பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிழ்கோணமும் செவ்வமிழ் திசையும் எழுகோணமும்

ஒரு சரிந்த தளத்தில் கிடைக்கோடு வரைய முடி கின்ற திசை செவ்வமிழ்திசை (strike) எனப்படும். இது படுகையோட்டத் திசையைக் குறிக்கும். ஒரு வட்டாரப் படுகையின் செவ்வமிழ்த்திசை கிழக்கு மேற்காக அமையலாம். திசையின் சிறு சிறு வேறு பாடுகள் இங்குத் தள்ளப்படும்.

பெரும்பாலான படிவுப் பாறைகள் (sedimentary rocks) கிடைத்தளத்திலோ சற்றே சரிந்த கிடைத்தளத் திலோ படிகின்றன. அதிகமான சரிவுள்ள படிவுப் பாறைகள், அப்பாறைகள் படிந்த பின் ஏற்படும் நில இயக்கத்தால் உருவாகியனவே. இந்தச் சரிவு படிலின்போது ஏற்பட்டதானாலும் சரி, நிலஇயக்கம் உண்டாக்கும் மடிப்பின் போதோ அல்லது கீழ் நோக்கிய சில சரிவுடன் கூடிய சுழற்சியின் போதோ ஏற்பட்டதானாலும் சரி, அந்தச் சரிமானத்தின் அமிழ் போக்கை அளத்தல் மிகவும் முக்கியமானதாகும். படிந்துள்ள படுகைத் தளத்தின் கோணத்தைக் கிடைத் தளத்துடன் ஒப்பிட்டு அளக்கும் கோணத்தை அமிழ் கோணம் என்கின்றனர். அமிழ்கோணம் என்பது பெருமச் சரிமானத்தின் (maximum slope) திசை, பெருமச்சரிமானத்துக்கும் கிடைத் தளத்துக்கும் இடை யிலுள்ள கோணம் ஆகிய இரண்டையும் குறிப்பிடும்.

நடைமுறையில் அமிழ்கோணத்திசை அதன் உண்மைத் திசைக்கோணத்தை (truc bearing)

வைத்து அளக்கப்படுகிறது. திசைக்கோணம் என்பது வடடக்கிலிருந்து கிழக்காக அல்லது மேற்காக அமையும் பாகைகளில் அளக்கப்படும் கோணமாகும். காந்த வட்டையின் அளவில் காந்தத் திருத்தங்கள் செய்து உண்மைத் திசைக்கோணம் பெறப்படுகிறது. அமிழ் கோணம் சரிவளவியால் (clinometer) அளக்கப்படும்.

சரிந்த படுகையின் செவ்வமிழ் திசை என்பது அத்தளத்துக்கு இணையாகவும் அமிழ்கோணத்துக்குச் செங்குத்தாகவும் அமையும் திசையாகும். இது படு கைத் தளம், நீர்மட்டம் அல்லது கிடைத்தளத்தை வெட்டுகின்ற கோட்டுத் திசையாகும். அமிழ்கோணத் திசை செவ்வமிழ் திசைக்குச் செங்குத்தாக அமையும். செவ்வமிழ் திசையுடன் அமிழ்கோணமும் தரப்படல் வேண்டும். ஏனெனில் கிழக்கு மேற்காக அமையும் செவ்வமிழ் திசைக்கும் இரு அமிழ் ஒவ்வொரு கோணங்கள் ஒன்று வடக்காகவும் மற்றொன்று தெற் காகவும் அமையலாம். படுகைத் தளத்தின் சரிவை நிலைக்குத்துத் தளத்துடன் ஒப்பிட்டு அளந்தால் எழுகோணம் (hade) கிடைக்கும். சுரங்கஇயலில் பெரி தும் வழக்கில் உள்ளது எழுகோணமேயாகும். எழு கோணமும் அமிழ்கோணமும் நிரப்புக் கோணங்கள் (complementary angles) ஆகும். அதாவது 90° அமிழ்கோணத்தைக் கழித்தால் எழு பாகையில் கோணம் கிடைக்கும்.

32