பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/653

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியல்‌ வளர்ச்சி 623

அறிவியல் வகைப்பாடு க அறிவியல் துறைகளின் இடையுறவும் அறிவு என்ற அமைப்பிலுள்ள அவற்றின் இருப்பிடமும் சில நெறி முறைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படு கின்றன. இந்த நெறிமுறைகள் பல்வேறு அறிவியல் துறைகளின் முறையையும் அவை ஆயும் புறப்பொருள் களுக்கு இடையில் நிலவும் இணைப்பையும் இயல்பு களையும் எதிர்பலிக்கின்றன. வகைப்பாடு என்பது ஒருங்கிணைப்பு நெறிமுறையில் அமைந்த குறியீட்டு (formal) அமைப்பாக இருக்கலாம். அல்லது ஒன்றுக் கொன்று கீழ்ப்படிதல் நெறிமுறையில் அமைந்த பல மட்டங்களுள்ள முரணியக்க (dielectical) அமைப் பாக இருக்கலாம். ஏங்கல்ஸ் அவரது 'இயற்கையின் முரணியக்கவியல்' (diclectics of nature) என்ற நூலில், செயின்ட்சைமனும் காம்டேயும் ஒரு புறமும் ஹெகல் என்பார் மறுபுறமும் வருத்த, முந்திய ஒரு பக்கஞ் சார்ந்து வரையறுத்த, அறிவியல் வகைப் பாட்டை முரணியக்கவியலாக வளர்த்துப் புறநிலை சார்ந்த முழுமையான வகைப்பாட்டை நோக்கிய போக்கிற்கு வழி வகுத்தார். இவர், அறிவியல் வகைப் பாடு என்பது அந்தந்தத் தனித்தனி அறிவியலால் ஆயப்படும் பொருளினுடைய இயக்கத்தின் வடிவங் களுக்கிடையிலுள்ள உறவுகளையும் மாற்றங் களையும் அவற்றினுடைய வகைகளையும் எதிர்பலிக் கிறது என வரையறுத்தார். இயற்கையிலிருந்து மனி தனுக்கு ஏற்பட்ட மாற்றத்தை, மனிதனின் தோற் றத்தை, உழைப்புக் கோட்பாட்டால் ஏங்கல்ஸ் விளக்கியமை, இயற்கையிலிருந்து மனிதனுக்கும், பின் வரலாற்றுக்கும் ஆன மாற்றத்துக்கும், இதன்படியே, இயற்கை அறிவியல்களிலிருந்து சமூக அறிவியல் களுக்கும் பின் சிந்தனை அறிவியல்களுக்குமான மாற்றத்துக்கும் வழி வகுத்தது. இயக்கவியல் கணித வியலுக்கான மாற்றத்தை உருவாக்கியது. இவர் ஒவ்வொரு பொருள்வகை இயக்கத்திலும் பல தனித் தனி அறிவியல்களுக்கு இடையிலுள்ள மாற்றங் களிலும் மிகுந்த கவனம் செலுத்தினார். இயக்கத் தின் உயர்நிலை வடிவம் என்பதை அதற்கும் அத னினும் கீழ்நிலை வடிவங்களுக்கும் உள்ள இணைப் பையும், உயர்நிலை இயக்க வடிவம் கீழ்நிலை வடி வங்களிலிருந்துதான் சிக்கலுற்று வளர்ந்து தோன்றிய தென்பதையும், மேலும் அது கீழ்நிலை வடிவங் களையும் உள்ளடக்குகின்றது என்பதையும், அறிதல் போக்கில் விளக்கும் நெறிமுறையின் அடிப்படையில் அறிவியல்களிடையேயுள்ள இணைப்பையும் மாற்றத் தையும் விளக்கினார். அறிவியல்களின் பிரிநிலை வேறுபாட்டுப் போக்கு வளரவளர, அதேநேரத்தில், அவற்றின் ஒருமைப்பாடும் வளர்ந்து வருகிறது. ஒன்றாத அறிவியல்களுக்கிடையில் இடைநிலை அறிவியல்களும் பொது அறிவியல் துறைகளும் உரு சமூக அறிவியல் வளர்ச்சி 623 வாகி எல்லாவற்றையும் இணைக்கின்றன. தொழில் நுட்ப அறிவியல்துறைகள் இயற்கை அறிவியல் துறை களுக்கும் சமூக அறிவியல்களுக்கும் இடையில் தோன் றின. கணித அளவையியல் கணிதத்துக்கும் அளவை யியலுக்கும் இடையில் தோன்றியது. உளவியலோ அறிவின் பல பெருந்துறைகளுடன் இணைந்துள்ளது. இயற்கை அறிவியல்கள் விலங்குளவியலாலும், உயர் நரம்புச் செயல்பாட்டுக் கோட்பாட்டாலும், சமூக அறிவியல்கள் மொழியியலாலும் கல்வியியலாலும் உளவியலாலும்,சிந்தனை அறிவியல்கள் அளவையியலாலும் அறிவுக் கோட்பாட்டியலாலும் உளவியலுடன் இணைக்கப்படுகின்றன. பல்வேறு அறிவியல் துறைகளில் இன்று ஆழமாக வேரூன்றிச் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு இருக்கும் தன் ஆள் வியல் (cybernetics) என்பது தொழில்நுட்ப, கணித அறிவியல்களின் ஒருங்கிணைந்த உட்பிரிவாகும் முறை அறிவியல்களான அமைப்புப் பகுப்பாய்வும் (system analysis), படிம உருவாக்கமும் (modelling) இவற்றோடு ஒட்டுறவுடைய அறிவியல்களாகும், அறி வியலின் தற்கால வளர்ச்சி ஏங்கல்ஸின் அறிவியல் வகைப்பாட்டைப் பெரிதும் மாற்றியுள்ளது. முற்றி லும் புதிய நுண்அண்ட அறிவியல் என்பதொன்று தற்காலத்தே உருவாகியுள்ளது ( அணு உள் இயற்பியல், உட்கரு, குவைய இயக்கவியல் ஆகியன). பல இடை நிலை அறிவியல்கள் தோன்றியுள்ளன (உயிர் வேதி யல், உயிர் இயற்பியல், புவி வேதியியல், உயிர் மின் துகளியல் போன்றன). தொல் அறிவியல்கள் பிரிந் துள்ளன. எனவே, தற்கால அறிவியலை நேர்க்கோட் டியல்பால் விளக்க முடியாது; இதைப் பொது, நுண் ணிலை, பருநிலை அறிவியல்களால் அமைந்த, சிறப்பு நிலை அறிவியல்களாகப் பிரிந்த, பல அடுக்கு நிலை களாலான, சிக்கலான அமைப்பாக மட்டுமே விளக்க முடியும். மேலும், எல்லாச் சிறப்புநிலை அறிவியல் களும் முரணியக்கப் பொருள் முதல் வாதம் (dielec- tical materialism) என்னும் பொது அறிவியலால் இணைக்கப்பட்டுள்ளன. அறிவியல் வளர்ச்சி அறிவியலின் வளர்ச்சி இருவித விடுதலைப் போக்கு களைக் கொண்டது. அவற்றில் ஒன்று அறிவிய லுக்குள்ளேயே அமையும் இயல்பான வளர்ச்சி; மற்றொன்று, சமூக வளர்ச்சியால் கட்டுப்படுத்தப் பட்ட அறிவியலின் வளர்ச்சி, அறிவியல் மனிதனால் உருவாக்கப்படுகிறது. மனிதன் சமூகத்தின் ஓர் உறுப்பினன், மனிதன் சமூகத்தில் உறுப்பினனாய் இருப்பதால் முற்றிலும் சமூகத்தால் கட்டுப்படுத்தப்படாமல் விடுதலையாக இயங்குவது அரிது.