பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/619

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அளவைகளின்‌ அலகுகள்‌ 589

கட்டுபாட்டிதழ்கள் வழியாக நீர்மத்தை ஊட்டித் துணிப்பு விசையை ஏற்படுத்தலாம். இது ஓர் எளியவகை அமைப்பாகும். காண்க, வகைப்பாடு; எந்திரவியல்; நொறுக்கலும் தூளாக்கலும்; தீட்டுதல் அல்லது சாணை பிடித்தல்; உலோக வடிப்பு முறை; அலகு வினைகள். நூலோதி 1. Dalla Valle, J. M., Micrometrics: The Tech- nology of fine Particles, 2nd edition, McGraw -Hill Book Company, New York, 1948. 2. Tendan, G, Small Particle Statistics, McGraw- Hill Book Company, New York, 1953. 3. Krik R.E., and Othmer, D.E., Encyclopae- dia of Chemical Technology Vol. 12, McGraw- Hill. Book Company, NewYork, 1954. அளவுபடுத்திய நூல் அளவு நெய்வதற்கு முன்பு நூல்களை அளவுபடுத்துதல், நூல் இடையிலுள்ள உராய்வையும் விழுதுகளுக் கிடையி லுள்ள உராய்வையும் குறைக்கிறது.இது நூலை வலிவு படுத்தி அதற்கு உயவிடுகிறது. பல நேரங்களில் இது நூலின் எடையைக் கூட்டி நெய்த ஆடையின் திண்மையை அதிகரிக்கிறது. இவ்வகை ஊடை நூல்கள் சில சிறப்புவகை ஆடைகளுக்கு மட்டுமே படுத்தப்படுகின்றன. ஆனால் இவ்வகைப் பருத்தி பாவு நூல்களோ குறைந்த எடை, நடுநிலை எடை, மிகுந்த எடை என மூன்று வகைகளில் அளவுபடுத்தப் படுகின்றன. எடை குறைந்த அல்லது தனி அளவு படுத்தும் முறையில் ஊடை நூலைவிடப் பாவு நூல் 5 முதல் 10 விழுக்காடு எடைமிக்கதாய் அளவுபடுத் தப்படுகிறது. இது நெசவின் திண்மையைக் கூட்டும். இந்தவகை நூல்கள் சலவை செய்கின்ற, அல்லது சாயம் ஊட்டவேண்டிய, அல்லது ஈரமாகவே சீர் செய்யவேண்டிய ஆடைகளுக்குப் பயன்படுகின்றன. நடுநிலை அளவுபடுத்தலில் ஊடை நூலைவிட 10 முதல் 40 விழுக்காடு எடை அளவுக்குப் பாவு நூல் அளவுபடுத்தப் படுகின்றது. இது து ஆடையின் எடையைக் கூட்டும். எடைமிக்க அளவுபடுத்தலில் பாவு நூலின் எடை 40 முதல் 100 விழுக்காடு வரை கூட்டப்படும். தொடர்படலமாக அல்லது பொதி யிழைகளாகப் பயன்படும் மடிந்த நார் செய்யப்பட்ட இழைகள் நெய்வதற்கு முன்பு அளவுபடுத்தப்படு அளவைகளின் அலகுகள் 589 கின்றன. இதனுடைய நோக்கம் நூலின் வலிவைக் கூட்டி எந்திரப்பகுதிகளில் நூல் இயங்கித் தேயும் போது இழை அறாமல் பாதுகாக்கப்படுவதே. மேலும் இது இழையின் நிலைமின் விளைவுகளையும் குறைக்கிறது. நூலோதி Grosicki, Z., Watson's Textile Design and Colour, 7th Edition, Newness, Butterworth, London, 1980. அளவைகளின் அலகுகள் அலகுகளை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். நீளம் (length), பொருண்மை (mass), நேரம் (time) இவற் றின் ஒற்றைஅளவுகள் அடிப்படை அலகுகள் (funda- mental units) ஆகும். அடிப்படை அளவுகளைப் பெருக்கினாலோ அன்றி வகுத்தாலோ வரும் அலகு கொணர் அலகு (derived unit) அல்லது சார்அலகு எனப்படும். நீளத்தின் அலகு மீட்டர். தொடக்கக் காலத்தில் மீட்டர் கோல் பாரிஸ் நகரில், சீரான வெப்ப நிலையில் வைக்கப்பட்டிருந்தது. தற்காலத்தில், ஒளி யின் அலை நீளத்தால் மீட்டர் வரையறுக்கப்பட் டுள்ளது. காட்மியம் (cadmium) என்ற தனிமம் சிவப்பு ஒளியை வெளியிடுகின்றது. 1 மீட்டர் நீளம், சிவப்பு ஒளி அலை நீள எண்ணிக்கைகளால் வரை யறுக்கப்பட்டுள்ளது. எத்தனை காட்மியச் சிவப்பு அலை நீளங்கள் சேர்ந்தது ஒரு மீட்டர் என்பது மிகவும் துல்லியமாக வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவான விளக்கத்தைப் பெறக் காண்சு, அலைநீளச் செந்தரங்கள். நீளத்தையும் அகலத்தையும் பெருக்கினால் சதுர அளவு கிடைக்கின்றது. பரப்பளவின் அடிப்படை அலகு சதுரமீட்டர் (m). இதேபோல, நீளம், அகலம், உயரம் இவற்றைப் பெருக்கினால் பருமன் அளவு கிடைக்கின்றது. பருமன் அளவின் அடிப்படை அலகு பருமீட்டர் (m). காண்சு, அளவுக் கணிப்பியல். கலிலியோவைத் தனி ஊசலின் தந்தை எனக் குறிப்பிடுகின்றனர். 1 மீட்டர் நீளம் கொண்ட தனி ஊசலின் அலைவுநேரம் (period of oscillation), 2 நொடி ஆகும். இது இடத்திற்கு இடம் சிறிது மாறுபடும். கண் இமைப்பு நேரம், நெஞ்சத் துடிப்பு நேரம் ஆகியவற்றை நிலையான நேரத்தின் அல்லது