பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/640

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

610 அறிவியல்‌ செயல்பாட்டு ஒருங்கமைப்பு

610 அறிவியல் செயல்பாட்டு ஒருங்கமைப்பு தாரத்தைத் திட்டமிட்டு அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை முடுக்குவதாய் அமையவேண்டும். அறிவியல் கொள்கையின் கருப்பொருள் அறிவியற் செயற்பாடே. அறிவியற் செயற்பாடு என்பது சிக்கலான, இயக்கநிலை வாய்ந்த, திறந்தநிலைச் செய்தி அமைப்பாகும். அறிதல் இயலின்படி (episte- mologically) அறிவியல் செயல்பாடு அறிதலின முன் னேற்றத்திற்கேற்ப அறிவு அமைப்பின் வளர்ச்சியை உறுதி செய்கிறது. சமூகத்தளத்தில் அறிவியல் செயல் பாடு என்பது பொருள்கள் உற்பத்தி, தொண்டுகளின் (services) உற்பத்தியுடன் நிலவுகின்ற தனிச்சமூகப் பொருளாக்கத் துறையாக, அதாவது. செய்திகளை உற்பத்தி செய்யும் துறையாக உடன் நிலவுகிறது. அறிவியல் செயல்பாடு வரலாற்றுத் தளத்தில் வளர்ந்து அலையும் அடிப்படை உள்ளடக்கம் கொண்ட அமைப்பாய் அமைகிறது. அறிவியல் செயல்பாடு தனது தனியான நிகழ்வுக் குள் எளிமையும் சிக்கலும், இடைவிட்ட தன்மையும் தொடர்ச்சியும், உறுதியானதும் நிகழ்தகவுடையதும் ஆகிய பல முரண் இயக்க இயல்பு (dielectical categories) உள்ளடக்கியுள்ளதால் அதனுடைய பண்பை ஆய்வது மிகவும் சிக்கலான தாக அமைகிறது. வகைகளை அறிவியல் செயல்பாட்டின் அடிப்படை ஆய்வு வகைகள், பயன்முறை ஆராய்ச்சியும் வளர்ச்சியுமே. அடிப்படை ஆராய்ச்சியின் நோக்கம் அறிவியல் கண்டுபிடிப்புகளே. நடைமுறையில் அவை தேவையா இல்லையா என்பது முக்கியமன்று. அடிப்படைப் புதிய செய்திகளைப் பெறுவதே இதன் இன்றியமை யாத நோக்கம். இது உயர்நிலை வாய்ந்த நுண்மை யான படைப்பாற்றல் மிக்க செயல்பாடாகும். இது நெடுநாள் தொடர்ந்து நிகழும் படைப்பு நிகழ்வா கும். இதனுடைய பயன் நிகழ்தகவு இயல்புடையது. அடிப்படை ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பின் நிகழ் தகவை ஒவ்வொரு கணத்திலும் கணக்கிட்டால் அது மிகமிகச் சிறியதாகவே இருக்கும். இவற்றின் உறுதி அது நிகழ்த்தும் அறிவியல் அறிஞரின் புகழைப் பொறுத்தே முதலில் நம்பப்படுகிறது. இதற்காக முதலில் ஆகும் செலவு, கண்டுபிடிப்பு வெற்றி பெற்றதும் அது சமூக வளர்ச்சியில் உருவாக்கும் மாற்றத்தால் ஈடு செய்யப்படுகிறது. மேலும் இது அறிவியலையே புரட்சிகரமாக மாற்றி அமைக்கும் தன்மையுடையது. எனவே, அறிவியல் பயன்பாடு களையும் முடுக்கி வளர்க்கும் தன்மை உடையது. அடிப்படை ஆராய்ச்சிக்கான செலவு அதிகமானதாக இருக்கும். பயன்முறை ஆராய்ச்சிக்கான செலவு இதைவிடக் குறைவாகவே இருக்கும். வளர்ச்சிக்கான செலவு அதைவிட மேலும் இருமடங்கு குறைவாக இருக்கும். ஆராய்ச்சியின் இந்த பல்வேறு வகைகளில் செலவிடப்படும் செலவும் அதனால் விளையும் பயனை யும் பற்றிய அளவியலான ஆய்வு மிக இன்றியமை யாததே. குறிப்பிட்ட அடிப்படை ஆராய்ச்சியை நடைமுறையில் பயன்படுத்த முடியுமா என்ற பயன் பாட்டுத் திறமை ஆய்வும் முதன்மையானதே. பயன் முறை ஆராய்ச்சியும் வளர்ச்சியும் அடிப்படை ஆராய்ச்சியின் கண்டுபிடிக்கப்பட்ட அறிவை நடை முறைத் தொழிலகங்களுக்குப் பயன்படுத்துகின்றன. பயன்முறை ஆராய்ச்சி தெளிவான இலக்கும் பயனும் தரக்கூடியது. இது செறிவான உழைப்பை உறிஞ்சு வது. ஆனால் இந்த உழைப்பு சிக்கலற்றதும் எளியது மாகும். பலதரப்பட்ட ஆராய்ச்சியாளர்கள், வளர்ச்சி யாளர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்பர்கள், தொழிலியல் வல்லுநர்கள் அனைவரும் ஒருங் கிணைந்து ஒவ்வொருவருடைய செயலையும் திட்ட மிட்டு ஒவ்வொரு படியாகச் செய்வதால் பயன்முறை ஆராய்ச்சி மிகவும் திட்டமிட்ட செயல்பாடாகும். இங்கு ஆராய்ச்சியாளர் நடைமுறை இலக்கால் கட்டுப்படுத்தப்படுகிறார். பயன்முறை ஆராய்ச்சியின் தந்தா பரப்பும், ஆழமும் ஓர் உடனடி விளைவைத் லும் அடிப்படை ஆராய்ச்சியின் அளவிற்கு இது மிகுந்த பயனைத் தராது. பயன்முறை ஆராய்ச்சியில் செய்யப்படும் செலவு பலன் தராவிட்டால் அது முற்றிலும் வீணாகும். ஆனால் அது போன்ற நிலைமை பெரிதும் நடைமுறையில் ஏற்படுவதில்லை. அடிப்படை ஆராய்ச்சியில், பண்பியலான (quali- tative) ஆய்வு செறிந்திருக்கும். பயன்முறை ஆராய்ச் சியில், அளவியலான (quantitative) முறைகள் செறிந்திருக்கும். அடிப்படை ஆராய்ச்சி, உள, வரலாற்று, தருக்க (logical) நிலைமைகளைச் சார்ந்தது. ஆனால் பயன் முறை ஆராய்ச்சியும் வளர்ச்சியும் நாட்டின் பொரு ளாதார மேலாண்மை நிலைமைகளைப் பொறுத் தமையும். நூலோதி Sheinin, Y., Science Policy, Progress Publishers, Moscow, 1978. அறிவியல் செயல்பாட்டு ஒருங்கமைப்பு அறிவியல் செயல்பாட்டு ஒருங்கமைப்பு அதன் தொடக்க அமைப்பிலிருந்து (initial system) தேவைப்