியாகப் படம் வரைந்தால் முகட்டு வளைவு (model curve) கிடைக்கும். அதில் குறிப் பிட்ட விட்டத்திற்கெதிராக அவ்விட்ட அலகின் விழுக்காடு வரையப்பட்டிருக்கும். இவ்விரண்டு வளை வுகளும் மிக அடிப்படையானவை; அளக்கப்பட்ட விட்டங்களைச் சாராதவை. அரைத்தலின் ஒரு நோக்கம் குறிப்பிட்ட அள வுள்ள சிறு துகள்களை அடைவதே. குறிப்பிட்ட பெருமஅளவு முக்கியமானதென்றால், ஒரு சல்லடை மூலமாக அதைவிடப் பெரிய துகள்களைச் சலித்து மீண்டும் அந்தப் பெரிய அளவுத் துகள்களை எந்தி ரத்திற்குக் கொண்டு சென்று அரைக்கச் சில கட்டுப் பாட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். சல்லடை, பெரும் அளவைவிடச் சிறிய துகள்களை மிக நுண்ணிய மட்டும் சலித்துப் பிரித்தனுப்பும். மிக துகள்கள் தேவையில்லையென்றால் அந்நிலைமையை ஓரளவே அடையமுடியும். ஏனென்றால் உடைபடும் போது துகள்கள் பல அளவுகளில் உடைபடுகின்றன. உடைபடும் துகள்களின் அளைவுப்பரவலைப் புள்ளி