608 அறிபொருள்
608 அறிபொருள் களுக்கு எதிராகப் படைப்புச் செயல்பாடு (creative activity) பிரித்து நிறுத்தப் பெற்றதேயாகும். அறி வியல், அழகியல், அறவியல், சமயம், ஒழுக்கம் போன்ற பிற சமூகச் செயல்பாட்டுத் துறைகளுக்கும் இக்கருத்து பொருந்தும். இந்தக் காரணத்தினாலேயே அறிவுக் கோட்பாடு நடைமுறையிலிருந்து பிறிது படுத்தப்பட்ட (alienated), முற்றிலும் தனிநிலை வாய்ந்த, அகவயச் செயல்பாட்டுக் கோட்பாடாக விளக்கப்பட்டது. (காண்க, கோட்பாடும் நடை முறையும்). இப்போக்கு அறிதலில் அறிய வொண்ணாமை வாதத்தையும், கருத்து முதல்வாதப் போக்கையும் உருவாக்கியது. இயக்கவியல் பொருள் முதல்வாதம், நடைமுறையை அறிவுக்கோட் பாட்டுக்கு அடிப்படையாகவும் உரைகல்லாகவும் (criterion) கொள்கிறது. அறிதல் இயற்கையில் மனி தன் மேற்கொள்ளும் செயலிலும் இயற்கைப் பண் டங்களை மாற்றி அமைப்பதிலும் தொடங்குகிறது. மனிதர்களின் நடைமுறைச் செயல்பாடு அதே நேரத் தில் அவர்களின் செய்தித் தொடர்பு ஊடகமாகவும் விளங்குகிறது. ஒரு கல்லை வெட்டும்போதும் உலோ கங்களை உருக்கிப் பிரிக்கும்போதும் இந்தப் புறப் பொருள்களின் ஆழ்ந்த பண்புகள் அவர்களின் சிந்தனையில் எதிர்பலித்து நிலைக்கின்றன. கற்களும் உலோகங்களும் புலன்களால் அறியப்படும் அவற்றின் புறநிலை இயல்புகளின் ஒட்டுமொத்தத் தொகுப்பாக மட்டும் தோன்றுவதில்லை. அவற்றைப் பார்க்கும் போது வரலாற்றியலாக உருவாக்கப்பட்ட பதப்படுத்தல், பயன்படுத்தல் ஆகிய பழக்கவழக் கங்களின் மேற்படிவுடையனவாகவும் அவை மனிதனுக்குத் தோன்றுகின்றன. எனவே இந்தப் புறப்பொருள் அவன் செயல்களின் குறிக்கோளும் ஆகிறது. எனவே புலன்காட்சி (perception), மனி தனில் புலன்சார் நடைமுறைச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாகவே அமைகிறது. உயிர்த் துடிப்பான புலன்காட்சி, உணர்ச்சி (sensation), காட்சி (percep. tion), கருத்துருவம் (notion) ஆகிய வடிவங்களில் நிகழ்கிறது. புறப்பொருள்களின் இயல்புகளும் செயல் களும், மனிதக் குறிப்புப் பேச்சுச் (signal-speech) செயல்பாட்டில் நிலைக்கின்ற அவற்றின் புறநிலை மதிப்பும், சொற்களின் கருப்பொருளும் (meaning) உணர்பொருளுமாக (sense) அமைகின்றன. இவ் வகைப்பட்ட சொற்களைப் பயன்படுத்தியே மனிதன் புறப்பொருள்களின் குறிப்பிட்ட கருத்துருவங்களை யும், அவற்றின் இயல்புகளையும் செயல்பாடுகளையும் படைக்கிறான். மனித நுண்சிந்தனை, நிகழ்த்தும் போற்றுதலுக்குரிய செய்தி இது. சிந்தனையின் அளவையியல் செயல்பாடு என்பது பின்வரும் பல் வேறு வடிவங்களில் எதிர்பலிக்கும் கருத்துரு, தீர்ப் புக்கூற்று, உணர்கோள், தூண்டல் (induction), கொணர்தல் (தொகுமுறை, பகுமுறை), பகுப்பாய்வு. தொகுப்பாய்வு, கருதுகோள்களையும் கோட்பாடு களையும் உருவாக்கல் ஆகியவற்றின் தொகுப்பே யாகும். சமூகப் பொருளாக்க நடைமுறையிலுள்ள கருத்துக்களும் கருதுகோள்களும் நிலவலுடன் (being) ஒன்றிப் பொருந்தல் உறுதிப்படுத்தப்பட்டால்தான் அவை உண்மையாகின்றன. எனவே, லெனின் கூறியதுபோல், புலன் காட்சியிலிருந்து நுண்சிந் தனைக்கும், நுண்சிந்தனையிலிருந்து நடைமுறைச் செயல்பாட்டுக்கும் உள்ள சுழல் போக்கிலேயே உண்மையை அறிதலின் முரணியக்கப் பாதை அதா வது புறநிலை நிலவுகையின் அறிதல் பாதை அமை கிறது. அறிவின் உண்மை, தனிச் செய்முறையால் மட்டும் சரி பார்க்கப்படுவதில்லை. ஒட்டுமொத்த சமூகப் பொருளாக்கச் செயல்பாடு முழுவதும், அதாவது, முழு சமூகத்தின் இருப்பும், எல்லா வரலாற்றுக் கட்டங்களிலும் அறிவை வரையறுத்து ஆழப்படுத்திச் சோதிக்கிறது. நடைமுறைப் பிழையி லிருந்து புறநிலை உண்மையை வேறுபடுத்தி நமது அறிவின் உண்மையை உறுதிப்படுத்தும் நடைமுறை யும், ஒரு வளர்ந்துவரும் நிகழ்வே ஆகும். எனவே, இது அந்தந்தக் காலக்கட்டப் பொருளாக்கத்தின் சாத்தியக் கூறுகளைப் பொறுத்துக் கட்டுப்படுத்தப் படுகிறது. எனவே, நடைமுறையும் காலத்தைப் பொறுத்து மாறுவதே என்பதால், அதன் வளர்ச்சி அதனால் சோதிக்கப்படும் அறிவை மாறா வறட்டு விதியாக (dogma), அதாவது, மாற்றமே ஏற்காத முற்ற முடிந்த தனிநிலையாக, மாற்றாது (காண்க, உண்மை; சார்பு, முழுநிலை உண்மை). பழமையைப் புரட்சிகரமாக மாற்றிப் புதிய சமூகத்தை அமைப் பதைச் சமூகம், இயற்கை ஆகியவற்றின் வளர்ச்சி விதிகளைப்பற்றிய உண்மையான புறநிலை அறிவைப் பெறாமல் செய்யமுடியாது. அறிபொருள் அறிபொருள் (cognitum) என்பது நடைமுறை மனிதச் செயல்பாட்டு நிகழ்வில் அடங்கியபட்டறிவில்நிலைத்து நின்ற பொருள்களின் கூறுபாடுகள், இயல்புகள், உறவுகள் ஆகியவற்றின் தொகுப்பு. இது குறிப்பிட்ட நிலைமைகளில் அல்லது சூழ்நிலைகளில் ஆயப்படு கிறது. அறியும் பொருளின்பால் அறியப்படும் புறப்- பொருளின் விளைவை முரணியக்கப் பொருள்முதல் வாதம் கருத்திற் கொள்கிறது. அறிபொருளின் அறி தல் செயல்பாட்டின்போது, நடைமுறையின் அடிப் படையிலும், நடைமுறைக்காகவும், நடைமுறையால் சோதிக்கப்பட்டு, ஆயப்படும் பொருள் அறிதலுக்கு உட்படும் பொருளாகிறது. அதாவது, அறியப்படும் பொருளாகிறது. ஆயப்படும் பொருள் முற்றிலும் அறியப்படும் பொருளோடு ஒப்பாகாது. புறப் பொருளின் இயக்கம் அல்லது வளர்ச்சி, அறிதலின்