614 அறிவியல் தொழில்நுட்ப இலக்கியம்
14 அறிவியல் தொழில்நுட்ப இலக்கியம் முறையில் பொத்தாம்பொதுவில் நடப்பனவே. இந்த அறிக்கைகள் பல்வேறுபட்ட கால இடைவெளி களில் இந்தக் கூட்டங்களை நடத்திய நிறுவனங்க ளால் முழுவதுமாகவோ, பகுதியாகவோ திரட்டப் பட்டு வெளியிடப்படுகின்றன. இவை கருத்தரங்கு அமைத்த நிறுவனங்களாகலோ, கருத்தரங்கின் தாய்த் துறை சார்ந்த கழகங்களாலோ, திறமை மிக்க தனி யார்வெளியீட்டகங்களாலோவெளியிடப்படுகின்றன. தொடர்புள்ள காலமுறை இதழ்களுக்கு மிகைநிரப் புக் கட்டுரையாகவோ, நூலாகவோ இவை வெளி பின்னர் வருவதுண்டு. சில நேரங்களில் அலை வெறுமனே துணைநூற் பட்டியலில்குறிக்கப்படுவதுண்டு அல்லது அவற்றின் சுருக்கமான விவரங்கள் அடிக்கடி வேறு கட்டுரைகளில் தரப்படுவதுண்டு. சில சமயங்களில் அவை முன்னரே அச்சடிக்கப்படுவதால் வெளியிடப்படாமலே நின்று விடுவதுண்டு. இவை கருத்தரங்குக்குச் சென்றவர்களுக்கு மட்டுமே கிடைக் கும். அல்லது கட்டுரை எழுதியவர்களுக்கு மட்டுமே கிடைப்பதுண்டு. இத்தகைய கருத்தரங்குகள் தொடர்பான முன் அறிவிப்புகள் அடிக்கடி கால முறை இதழ்களில் ஒழுங்காக வெளி வருகின்றன. ஆய்வுத் தனிநூல்கள் (Research monographs). இவை தனியாக வெளியிடப்படும் மூல ஆராய்ச் சியைச் சார்ந்த அறிக்கைகள் ஆகும். துறை வல்லு நர்களுக்கே புரியக்கூடியவையாகும். அல்லது செந் தரச் சுற்றிதழ்கள் வெளியிட முடியாதவைகளாகவும் இருக்கலாம். ஒவ்வோர் ஆய்வுத் தனி நூலும் தன்னளவில் முழுமையானது. நூலின் ஆசிரியரின் மூலமான வெளியிடப்படாத செய்திகளை வெளி யிடும் முன் அவர் காலத்துக் கோட்பாடற்ற நடை முறைகளைப் பற்றிய சுருக்கமான விவரங்கள் இதில் தரப்படுகின்றன. இவை ஒரு குறிப்பிட்ட துறையில் தனித்தனிப் பகுதிகளுக்காகத் தொடர்ந்து வெளி யிடப்படும் நூல்களாகவும் பல நேரங்களில் உருவா கின்றன. ஆய்வு அறிக்கைகள் (Research reports). ஒரு நாட்டின் அரசு உருவாக்கும் வளர்ச்சித் திட்டங்கள் பற்றிய ஆராய்ச்சி அறிக்கைகள் அறிவியல் தொழில் நுட்ப இலக்கியத்தின் மூல வளங்களாய் அமைந்து விடுகின்றன. இந்த அறிக்கைகள் மிக எளிய இலக் கிய வடிவம் உடையவை. வளர்ச்சித் திட்டத்தின் இடையிடையில் தரப்படும் முன்னேற்ற அறிக்கை களில் விரிவான ஆராய்ச்சிச் செய்திகள் தரப்படுவ தால் திட்டத்தின் முழுமையான ஆராய்ச்சி அறிக்கை களில் எல்லா விவரங்களும் தரப்படுவதில்லை. அவ் வப்போது தரப்படும் முன்னேற்ற அறிக்கைகள் தற் கால மேற்பார்வை அறிக்கைகளாக அமைகின்றன. தற்கால முன்னேற்ற அறிக்கைகளில் முழு ஆராய்ச்சித் திட்டத்திற்கு உதவுகிற செய்திகள் மட்டுமில்லாமல் தளர்த்துகிற செய்திகளும் அடங்கி இருக்கலாம். இந்திய அரசின் கீழ் ஐந்தாண்டுத் திட்டத்தில் உரு வாக்கி ஊக்குவிக்கப்படும் ஆராய்ச்சித் திட்ட அறிக் கைகள் அந்தந்த ஆராய்ச்சி நிறுவனங்களால் வெளி யிடப்படுகின்றன. இந்த அரசின் பல்வேறு அரசுத் துறைகளில் பல்வேறு அறிவியல் தொடர்பான ஆராய்ச்சித் திட்டங்கள் உருவாக்கப்பட்டு அவை நிறைவேற்றப்படும் நிறுவனங்களும் உருவாக்கப்படு கின்றன. இந்த ஆராய்ச்சி அறிக்கைகள் குறிப்பிட்ட ஆராய்ச்சி நிறுவனங்களின் சுற்றிதழ்களிலும் செய்தி இதழ்களிலும் சுருக்கங்களாக வெளியிடப்படு கின்றன. ஆராய்ச்சி முன்அச்சுப் படிவங்கள் (Preprints). 17ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட துறையில் அனைத்துலக மட்டத்தில் ஒன்றுகூடும் அறிஞர்கள் எதிர்கால ஆராய்ச்சித் திட்டங்களுக்கு காக முன்னரே வகுக்கின்ற நெடுநோக்குத் திட்டங் களை இந்த ஆராய்ச்சி முன்அச்சுப் படிவங்கள் விளக்கும். பதிவுரிமை (Patents). தயாரிப்பாளர்களின் பொருள் பதிவுரிமைகள் அவர்கள் கண்டுபிடித்த புதுமைப் புனைவுகளின் விளக்கங்களைக் கொண்டு அமைவதால், இவை அறிவியல் தொழில்நுட்ப இலக் கியத்தின் மூல வளத்தைப் பெருக்குகின்றன. தொழில் நிறுவனங்களாலோ, பொறியாளர்களாலோ, வேதி யியல் அறிஞர்களாலோ இந்தப் பதிவுரிமைகள் அவற்றினுடைய விளக்கங்களுடனும் பயன்பாடு களுடனும் பல இதழ்களில் வெளியிடப்படுகின்றன. இந்தப் பதிவுரிமைகள் அந்தந்த நாட்டுப் பதிவுரிமை அலுவலகங்களில் காலமுறையில் செய்தி இதழ்களா கவோ சுருக்கமான அறிக்கைகளாகவோ வெளியிடப் படுகின்றன. இதற்காகப் பதிவுரிமைச் சட்டம் என ஒரு சட்டம் அனைத்து நாடுகளிலும் நிலவுகிறது. கல்வி ஆய்வுநூல்கள் (Dissertations). இவை கல்லூரிப் பட்டம் தருவதற்காகச் செய்யப்படும் ஆய்வு நூல்கள். வேறு எந்த காலமுறை இதழ்களி லும் வெளி வராத செய்திகளை வை உள்ளடக்கு கின்றன. எனவே இவையும் அறிவியல் தொழில் நுட்ப இலக்கிய முதனிலை மூலங்களாகும். பொருள் உற்பத்தியாளர்களின் இலக்கியம் (Manu- facturers Literature).இந்த வெளியீடுகள் குறிப்பிட்ட பொருள்களின் சிறப்புநிலைச் செய்திகளையும் அவற் றின் வளர்ச்சியையும் அறிய உதவுகின்றன. இந்தச் செய்திகள் வேறு எங்கும் வெளியிடப்படாததால் அறிவியல் தொழில்நுட்ப முதல்நிலை மூலங்களாய் அமைகின்றன. இவற்றிற்கான எடுத்துக்காட்டுகள், தொழில்நுட்பச் செய்தி வெளியீடுகள். தகவல்