பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திசையில் பிரிகை நடத்தப்படுகிறது. பின்னர் காகி தத்தை 90C திருப்பி, இத்திசையில் இரண்டாவது கரைப்பானைக் கொண்டு பிரிக்கப்படுகிறது. இம் முறை கடினமானதாகத் தோன்றினாலும் மிகவும் துல்லியமானது.

மின்முனைக்கவர்ச்சி முறை (Electrophoresis). மின் கவர்ச்சியின் வழியாகவும் அமினோ அமிலங்களைப் பிரித்தெடுக்கலாம். ஒரு குறிப்பிட்ட ஓH இல் அமினோ அமிலங்களின் மின் தன்மை வேறுபாட்டைப் பொறுத்து இம்முறை அமைகிறது. உதாரணமாக அமினோ அமிலக் கலவை ஒரு பொருத்தமான தாங் கியில் (பொதுவாகக் காகிதத்தில்) பொருத்தப்பட்டுத் தாங்கல் கரைசலினுள் (buffer solution) வைத்து மின் ஊட்டத்திற்கு (clectric field) உட்படுத்தப்படு கிறது. குளுட்டாமிக் அமிலமும், அஸ்ப்பார்ட்டிக் அமிலமும் நடுநிலை pH இல் (neutrai pH), நேர்மின் முனை (anode) நோக்கிச் செல்கின்றன. ஹிஸ்ட்டிடின், கிளைசின் ஆகியவை எதிர்மின்முனை (cathode) நோக்கிச் செல்கின்றன. இதனால் பிரிகை நடைபெறு கிறது.

ஓர் அமினோ அமிலத்தைத் தொகுப்பு முறையில் தயாரிப்பதுதான் மிக எளிதானது. பெர்கின் முறைப் படி (Perkins method ) செறிவான அம்மோனியா வுடன் ஒரு குளோரோ அல்லது புரோமோ அமிலத்தை வினைப்படுத்த அமினோ அமிலம் கிடைக்கிறது.

CICH,COOH + 2NH, - H,NCH, COOH

+ NH,C

உடன் விளையும் அம்மோனியம் குளோரைடு உப்பை அ ரிப் பரிமாற்ற (ion exchange) ரெசின்களைக் கொண்டு பிரித்தெடுத்துவிடலாம்.

ஸ்ட்ரெக்கர் தொகுப்புப்படி (Strecker synthesis) செறிந்த அம்மோனியாவுடன் ஒரு சயனோஹைட் ரினை (cyanohydrine) வினைப்படுத்தி, உடன் அமிலத் தாற் பகுத்தால் அமினோ அமிலத்தைப் பெறலாம்.

HCN HOH HCI NH3 RCHO RCHCN RCHCOOH NH, NH,

நைட்ரோ பதிலீடு செய்யப்பட்ட அமிலங்களைத் தொகுத்தற்குள்ளாக்கி அரோமாட்டிக் அமினோ அமிலங்கள் தயாரிக்கப்படுகின்றன.

பண்புகள். பொதுவாக அமினோ அமிலங்கள் நீரில் எளிதில் கரையக் கூடியவை; ஆல்கஹாலில் சிறி தளவே கரையக்கூடியவை; ஈதரில் கரையா. அமினோ அமிலங்கள் பொதுவாக அதிக உருகுநிலை உடையன.

அமினோ அமிலங்கள் 35

(உருகுநிலை 200°C வெப்பநிலைக்கு மேல் இவை சிதைந்து விடுகின்றன) இவை கிட்டத்தட்ட நடு நிலைச் சேர்மங்கள். இவற்றின் நீர்க் கரைசல்கள் இரு முனை திருப்புத்திறன் (dipole moment) கொண்டவை யாகக் காணப்படுகின்றன. இத்தன்மைக்குக் கீழ்க் கண்ட அமைப்பே காரணமாகும்.

RCHCOO (NH, +

இதற்கு உட்சார்ந்த உப்பு (inner salt) என்று பெயர். உட்சார்ந்த உப்புகள் இருமுனை அயனிகள் (zwitter ions) எனவும் ஈரியல் பகுளிகள் (ampholites) எனவும் அழைக்கப்படுகின்றன.

அமினோ அமிலத்தில் உள்ள அமிலப் பகுதி அவற்றிற்கு அமிலப் பண்புகளைத் தருகின்றது. இதே போன்று அமினோ அமிலத்தில் உள்ள அமினோ தொகுதி காரப் பண்புகளைத் தருகின்றது.

ஒவ்வோர் அமினோ அமிலமும் மின் அழுத்த வேறுபாட்டிற்கு உட்படும்போது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் மூலக்கூறுகள் நிலையாக அசை வின்றி இருக்கும். இத்த நிலை அந்த அமினோ அமி லத்தின் மின்சுமை மாய்நிலை (isoelectric point) எனப்படும். இந்த நிலையில் அமினோ அமிலமானது குறைந்த நிலைப்புத் தன்மை உடையதாகவும் குறைந்த கரைதிறன் உடையதாகவும் காணப்படுகிறது.

கிளைசினைத் தவிர மற்ற அமினோ அமிலங்கள் ஒளி சுழல் தன்மை (optica) activity) உடையன. இதற்குக் காரணம் அவற்றின் மூலக்கூறுகளில் சமச் சீர்மையற்ற (asymmetric or chiral) கரி இருத்தலேயாகும்.

அமினோ அமிலங்களின் வேதியியல் பண்பு களை இரு வகையாகப் பிரிக்கலாம்: அவை, அமிலத் தொகுதியீனால் ஏற்படுகின்ற பண்புகள், அமினோ தொகுதியினால் ஏற்படுகின்ற பண்புகள்.

பேரியம் ஹைட்ராக்சைடு உடனிருக்க அமினோ அமிலங்களைச் வெப்பப்படுத்தினால் கார்பாக்சிலிக் அமிலத் தொகுதியில் உள்ள கார்பன் டை ஆக்சைடு நீக்கப்படுகிறது.

C_NzH,(NH,)COOH ஹிஸ்ட்டிடின்

Ba(OH),

CN,H,NH, + CO, ஹிஸ்ட்டமின்

அமினோ அமில எஸ்ட்டர்கள் ஆல்கஹால்