பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/651

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியல்‌ மொழி 621

உள்ள (probabilistic) பல்வேறு உறுப்புகளும் செயல் பாடுகளும் இணைந்த, பன்மைநிலை வாய்ந்த அமைப் பாக வடிவமைக்கின்றன. காண்க, அறிவியல் செயல் பாட்டு ஒருங்கமைப்பு. அறிவியல் மொழி அறிவியல், புறத்தில் சூழ்ந்துள்ள உலகைக் காணும் போது தமக்குள்ளாக அடங்கிய பொருள்களை நாமறியும் பொருள்களாக மாற்றுகிறது. அறிவியல் புதிய துறைகளில் நுழைந்து தனது வெற்றிகளை மனிதகுலத்தின் பொதுக் கருவிகளாக மாற்றும் போது இது மற்றொரு பணியையும் நிறைவேற்று கிறது. புறஉலகம் பற்றிய காட்சிப் படிமத்தை வரைகிறது. இந்தக் காட்சிப் படிமம் அடுத்த தலை முறையால் மாற்றப்படுகிறது. இது நாகரிகத்தின் சிறப்பியல்புகளில் முதன்மையான ஒன்றாக அமை கிறது. இந்தப் புற உலகம் பற்றிய காட்சி அதா வது இயற்கையைப் பற்றிய மனிதகுலம் திரட்டிய முழுச்செய்திகளும் பல நூல்களிலும் சிறப்பு, ஆய் வுத் தனிநூல்களிலும் பல ஆயிரக்கணக்கான ஆய் ச் சுற்றிதழ்களிலும் அடங்கியுள்ளன. தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்தக் காட்சி மனித குலமுழுமைக்கும் பொதுவானதே தவிர தனிமனித எல்லையில் மட்டும் அமைய முடி யாததாகும். மிக உயரிய கல்விகற்றாரும் முழுக் காட்சியின் ஒரு சிறு சிதிலத்தைத்தான் முழுமையாக அறிந்திருப்பார். பிற எல்லாப் பகுதியையும் பற்றி, அதாவது, அவரது சிறப்புத் துறைக்கு அப்பாற்பட்ட பகுதிபற்றி, மிகத் தோராயமான அறிவைப் பெறுவ தோடு மட்டுமே நிறைவடைய வேண்டிய நிலையில் இருப்பார். புற உலகம் பற்றிய காட்சிப் படிமத்தைப் பெறு வதில் விவரங்களின் அளவு, வரம்பற்றுப் பன்முகத் தன்மை உடையதாய் அமைவது மட்டுமே குறுக்கே நிற்பது இல்லை. அறிவியலில் பல்வேறு சிறப்புநிலை மொழிகள் நிலவுவதும் ஒருதடையாக அமைகிறது. தனித்தனி அறிவியலின் ஆட்சி எல்வைக்குள் இந்த மொழி சிந்தனைக் கட்டுக்கோப்பை உருவாக்கும் செய்தித் தொடர்புச் சாதனமாக அமைகின்றது. தொடர்பற்ற வெளித்துறையில் பணிபுரியும் அறிஞ ருக்கு இந்த மொழி பொருளற்றதாகவே தோன்றும். மிக அணைந்த அருகிலுள்ள துறையில் பணிபுரியும் அறிஞருக்கு இந்த மொழி ஓரளவு மிகவும் தோராய மாகப்புரிந்து கொள்ளக்கூடியதாகும். அறிவியலின் முடிவுகளைப் பொதுமைப்படுத்திப் புற உலகக் காட்சியைப் படிக்க இந்தச் சிறப்புநிலை மொழியி அறிவியல் மொழி 621 லிருந்து அன்றாட இயல்பு (பொது) மொழிக்கு மொழி பெயர்த்தல் மிகவும் கட்டாயமான தேலை யாகும். ஏனெனில், இந்தச் சிறப்பு மொழிகள் அன் றாட மொழியை விட மிக உயர்நிலைக் குறியீட்டு வடிவில் கொண்டவை. இந்த மொழிபெயர்ப்பு மிகவும் அரிது. அறிவி யல் மொழியிலிருந்து, தனிக்கருத்துக்கள் வரையறுக் கப்படாத பட்டறிவைப் பொறுத்து மாற்றம் ஏற்கக் கூடிய மொழிக்கு மொழி பெயர்க்கும்போது, இது மேலும் உறுதிப்படுகிறது. பல்வேறு மக்களின் மன தில் ஏற்படும் புற உலகின் காட்சிப்படிமம் பலவித மானது. இது அவர்கள் செய்திகளைச் செரித்துப் புரிந்து கொள்வதைப் பொறுத்தது மட்டுமல்லாமல் அவரவர்கட்கு ஏற்றபடி தனித்தனி மொழிகளில் செய்திகள் முறைமாற்றப் (coded) படுவதனாலும் இந்நிலைமை விளைகிறது. உயிரியலறிஞரின் உலகக் காட்சியும் இயற்பியலறிஞரின் உலகக்காட்சியும் வெவ்வேறானவையே. ஒரு பொறியாளரின் உலகக் காட்சி வாழ்வியலறிஞரின் காட்சியைவிட எந்திரத் தனமாகவே அமையும். மக்கள் அறிவியல் இலக்கியத்தின் பணி சீரிய அறிவியல் மொழியை அன்றாட நடப்பில் உள்ள தனித்தன்மையான எளிய மொழியில் வெளியிடுவதே. எனவே, இதனால் அறிவியல் அறிஞர்கள் உயர் நிலை அறிவியலின் குறியீட்டு மொழியிலேயே பேசிச் சிந்திக்கின்றனர் எனக்கொள்ள முடியாது. அப்படி அன்று. அறிவியல் விவாதங்களில் நிகழும் வாதங் களைச் சற்றே கேட்டோமானால், மாநாடுகளிலும் கருத்தரங்குகளிலும் படிக்கப்படும் அறிக்கைகளில் சற்றே கவனஞ்செலுத்தினோமானால், இந்தக் கருத் தரங்குகளில் வல்லுநர்கள் பேசுவதைக் கேட்டோ மானால், ஒவ்வோர் அறிவியலின் கிளையும் இரு வகையான மொழிகளை அதாவது, கருக்கான செய்தித் திட்பமான ஒரு மொழியையும், திட்பங் குறைந்த வேகமான செய்தித் தொடர்புக்குத் தேவை யான மற்றொரு எளிய மொழியையும் உருவாக்கு வதைக் கண்டுபிடிப்பது அவ்வளவு அரிய செயலன்று. அந்த இரண்டாம் மொழியில் சிறப்புக்கலைச் சொற்களுடன் அன்றாடச் சொற்களும் அடங்கி இருக்கும். பின்னர் சொன்ன அன்றாட நடைமுறைச் சொற்களை இந்தச் சொற்களுடன் அடிக்கடி பயன் படுத்தல் பெரிய களஞ்சிய அகராதியொன்றிலும் கூடக் காணமுடியாத சிறப்புப் பொருளாழத்தைத் தருகிறது. இங்கு நோக்கவேண்டிய உட்சாரம் என்னவென்றால் கூடுதலாகச் சொல்லின்பால் சுமத் தப்படும் அறிவியல் பொருள் சொல்லின் உணர்வு தூண்டும் தன்மையை அது தராது என்பதே.