616 அறிவியல் தொழில்நுட்ப இலக்கியம்
616 அறிவியல் தொழில்நுட்ப இலக்கியம் யிடப்பட்ட கட்டுரைகளையோ, செய்திக் குறிப்பு களையோ, உள்ளடக்கும். இது ஒவ்வொரு பாடத் திற்கும் அகரவரிசையில் அமைக்கப்படுகிறது. இது வார இதழாகவோ, மாதஇதழாகவோ தொடர்ந்து வெளி வருகின்றது. சில பொருள்சுட்டு வரிசைத் தொகுப்புகள் குறிப்பிட்ட இதழ்களை மட்டும் முழு மையாக வரிசைப்படுத்தி வெளியிட, பிற குறிப் பிட்ட துறை பற்றிய எல்லா இதழ்களிலும் வெளி வரும் செய்திகளைத் தேர்ந்து எடுத்து வெளியிடப்படு வதுண்டு. இது தற்கால ஆய்வுக் கட்டுரைகளைத் தேட உதவும். இவை தற்காலத்தில் கணிபொறி மூலம் தொகுத்து அச்சடித்து வெளியிடப்படுகின்றன. இந்தச் செய்திகள் நாடாக்களிலும் பதிவு செய்து விற்கப்படுகின்றன. கடந்தகால இலக்கியத்தைத் தேடுவதில் இத்தகைய தொகுப்புகளினை இணைத் துத் தைத்துக் கட்டடம் (binding) செய்யப்பட்ட நூல்கள் பெரிதும் உதவுகின்றன. சுருக்கக்குறிப்பு வரிசைத் தொகுப்புகள். இதுவும் ஒரு நடப்புத் துணைநூற்பட்டியலே. சிறப்பான தலைப்புகள், புதிய ஆராய்ச்சித் தனி நூல்கள், அறிக்கைகள், பதிவுரிமைகள் முதனிலை மூல வெளி யீடுகள் ஆகியவற்றைத் தொகுத்து அவற்றின் உட் பொருளைச் சுருக்கித் தொடர்ந்து வெளியிடப்படும் இதழ்களே இவை ஒவ்வோர் இதழிலும் பல்வேறு பாடங்களைப் பற்றிய தலைப்புகளின் சுருக்கக் குறிப் புகள், அறிக்கைகள் ஆகியவை இவற்றில் வெளியா கும். எல்லாச் சுருக்கக் குறிப்பு வரிசைத் தொகுப்பு களும் (Abstract serials) குறிப்பிட்ட துறையில் வெளிவரும் எல்லா இதழ்களிலும் உள்ள முக்கிய மான செய்தியின் சுருக்கக் குறிப்புகளை வரிசைப் படுத்தித்தரும், இந்த இதழ்கள் குறிப்பிட்ட கால முறையில் வெளிவரும். இவற்றினுடைய விரிவான ஓராண்டு அல்லது பல்லாண்டுப் பொருள்சுட்டுத் தலைப்புகள் ஆசிரியர், பாடம் பதிவுரிமை, வாய் பாடு, அறிக்கை எண் ஆகியவற்றை வரிசைப்படுத்து வதுண்டு. ஒரு குறிப்பிட்ட இதழின் செய்தியைச் சுருக்கித் தருவதுடன் தனித்தனி அட்டைகளில் இதே சுருக்கக் குறிப்புகள் அச்சிட்டுத் துறையிட்டு அடுக் கித் தொடர்ந்து வெளியிடப்படுவதுமுண்டு. இப்படி வெளியிடப்படும் அட்டைகள் ஓராண்டுக்கு ஒருமுறை அடுக்கிக் கட்டடம் செய்து நூலாக்கப்படுவதுண்டு. தற்போது இப்பணிக்கு கணிபொறிகளும் நாடாக் களும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தச் சுருக்கக் குறிப்புகளை நுண்படல (microfilm) வடிவிலும் தொகுக்கலாம். இது தலைப்புத் தொகுப்பைவிட சுருக்கத் தொகுப்பு, நடப்பு முதனிலை இலக்கியம் பற்றிய மிகவும் விரிவான செய்தியைத் தரும். இவற் றில் தரப்படும் செய்தியின் அளவும் அதிகமாக இருக் கும். எனவே மிக ஆழ்ந்த ஆராய்ச்சிக்கு இவை பயன் படும். இதன்மூலம் உலகம் முழுவதிலும் நடைபெறும் அறிவியல் முன்னேற்றங்களைத் துறை வாரியாக அறியமுடியும். இவை செய்தி நூலாக மட்டுமின்றித் தற்போதைய நிலையை அறிய உதவும் களஆய்வுக் கான மூலமாகவும் உதவும். கள ஆய்வு வகைகள். கீழுள்ள துணைப்பிரிவு, பார்வை நூல்களைப் பற்றிய கள ஆய்வு வகையினங் களைத் தருகிறது. முத கண்ணோட்டங்கள். கண்ணோட்டங்கள் (reviews) என்பன பொருளாதாரக் கண்ணோட்டத்திற்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட பாடத்தில் வெளியான னிலை இவக்கியத்தைக் கண்ணோட்டமிடும் பாடம் பற்றிய கள ஆய்வு விவரம் ஆகும். சிறந்ததொரு கண்ணோட்டம், நடப்பு இலக்கியத்தைத் திரட்டி செய்திகளைத் தொகுத்து, அவற்றின் ஒட்டுறவை ஆராயும். மேலும் அது ஆராய்ச்சித் தடத்தின் எதிர் கால நெறியைச் சுட்டும். ஓர் உயர்நிலை அல்லது மதிப்பீடு செய்யும் கண்ணோட்டம் குறிப்பிட்ட துறையில் நிகழும் பணிகளின், குறிப்பாக அத்துறை யில் ஏற்பட்டுள்ள வெளியீடுகளின் முழுத் தொகுப்பு ஆகும். கண்ணோட்டம் ஓராண்டில் அல்லது ஒரு கால் ஆண்டில் அல்லது ஒரு மாதத்தில் சார்புடைய கட்டுரைகளின் உறவை ஆய்வதாகவோ முதனிலை மூலப் பாட இதழில் அப்பாடம் பற்றிய வரலாற்று முறை மதிப்பீட்டு ஆய்வாகவோ அமையலாம். கண் ணோட்டத்தில் தரப்படும் பார்வை வரிசைப்பட்டி யலில் மிக விரிவான தெளிவான பாடம் பற்றிய துணை நூல் பட்டியல்களைக் குறிப்பிட்ட காலத்திற்கு வெளியிடும். கண்ணோட்டத்தின் ஒரு குறைபாடு முதனிலை மூலங்கள் வெளிவரக்காலத் தாழ்த்தம் ஏற் படுவதே. மற்றொரு குறைபாடு குறிப்பிட்ட பாடம் பற்றிய தக்க வல்லுநரைக்கண்டுபிடிப்பதாகும். இருந் தாலும் கண்ணோட்டங்கள் அறிவியல் தொழில் நுட்ப இலக்கியத்தில் மிகச்சிறந்த இடத்தை வகித்துக் கொண்டதென அனைவரும் கருதுகின்றனர். தக்க வல்லுநர் கிடைப்பதும் இதழ் வெளியீட்டுத் தாம தத்தைத் தவிர்ப்பதும் அறிவியல் சமுதாயம் முழுவதற் கும் தேவையான அன்றாட கண்ணோட்டங்களை உருவாக்கி வெளியிட வழி வகுக்கும். மூலப்பாடநூல் (Treatise). ஒரு மூலப்பாடநூல் என்பது அது எழுதப்படும் காலத்தில் அப்பாடம் பற்றிய முழுமையான நன்கு தொகுக்கப்பட்ட முறைப் படுத்தப்பட்ட சான்றாதாரம் உடைய ஒருங்கிணைந்த சுருக்கமான நூல் ஆகும். ஒரு குறிப்பிட்ட பாடத் தின் அடிப்படையை அறிய இந்த நூல்கள் உதவும். முன்னேறிய ஆராய்ச்சிக்கு இந்நூல்கள் அடிப்படை உண்மைகள், செய்முறைகள், கோட்பாடுகள், சிறப்பு விளக்கங்கள் ஆகியவற்றைத் தருகின்றன. மேலும், இவற்றின் வளர்ச்சி, ஒட்டுறவு, நம்பகம் ஆகிய