அறிவியல் கொள்கை 609
மாற்றத்தையும் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது. அதே நேரத்தில் அறிதலின் வளர்ச்சி, அறிதல் செயல் பாட்டின் வளர்ச்சியோடு நிகழ்கிறது. அறிவின் தனித்துறையாக அறிதல் மாறிவிட்டதால், அறிதல் நடைமுறை, செயல்பாட்டுக்கு உட்படும் புறப்பொரு ளிலிருந்து பிரித்துணரப்படுகிறது. அறிவியல் வளர வளர, அறிவியலின் ஆய்பொருள் தன்னை முழுதும், இனங்காட்டத் தொடங்குகிறது. அறிதலின் வளர்ச்சி, அளவையியல், வரலாற்றியல் முறைகளில் முறையே நுண் சிந்தனையிலிருந்து பருநிலைச் சிந்தனைக்கும் பின்னர் மீண்டும் பருநிலையிலிருந்து நுண்ணிலைக் கும் இயங்கும் அறிவின் இயக்கத்தில் எதிர்பலிக்கிறது (காண்க, அளவையியல்; வரலாற்றியல் முறை; நுண் ணிலையும் பருநிலையும்). இந்த அறிவியக்கத்தின் போது, அறிதலும் வளர்கிறது. அறிவியல் அடிப்படை,இயற்கை. சமூக அறிவியல் துறைகளில் கால இடைவெளியில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் திரட்டப்பட்ட முழு அறிவின் தொகுப்பே அறி வியல். இது தொடர்ந்து இயங்கி வளரும் முடிவற்ற அறிதல் நிகழ்வையும் உள்ளடக்கும். அறிதல் இய லின்படி (epistemologically) அறிவியலின் இந்த இரண்டு கூறுபாடுகளும் ஒன்றோடொன்று சார்பு முழுநிலை உண்மையுடனும் உண்மையுடனும் பொருந்தியவையாகும். ஒரு குறிப்பிட்ட காலக் கட் டத்தில் திரண்ட அறிவின் தொகுப்பு, நிலவுகின்ற உலகம் பற்றிய முழுமையான உண்மையை நோக்கிச் எனவே செல்லும் பயணத்தில் ஒரு கணு முனையே. நிலைத் தன்மை இது நிலவும் காலத்துச் சார்பு வாய்ந்ததாகிறது. ஆனால் நாம் கூறிய இயங்கி வளரும் அறிதல் நிகழ்வோ, காலத்திற்கு அப்பாற் பட்ட மேலும் வளர்ந்த முழு அளவு நிலையை நோக் கிச் செய்யும் பயணமாகும். அறிவியல் ஏற்கனவே பெற்ற அறிவை முறைப்படுத்தி அதன் வரம்புகளை அமைக்கிறது. இந்நிலையில் இது சார்பு உண்மை அமைத்ததும் அது யைச் சுட்டும். வரம்புகளை மேலும் அறியவேண்டிய உண்மைகளை அறிதற்கான போக்கையும் அறிவிக்கிறது. இது முழுநிலை அறிவை சுட்டும். எனவே முன்னேற்றத்தைச் நோக்கிய அறிவியலின் இந்த இரு மடிப்பியல்பு. உள்ளுறைந்த முடுக்குகின்ற நிகழ்வாகவும் அந்நிகழ்வின் வேகமாக வும் அமைகிறது. அறிவியல் சரிநிகர் அறிவியல், விளக்க அறிவியல் எனவும், தொகுப்புநிலை அறிவியல், பகுப்பாய்வு அறிவியல் எனவும் பகுக்கப்படுவதுண்டு. கணிதவியல் முறைகளைப் பயன்படுத்த முடிந்த, அளவியலாகத் அ.க-2-39 அறிவியல் கொள்கை 609 துல்லியமாக ஆயமுடிந்த அறிவியல் துறை, சரி நிகர்த் திறத்தையும் பகுப்பாயும் முறைகளையும் கொண்டது. துல்லியமான விளக்கங்களை மட்டும் பயன்படுத்தும் பண்பியலாக வளர்க்கப்பட்ட வியல் துறை, விளக்க அறிவியல் என்றும் தொகுப்பு நிலை அறிவியல் என்றும் வழங்கப்படும். அறி கணிதம், அளவையியல் (logic) ஆகியன உயர் துல்லிய அறிவியலாகும். புறநிலை அறிவியல்கள் (physical sciences) சரிநிகர், பகுப்பாய்வுநிலை அறிவியல்களாகும். உயிரியல், புவியியல் ஆகியன விளக்கநிலை, தொகுப்பு நிலை அறிவியல்களாகும். காண்க, புறநிலை அறிவியல்கள் (physical sciences), அறிவியல் முறையியல். நூலோதி 1. Shanin, Y., Science Policy, Progress Publishers Moscow, 1978. 2. McGraw-Hill Encyclopaedia of Science & Technology, Vol. 12, McGraw-Hill Book, Company, New York, 1977. அறிவியல் கொள்கை ஆராய்ச்சியும் வளர்ச்சியும் ஒட்டுமொத்தச் சமூக அளவினாலான திறமையைப் பெருமமாக்க, நெறிப் படுத்தல், திட்டமிடல், ஒருங்கிணைத்தல், கட்டுபடுத் தல், சீர் செய்தல் ஆகிய செயல்முறைகள் மூலமாக அறிவியல் செயல்பாட்டை மேலாள, அரசு மேற் கொள்ளும் கொள்கை அறிவியல் கொள்கை ஆகும். அறிவியல் ஒரு நாட்டு அரசின் கொள்கை; அரசாளும் சமூக வகுப்பின் (class) செறிவான வெளியீடாகவும், நாட்டுப் பொருளாக்க உறவுகளின் சிறப்பியல்புகளை எதிர்பலிக்கும் அமைப்பாகவும் இது அமையும். உலக முழுவதிலுமான அறிவியல் வளர்ச்சியின் தேவை களை ஒரு நாட்டின் சமூகப்பொருளாக்க நிலைமை கள் அறிவியல் புலத்தில் முழுமையாகக் கட்டுப்படுத்த இயலாதன. எனவே அனைத்துவக மட்டத்தில் அறிவி யலிலும் தொழில்நுட்ப இயலிலும் எல்லா நாடுகளும் ஒன்றுகூடி விவாதித்து அறிவியல் புலம் பற்றிய அறிக்கையை ஒருங்கினணக்க வேண்டிய கட்டாயம் தற்காலத்தே ஏற்பட்டு உள்ளது. இது ஒத்த பொருளா தார அமைப்புடைய நாடுகளில் மட்டுமின்றி இரு வேறியல்புள்ள சமூகப் பொருளாதார நாடுகளையும் கட்டுப்படுத்தும். அறிவியல் கொள்கை நாட்டின் பொருளா