அறிதல் நிகழ்வு 607
கின்றன. இந்த உயிரிகளின் பல்வகைச் சிற்றினங் களின் தோற்றத்திலிருந்து, எவ்விதமான சீர்கேடு உண்டாயிருக்கிறது என்பதனை அறியலாம். ட்ரௌட் என்ற ஒரு வகை மீன் ஆற்று நீர் மாசுபட்டிருந்தால், நீர்மட்டத்தின் மேல் செல்லும் தன்மையுடையதாக இருக்கிறது. ஆற்று நீர் சுத்தமாக இருக்கும்பொழுது இதுநீரோட்டத்தின் திசைக்குஎதிர் நீச்சல்போட்டுச் செல்லுகிறது. இதை அடிப்படை யாகக் கொண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள லுவார் நதியின் மாசுநிலையை அளக்க ஒரு மானியாக இவை உதவுகின்றன. புழுக்கள். மெல்லுடலிகள், கணுக்காலிகள், பொராமனியா போன்ற உயிரிகள் கடல் சூழ்நிலை யில் ஏற்படும் சீர்கேட்டை எடுத்துக்காட்ட உதவு கின்றன. சாக்கடைக் கழிவுநீர் கலக்குமிடத்திலும் தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் நீர் ஆறு, கடலில் கலக்குமிடங்களிலும்,"காபிடெல்லா காபிடா" என்ற ஒரு வகைப் புழு காணப்படும். இதுபோலவே, மேலைய நாட்டிலுள்ள பல நதிக் கழிமுகங்கள் சீர் கேடு அடையும் பொழுது, சிற்சில வகைப் புழுக்கள் பொருளி காணப்படுகின்றன. ஒவ்வொரு மாசுப் னால் ஏற்பட்ட சூழ்நிலை சீர்கேட்டிற்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட உயிரி வகை காணப்படும். அந்த குறிப் பிட்ட உயிரி வகை காணப்படும்பொழுது அந்த நீர் நிலை எதனால் சீர்கேடு அடைந்திருக்கிறது என் பதனைத் திட்டவட்டமாக அறியமுடியும். ஏதாவது உலோகப் பொருள் நீரில் கலந்து அது சீர்கேடு அடைந்திருந்தால் சில மெல்லுடலிகள் நீரில் கலக்கப்பட்டிருக்கும் உலோகப் பொருளின் தன் மையை அறிவிக்கின்றன. எடுத்துக்காட்டாக, கடல் மட்டி, முத்துச்சிப்பி வகை சார்ந்த ஒரு மெல்லுடலி தான் வாழும் தண்ணீரில் கலந்திருக்கும் உலோகப் காரீயம் பொருளான துத்தநாகம் போன்ற பொருளைத் தன் மெல்லிய தசையில் சேர்த்து வைத் திருக்கும். இதன் மூலம் பக்கத்தில் ஏதாவது உலோகப் படிவம் இருக்கும் என்பதை அறியமுடிகிறது. இது போலவே "பாலனஸ் ஆம்பிடிரைட்" என்ற உயிரி போன்ற குளோரின், செம்பு, ஈயம், பாதரசம் உலோகங்கள் கலந்த நீரில் அதிகமாகத் தோன்றி நமக்குத் தெரிவிக்கின்றது. பிரிட்டிஷ் கால்வாயில், ஒருவித மிதவை உயரி கள் அதிகமாகக் காணப்பட்டால் நீரோட்டம் எந் தத் திசையில் செல்கிறது என்பதை எடுத்துக்காட்டும். இது போலவே ஒரு குறிப்பிட்ட மிதவை உயிரிகள் அதிகமாகக் காணப்பட்டால், குறிப்பிட்ட மீன்கள் அங்குக் காணப்படும் என்று அறிந்துகொண்டிருக்கி அறிதல் நிகழ்வு 607 றார்கள். அட்லாண்டிக் பெருங்கடலில் "ரைஸோ ஸொஸினியா" என்ற ஒரு வகை பச்சைப்பாசி காணப்பட்டால், அங்கே ஹெர்ரிங் மீன்களின் சலனத்தை அறியமுடியும். இந்த அறிகுறி உயிர்கள் சூழ்நிலையின் எந்த விதச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது என்று அறியவும்,எந்த விதமான மீன்கள் எந்தெந்தக் காலத்தில் கிடைக்கும் என்பதையும், நீரினுடைய ஓட்டத்தையும் நமக்குத் தெரிவிக்கவும் உதவுகின்றன. இதுபோலவே சிறு தாவரங்களின் வளர்ச்சியி லிருந்து பக்கத்திலுள்ள காடுகள் பற்றியும், அதி லிருக்கும் விதவிதமான மரங்களைப் பற்றியும் நாம் அறிந்து கொள்ளலாம். இன்னும் சிற்சில செடிகளின் தோற்றத்திலிருந்து சூரிய வெப்பத்தின் தன்மையை அறியமுடியும். மேலும் சில செடிகள் நிலத்திலுள்ள உப்புச் சத்தின் தன்மையை எடுத்துக்காட்டும். இவ்வாறு செடிகொடிகளின் இனத்தோற்றத்திலிருந் தும் நிலத்தின் தன்மை, நீர், உப்புச்சத்து, தட்ப வெப்பம் முதலியவற்றை அறிய முடிகிறது. சுற்றுப்புறச் சூழ்நிலைக்கேற்ப வாழும் உயிர் களில் அவற்றின் இயல்புகளில் மாற்றம் ஏற்படுவது தெரிந்ததே. அதற்கு நமக்குத் எதிர்மறையாக வாழும் உயிர்களின் (உயிரினம் மற்றும் தாவரவகை) வகைகளும், அவற்றில் ஏற்படும் மாறுபாடுகளும், அவற்றின் செயல்பாட்டு இயல்களில் (behavioural changes) நிகழும் மாற்றங்களும் ஆழ்ந்து நோக்கி னால் சூழ்நிலையின் தரத்தையும், இயல்புகளையும் பற்றி எவ்வளவோ முக்கியக் குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. அறிதல் நிகழ்வு 10 சா. கா. சமூக தங்களது அறிவை முறைப்படுத்திக்கொள்ள உதவும் மனிதகுலப் படைப்புச் செயல்பாட்டின் வரலாற்று நிகழ்வு, அறிதல் நிகழ்வாகும் (cognition). இது மனித செயல்பாடுகளின் நோக்கங்களையும் குறிக்கோள்களையும் சார்ந்து அமையும், வருக்க முரண்பாடுடைய சமூகங்களின் வரலாறு முழுவதி லும் அறிதல் என்ற நிகழ்வு அகவியலான ஆக்கங் களைப் படைத்த துறை அறிஞர்களின் சிறப்புப் பணியாக மட்டுமே அமைந்திருந்தது. இதற்குக் காரணம் இத்தகைய சமூகங்களில் மன உழைப்பும் உடல் உழைப்பும் எதிரெதிராய் முரண்பட்டுச் சார் பாகப் பிரிந்திருந்த நிலைமையே ஆகும். அதாவது, சமூகத்தில் ஒரே தன்மை வாய்ந்த அன்றாடப் பணி