பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/620

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

590 அளவைகளின்‌ அலகுகள்‌

590 அளவைகளின் அலகுகள் காலத்தின் அளவாகக் கொள்ள முடியாது. தற் பொழுது எலெக்ட்ரானியல் அலைவியற்றிகள் (electro- nie oscillators) துல்லியமாக நேரத்தை அளக்கப் பயன் படுத்தப்படுகின்றன. குவார்ட்சு படிகமும் (quartz crystal) அண்மையில் காலத்தைத் துல்லியமாக அளக் கப் பயன்படுத்தப்படுகிறது. நேரத்தின் அடிப்படை அலகு நொடி (second) ஆகும். A T ஓர் அலைவிற்கு 0.5 நொடி எடுத்துக்கொள்ளும் ஊசல், நொடிக்கு 2 அலைவுகள் செய்யும். அலை வெண்ணும் (frequency-f)அலைவு நேரமும் (period-T) ஒன்றுக்கொன்று தலைக்கீழ்மாறி ஆகும் (reciprocal); அலை நீளம் அலைவு எண், ஆகும். அலைவு நேரம் ஒரு சூரிய நாளை 360 பாகையாகப் பிரித்து, 15° சூரியன் செல்வ ஒருமணிநேரம் என்றும் ஒரு பாகைக்கு 4நி மிடம் என்றும் கணக்கிட்டு அதை 60 ஆகப்பிரித்து ஒரு நொடி என்றும் கூறுகிறோம். அலைவு எண் ஹெர்ட்ஸ் (Hertz) என்ற அலகில் கணக்கிடப்படு கிறது. வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சாரம் 50 ஹெர்ட்ஸ் அலைவுகள் கொண்டது. வானொலி நிலையங்கள் 108 ஹெர்ட்ஸ் (மெகா ஹெர்ட்ஸ்) அலைவு எண்களைப் பயன்படுத்துகின்றன. ஹெர்ட்ஸ் 1/நொடி மதிப்புக் கொண்டது. வேகம் (speed) என்பது நொடிக்குச் செல்லும் தொலைவு.4 நொடிகளில் 40 மீட்டர் தொலைவு செல்லும் ஒருபொருள் நொடிக்கு 10 மீட்டர் வேகத் தில் செல்கிறது. விரைவு (velocity) ஒரு குறிப்பிட்ட திசையில் நொடிக்குச் செல்லும் தொலைவு. விரைவு வேகத் தைப் போன்றதே. ஆனால் வேகத்துடன் திசை யையும் சார்ந்தது. முடுக்கம் (acceleration) ஒரு நொடிக்கு விரைவில் காணப்படும் மாற்றம். 4 நொடிகளில் ஒரு வண்டியின் விரைவு நொடிக்கு 40 மீட்டரிலிருந்து நொடிக்கு 80 மீட்டராக மாறினால் முடுக்கம் 80 மீட்டர் நொடி- 40 மீட்டர்/நொடி 40 மீட்டர்/நொடி 4 நொடி 4 நொடி 10 மீட்டர் (நொடி)" மீட்டர் (நொடி)" (m/secs) என்பது முடுக்கத்தின் அலகு. பொருண்மையின் (mass) அடிப்படை அலகு கிலோ கிராம் (kilogram) ஆகும். கிலோ கிராமை, நியூட்டனின் புவி ஈர்ப்பு விசையின் அடிப்படையில் வரையறுக்கலாம். பூமியின் பொருண்மை M கிலோ கிராம் பூமியின் ஆரம் R மீட்டர். புவி ஈர்ப்பு விசை நிலையெண் (gravitational constant)G. பூமியின் மேற் பரப்பில் 1கிலோபொருண்மையுள்ள பொருளை வைத் தால், 1 கிலோ மீது உள்ள இழுப்புவிசை GM R¹ g; g என்பது புவிஈர்ப்பால் ஏற்படும் முடுக்கம் (accele ration due to gravity). இயல்பாக gஇன் மதிப்பு 9.8 மீட்டர் (நொடி)'. இது இடத்திற்கு இடம் சிறிது மாறுபடும். இந்தச் சமன்பாட்டிலிருந்து, பொருண் மையை வரையறுக்கலாம். 1 கிலோ பொருண்மை கொண்ட இரண்டு எடைகளை 1 மீட்டர் தொலைவு பிரித்துவைத்தால், அவ்விரண்டு எடைகளுக்கும் GX1X1 இடையே உள்ள விசை 12 - = G நியூட்டன் ருக் கள். இதிலிருந்து 1 கிலோகிராம் என்றால் என்ன என்பதை வரையறுக்கிறோம்.பொதுப் பொருள்களு குப் பொருண்மை மாறுவதில்லை. ஆனால், நுண் துகள்களுக்குப் பொருண்மை வேகத்திற்கேற்ப மாறுபடும். ஒரு கிலோ பொருண்மையினை ஐன்ஸ்ட் டைன் விதி கொண்டும் வரையறுக்கலாம். 1கிலோ கிராம் முற்றிலும் அழிந்து ஆற்றலாக மாறுமானால். 9× 1018 ஜூல் ஆற்றல் கிடைக்கும். M கிலோ கிராம் முற்றிலும் அழிந்து ஆற்றலாக மாறினால் Mc ஜூல் ஆற்றல் கிடைக்கும். c என்பது ஒளியின் திசை வேகம். இதன் மதிப்பு, வெற்றிடம் அல்லது காற்று மண்டலத்தில் 3X108 மீட்டர்/நொடி. விசை என்பது பொருண்மை,முடுக்கம் ஆகியவற் றின் பெருக்குத்தொகை. f=ma. m- பொருண்மை (கிலோ) a = முடுக்கம், (மீட்டர்/ (நொடி)2). விசை யின் அலகான நியூட்டன்விசை என்றால் என்ன என் பதையும், விசையை எவ்வாறு அளப்பது என்பதை யும் எடுத்துக் காட்டியவர் நியூட்டன். 4 கிலோ கிராம் பொருண்மை 10மீ) (நொடி)" முடுக்கம் கொண்டதால், ஏற்படும் விசை 40 நியூட்டன். பூமியில் ஒவ்வொரு பொருளும், பூமியின் நடுப் புள்ளியை நோக்கி இழுக்கப்படுகிறது. 10 கிலோகிராம் பொருண்மை 10 × g நியூட்டன் வீசை கொள்கிறது. g என்பது 1 கிலோகிராம் பொருண்மையில் நில ஈர்ப்பின் முடுக்கம் ஏற்படுத்தும் விசை ஆகும். 98 நியூட்டன் விசையை = 10 கிலோ 98 98 9.8 பொருண்மை என்றும் கொள்ளலாம். விசையை இரண்டு வகையாகக் குறிப்பிடலாம். ஒரு விசை 9800 நியூட்டன் எனக் கொள்வோம். = 1000 கிலோகிராம் எடையாகும். 9800 8